Home /News /business /

YES BANK : அக்கவுண்ட் பேலன்ஸ் முதல் ஏடிஎம் வரை கட்டணத்தை திருத்திய யெஸ் வங்கி!

YES BANK : அக்கவுண்ட் பேலன்ஸ் முதல் ஏடிஎம் வரை கட்டணத்தை திருத்திய யெஸ் வங்கி!

யெஸ் வங்கி

யெஸ் வங்கி

YES BANK charges :யெஸ் பேங்கின் வெப்சைட்டில் இந்த மாற்றங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தனியார் வங்கியான யெஸ் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் தொடங்கி ஏடிஎம், பணப்பரிவர்த்தனை கட்டணம் என எல்லா வகையான கட்டண முறையிலும் திருத்தம் செய்துள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதலே இந்த புதிய திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. யெஸ் பேங்கின் ஆன்லைனில் இந்த மாற்றங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுக் குறித்து இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

    டெபிட் கார்டு கட்டணங்கள் :

    முதல் ஐந்து பரிவர்த்தனைகளை மாதத்திற்கு கட்டணம் ஏதுமின்றி வழங்குகிறது (நிதி மற்றும் நிதி அல்லாதது), அதன் பிறகு நடக்கும் ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ. 21 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.10. இந்தியாவிற்கு வெளியே உள்ள ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ 120 மற்றும் பேலன்ஸ் விசாரணைக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 20.

    சாமானிய மக்களுக்கும் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு ...எந்த வங்கியில் கிடைக்கும்? முழு விபரம்!

    போதுமான பணம் இல்லாததால் ஏடிஎம் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால், யெஸ் வங்கி ரூ. ஒரு நிகழ்வுக்கு ரூ. 25 விதிக்கிறது. வங்கி கிளை ஏடிஎம் மூலம் கார்டு பின்னை மீண்டும் உருவாக்க யெஸ் பேங்க் ஒரு நிகழ்வுக்கு ரூ 50 கட்டணமாக விதிக்கும்.தொலைந்து போன/திருடப்பட்ட டெபிட் கார்டுகளை மாற்றுவதற்கு ரூ199 கட்டணமாகச் செலுத்த  வேண்டும்.



    RTGS, NEFT, IMPS கட்டணங்கள்:

    கிளை மூலம் RTGS செலுத்துவதற்கு ரூ 2 லட்சம் முதல் ரூ 5 லட்சம் வரையிலான பரிவர்த்தனை தொகைக்கு ரூ. 20 மற்றும் ரூ 5 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனை தொகைக்கு ரூ. 40 கட்டணம்.

    கிளை மூலம் NEFT செலுத்துவதற்கு ரூ 10,000க்கும் குறைவான பரிவர்த்தனை தொகைக்கு ரூ. 2, ரூ 10,000 முதல் ரூ 1 லட்சம் வரையிலான பரிவர்த்தனை தொகைக்கு ரூ 4 கட்டணம்.

    IMPS கட்டணங்கள்: ரூ 1 லட்சம் வரையிலான பரிவர்த்தனை தொகைக்கு ரூ 5 மற்றும் ரூ 1 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான பரிவர்த்தனை தொகைக்கு ரூ 15 கட்டணம் செலுத்த வேண்டும்.



    அக்கவுண்ட் பேலன்ஸ் :



    SA Pro Plus, YES Respect SA (மூத்த குடிமக்களுக்கு), Yes Essence SA (பெண்களுக்கு) இந்த வகையான சேமிப்பு கணக்குகளுக்கு மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ. 25,000 இருக்க வேண்டும். சேமிப்பு கணக்கு PRO இல் ரூ, 1000 பேலன்ஸ், SA / Kisan SA (விவசாயிகளுக்கு) ) கணக்கில் ரூ. 5,000 மற்றும் SA (மைனர்கள்) கணக்கில் ரூ. 2,500 மினிமம் பேலன்ஸாக பராமரிக்க வேண்டும்,

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank accounts, Savings, Yes Bank

    அடுத்த செய்தி