Home /News /business /

யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

ராணா கபூர்

ராணா கபூர்

வருகிற ஏப்ரல் 2-ம் தேதி வரையில் ராணா கபூரை நீதிமன்றக் காவலில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூருக்கு ஏப்ரல் 2-ம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    வாராக்கடன் பிரச்னை சிக்கலில் சிக்கி தற்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் யெஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் யெஸ் வங்கியின் துணை நிறுவனர் ராணா கபூர் மீது அமலாக்கத்துறையினர் பண மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கடந்த 7-ம் தேதி கைது செய்யப்பட்ட ராணா கபூருக்கு மற்றொரு புறம் சிபிஐ விசாரணையும் நடைபெற்று வந்தது. தற்போது விசாரணைக் காலத்தை நீட்டித்து வருகிற ஏப்ரல் 2-ம் தேதி வரையில் ராணா கபூரை நீதிமன்றக் காவலில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் பார்க்க: இந்தாண்டு உங்கள் பிஎஃப் பணத்துக்கு 8.5% வட்டி கிடைக்காமல் போகலாம்
    Published by:Rahini M
    First published:

    Tags: Yes Bank

    அடுத்த செய்தி