இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் யார் முதலிடம்? சியோமி? சாம்சங்?

news18
Updated: July 26, 2019, 10:29 PM IST
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் யார் முதலிடம்? சியோமி? சாம்சங்?
news18
Updated: July 26, 2019, 10:29 PM IST
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் அண்மை சந்தை மதிப்பு குறித்து அறிக்கையை கவுண்ட்டர் பாயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கவுண்ட்டர் பாயிண்ட் வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2019-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் இந்தியாவில் 37 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன என்று கூறுகிறது.

சீன நிறுவனமான சியோமி 28 சதவீத சந்தை மதிப்புடன் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளது.


தொடர்ந்து சாம்சங் நிறுவனம் 25 சதவீத இந்திய ஸ்மார்ட்போன் சந்தையுடன் 2-ம் இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தை சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ 11 சதவீதத்தை வைத்துள்ளது. சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது விவோ ஒரு சதவீத சந்தை மதிப்பை இழந்துள்ளது.

ஒப்போவின் துணை நிறுவனமான ரியல்மீ அதிரடியாக 9 சதவீதமாகப் பெற்றுள்ளது. சென்ற வருடம் ஒரு சதவீத இந்திய ஸ்மார்ட்போன் சந்தை மட்டுமே ரியல்மீயிடம் இருந்தது.

சென்ற வருடம் 4வது இடத்திலிருந்த ஓப்போ, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 5வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

Loading...

ஹவாய் நிறுவனம் மீது அமெரிக்கா விதித்த வர்த்தக தடையை அடுத்து மிகப் பெரிய அளவில் சந்தையை இழந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து டாப் 10 இடத்தில் ஹவாய் உள்ளது. எனவே தனது இந்திய சந்தையைத் தக்கவைத்துக்கொள்ள மைக்ரோமேக்ஸ் உடன் ஹவாய் கூட்டணி அமைத்துள்ளது.
First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...