நிதித்துறையில் கால்பதிக்கத் தயாராகும் ஜியோமி..!

கடன் சார்ந்த சேவையைப் பொறுத்தவரையில் Mi க்ரெடிட் சேவை 1 லட்சம் ரூபாய் கடன் தொகையை 1.8 சதவிகித வட்டியில் தர உள்ளது.

நிதித்துறையில் கால்பதிக்கத் தயாராகும் ஜியோமி..!
ஜியோமி
  • News18
  • Last Updated: August 25, 2019, 5:00 PM IST
  • Share this:
நிதி மற்றும் கடன் சார்ந்த துறையைத் தேர்ந்தெடுத்துள்ள ஜியோமி விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் நிதித்துறை சார்ந்த சேவைகள் பெரும் வரவேற்பையும் வளர்ச்சியையும் பெற்று வருகின்றன. இந்த வரிசையில் தனது அடுத்த முயற்சியாக ஜியோமி நிதி மற்றும் கடன் சார்ந்த நுகர்வோர் சேவை நிறுவனம் ஒன்றைத் தொடங்க உள்ளது. உலகளவில் மொபைல் ஃபோன் விற்பனையின் நான்காம் பெரும் நிறுவனமாக தற்போது ஜியோமி உள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் முதலிடத்தில் உள்ள ஜியோமி கடுமையான போட்டிகள் நிலவும் நிதித்துறையைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியாவில் தொடங்கி சர்வதேச அளவில் இதை விரிவாக்கவும் திட்டம் வைத்துள்ள ஜியோமி சீனாவில் ஒரு சிறிய முன்னெடுப்பையும் மேற்கொண்டுள்ளது.


சீன நிறுவனமான ஜியோமிக்கு நிதித்துறையைப் பொறுத்த வரையில் ஆசியா முழுவதுமே கடுமையான போட்டி உள்ளது. ஆசிய வங்கிகள், டெக் ஜாம்பவான்கள், நிதி சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரும் போட்டியாகவே நிற்கின்றன. கடன் சார்ந்த சேவையைப் பொறுத்தவரையில் Mi க்ரெடிட் சேவை 1 லட்சம் ரூபாய் கடன் தொகையை 1.8 சதவிகித வட்டியில் தர உள்ளது. இதுகுறித்த அறிவிப்புகளும் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என ஜியோமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ஃப்ரஷ் காய்கறிகள் இனி உங்கள் வீட்டு வாசலுக்கே வரும்... புதிய சேவையைத் தொடங்கிய அமேசான்!
First published: August 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்