சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்சட் டெபாசிட்களில் சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகள்!

கோப்புப் படம்

கடந்த வருடம் மே மாதத்தில் சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிவித்தன.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாட்டில் அதிதீவிரமாக பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். COVID-19-ன் இரண்டாம் அலையின் தாக்கம் ஈக்விட்டி சந்தைகளையும் பதம் பார்த்து வருவதால், முதலீட்டாளர்கள் தங்கள் அசல் தொகையை (principal amount) இழக்க கூடிய அதிக ஆபத்து உள்ளது. தற்போதைய இக்கட்டான நிலையில் மூத்த குடிமக்களை பொறுத்த வரை, அவர்களுக்கு மாதாந்திர பணப்புழக்கம் மற்றும் அவர்களின் முதலீடுகளிலிருந்து நிலையான வருமானம் தேவைப்பட்டால், பாதுகாப்பானதாக கருதப்படும் நிலையான வைப்புத்தொகையில் (எஃப்.டி- Fixed Deposit) முதலீடு செய்ய வேண்டும்.

வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்த போதிலும், மூத்த குடிமக்களுக்கு 3 ஆண்டு Fixed Deposit-களில் கவர்ச்சிகரமான விகிதங்களை வழங்கும் சில வங்கிகள் இன்னும் உள்ளன. கடந்த வருடம் மே மாதத்தில் சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிவித்தன. இந்த சிறப்பு FD-க்களில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2021 ஆக அறிவித்திருந்தன. ஆனால் தற்போது இது ஜூன் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வைப்பு தொகையைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் போட்டியைக் கருத்தில் கொண்டு, சிறிய தனியார் வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகள் நிலையான வைப்புகளில் விகித அட்டவணையில் முதலிடம் வகிக்கின்றன. இந்த முயற்ச்சியில் சிறிய தனியார் வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகள் அதிக விகிதங்களை வழங்குகின்றன.

Bank Bazaar தொகுத்துள்ள தரவுகளின் படி, சிறிய தனியார் வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டு FD-க்களில் 7.50% வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. முன்னணி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்குவதை ஒப்பிடும் போது மூன்று ஆண்டு FD-க்களில் இந்த வட்டி விகிதங்கள் அதிகம் என்பது இந்த தரவுகளை வைத்து தெரிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக, Yes Bank மூத்த குடிமக்களுக்கு 3 ஆண்டு நிலையான வைப்பு தொகைக்கு(FD) 7.50% ஐ வழங்குகிறது. இதனை தொடர்ந்து 3 ஆண்டு FD திட்டங்களில் DCB வங்கி மற்றும் IndusInd வங்கி முறையே 7.25 சதவீதம் மற்றும் 7.00 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

மூத்த குடிமக்களுக்கான இதே மூன்றாண்டு FD திட்டங்களுக்கு முன்னணி தனியார் வங்கிகளான ஆக்சிஸ் வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கிகள் முறையே 5.9 சதவீதம் மற்றும் 5.6 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி முறையே இதே திட்டத்திற்கு 5.65 சதவீத வட்டியை வழங்குகின்றன. ஆனால் முன்னணி தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது சிறு நிதி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் அதிகமாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கான மூன்றாண்டு FD-க்களில் சூர்யோதே சிறு நிதி வங்கி(Suryoday Small Finance Bank ) 7.50 சதவீதத்தையும், உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி 7.25 சதவீத வட்டியையும் வழங்குகின்றன.

Also read... ஆதார் மோசடிகளை தடுக்க உங்கள் 12 இலக்க UIDAI எண்ணை லாக் மற்றும் அன்லாக் செய்யலாம்? எப்படி?

பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை கனரா வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா சிறந்த வட்டி விகிதங்களை மூத்த குடிமக்களுக்கு வழங்குகின்றன. மேற்கண்ட அதே ஆண்டு FD திட்டத்திற்கு பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 5.8 சதவீத வட்டியை வழங்குகின்றன. பாங்க் ஆஃப் பரோடா 5.60 சதவீத வட்டியை வழங்குகிறது. குறைந்தபட்ச முதலீட்டு தொகை வங்கிகளில் வேறுபடுகிறது. தனியார் மற்றும் சிறு நிதி வங்கிகளில், இந்த தொகை ரூ .1,000 முதல் ரூ .10,000 வரை இருக்கும்.

ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகம் (DICGC) ரூ .5 லட்சம் வரை FD-க்களில் முதலீடு செய்ய உத்தரவாதம் அளிக்கிறது. Fixed Deposit-கள் குறித்த தரவு அந்தந்த வெப்சைட்களில் கொடுக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் 60-80 வயதுடைய மூத்த குடிமக்களுக்கானவை (வைப்புத் தொகை ரூ.1 கோடிக்கு குறைவு ).



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: