யெஸ்பேங்க் மற்றும் டிசிபி வங்கிகள் மூத்தகுடிமக்கள் டெபாசிட் செய்யும் பணத்துக்கு கூடுதல் வட்டியை வழங்குகின்றன.
மூத்த குடிமக்கள் பொதுவாக பணத்துக்கு உத்தரவாதமான டெபாசிட் திட்டங்களை விரும்புகின்றன. ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையை பொருளாதார நெருக்கடி இல்லாமல் கழிக்க விரும்பும் அவர்கள், அதற்காக சிறந்த டெபாசிட் திட்டங்களை தேடி முதலீடு செய்கின்றனர். அதேநேரத்தில் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டியை மாத வருமானமாக அவர்கள் பார்ப்பதால், கூடுதல் வட்டியை வழங்கும் வங்கிகளில் டெபாசிட் செய்வது சிறந்தது. ஈக்விட்டியில் அதிக வருவாய் கிடைத்தாலும், முதலீடு பணத்துக்கு உத்தரவாதம் இல்லாததால், வங்கிகளில் மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்யலாம்.
குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும் தனியார் வங்கிகள் மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்யும் பணத்துக்கு கூடுதல் வட்டிகளை வழங்குகின்றனர். அவர்களுக்காக பிரத்யேக திட்டங்களையும் வகுத்துள்ளனர். கொரோனா காணமாக பொருளாதார இழப்புகள் ஏற்பட்டதால் வங்கிகள் டெபாசிட் பணத்துக்கான வட்டிகளை குறைத்தன. குறிப்பாக, கடந்த ஓராண்டாக வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டியை குறைத்ததால், வங்கிகளும் டெபாசிட் தொகைகளுக்கான வட்டி விகிதங்களை குறைத்தன. இருப்பினும் சில வங்கிகள் முதலீட்டை ஈர்க்கும் வகையில் கூடுதல் வட்டி விதகங்களை டெபாசிட் தொகைக்கு வழங்கி வருகின்றனர்.
யெஸ் பேங்க், டி.சி.பி உள்ளிட்ட தனியார் வங்கிகள் தற்போதும் மூத்த குடிமக்கள் செய்யும் டெபாசிட் பணத்துக்கு கூடுதல் சலுகைகளும் கொடுக்கின்றன. பேங்க் பசார் தளத்தின்படி, மூத்த குடிமக்கள் 3 ஆண்டுகளுக்கு செய்யும் டெபாசிட் தொகைகளுக்கு 7.50 விழுக்காடு வட்டி விகிதங்களை கொடுப்பதாக கூறியுள்ளது. மற்ற பொதுத்துறை மற்றும் தனியார் துறையில் பெரிய வங்கிகள் கொடுக்கும் வட்டியைவிட இந்த வட்டி கூடுதலாக இருப்பதாக பேங்க் பசார் கூறியுள்ளது. யெஸ் பேங்க் வங்கியானது மூத்த குடிமக்கள் செய்யும் 3 ஆண்டுகளுக்கான டெபாசிட் தொகைக்கு 7.50 விழுக்காடு வட்டியை கொடுக்கிறது.
Also read... மார்ச் 31ம் தேதிக்குள் நீங்கள் முடிக்க வேண்டிய நிதி தொடர்பான பணிகள்!
அதற்கடுத்தபடியாக, டிசிபி மற்றும் ஆர்.பி.எல் வங்கிகள் முறையே 7.25 விழுக்காடு மற்றும் 7.10 விழுக்காடு வட்டியை கொடுக்கின்றன. தனியார் துறையில் முன்னணி வங்கிகளாக இருக்கும் ஆக்சிஸ் மற்றும் கோடக்மகேந்திரா வங்கிகள் முறையே 5.9 விழுக்காடு மற்றும் 5.6 விழுக்காடு வட்டியை மட்டுமே கொடுக்கின்றன. மூத்த குடிமக்கள் செய்யும் 3 ஆண்டுகளுக்கான டெபாசிட் தொகைக்கு ஹெச்.டி.எப்.சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் 5.65 விழுக்காடு வட்டியை கொடுக்கின்றன. சிறிய பைனான்ஸ் நிறுவனங்களான ஏயு ஸ்மால் பைன்னான்ஸ், உஜ்ஜீவன் ஆகியவை 7.25 விழுக்காடு வட்டியை மூத்த குடிமக்கள் டெபாசிட்டுக்கு கொடுக்கின்றன.
பொதுத்துறை வங்கிகளில் கனரா வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை 6 விழுக்காடு வட்டியை கொடுக்கின்றன. இந்தியன் வங்கி மற்றும் எஸ்.பி.ஐ வங்கிகள் 5.8 விழுக்காடு வட்டியும், பேங்க் ஆப் பரோடா 5.60 விழுக்காடு வட்டியையும் மூத்த குடிமக்கள் டெபாசிட்டுகளுக்கு கொடுக்கின்றன. 5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் காரண்டி கார்ப்பரேஷன் கீழ் சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன. இந்த தகவல்கள் அனைத்தும் மார்ச் 17 ஆம் தேதி வரை வங்கி இணையதளங்களில் கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வட்டி விகிதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fixed Deposit, Yes Bank