ஹோம் /நியூஸ் /வணிகம் /

ரூபாய் நோட்டுகளின்மீது எழுதினால் அவை செல்லாதா..? என்ன சொல்கிறது ஆர்பிஐ..!

ரூபாய் நோட்டுகளின்மீது எழுதினால் அவை செல்லாதா..? என்ன சொல்கிறது ஆர்பிஐ..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உங்களிடம் கசங்கி உள்ள அல்லது கிழிந்த நோட்டுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை வங்கிகளின் கவுண்டர்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் விதி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளின் மேல் கிறுக்குவதும் எழுதுவதும் அவற்றை செல்லாத நோட்டுக்களாக மாற்றிவிடும் என்ற கருத்து நீண்ட காலமாக பலரிடமும் நிலவி வருகிறது. நம்மில் பலரும் இந்த பிரச்சினையை சந்தித்திருப்போம் அல்லது நாமே கூட தெரியாமல் நோட்டுகளில் ஏதேனும் எழுதி பின் அதனை மாற்றுவதற்கு படாதபாடுபட்டிருப்போம். ஆனால் உண்மையிலேயே ரூபாய் நோட்டுகளின் மேல் கிறுக்குவதாலும் எழுவதாலும் அவை செல்லாத காசாக மாறிவிடாது. ஆனாலும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ரூபாய் நோட்டுகளின் மேல் மக்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்துள்ளது. ஏனெனில் ரூபாய் நோட்டுகளில் எழுதும்போது அவை ரூபாய் நோட்டுகளின் வாழ்நாளை குறைத்து விடும்.

எனவே இனி நீங்கள் 2000, 500, 200, 100, 50 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தும்போது அவற்றில் ஏதேனும் கிறுக்கியோ அல்லது எழுதியிருந்தாலும் பயம் கொள்ளாமல் தாராளமாக அவற்றை பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

திடீரென்று இதைப் பற்றிய செய்திகள் அதிகம் வெளிவருவதற்கு காரணம் ரூபாய் நோட்டுகளில் எழுதுவதைப் பற்றி தவறான சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருந்தன. அதன்படி ரூபாய் நோட்டுகளின் மேல் எழுதுவதும் கிறுக்குவதோ அவற்றை செல்லாத காசாக மாறிவிடும் என்று தவறான செய்திகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. அதனை பணப்பரிமாற்றத்திற்கும் அல்லது அதிகாரப்பூர்வமான எந்த ஒரு பரிமாற்றத்திற்கும் பயன்படுத்த முடியாது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாகத்தான் இதனை தெளிவுப்படுத்தும் விதத்தில் பல்வேறு செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன.

என்ன சொல்கிறது ஆர்பிஐ?

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் கிளீன் நோட் பாலிசியின் படி, மக்கள் ரூபாய் நோட்டுகளின் மேல் எதையும் எழுதுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை ரூபாய் நோட்டுகளின் வாழ்நாளை குறைக்க கூடும் என்று கூறியுள்ளது. ஆனால் அவை செல்லாத நோட்டுகளாக மாறிவிடாது.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் கொள்கையின்படி மக்கள் கீழ்க்கண்ட விஷயங்களை ரூபாய் நோட்டுகளில் செய்யக்கூடாது.

* ரூபாய் நோட்டுகளில் ஸ்டேபிளர் பயன்படுத்துவது

* ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி விளையாட்டு பொருட்கள் செய்வது, அலங்காரம் செய்வது, மற்றவர் மேல் ரூபாய் நோட்டுகளை தூவுவது,

* எழுதுவதும் கிறுக்குவது

ஆகியவற்றை செய்யக்கூடாது என ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இதை தவிர உங்களிடம் கசங்கி உள்ள அல்லது கிழிந்த நோட்டுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை வங்கிகளின் கவுண்டர்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் விதி உள்ளது.

இதைத்தவிர ஆர் பி ஐ யின் ஜூலை 1, 2020 ஆம் ஆண்டின் புதிய சுற்றறிக்கையின்படி அனைத்து வங்கிகளும் கீழ்க்கண்ட சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும்.

புதிய தரமான ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.

கசங்கி மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களுக்கு மாற்றி தர வேண்டும்.

பணப்பரிமாற்றத்திற்காக வாடிக்கையாளர்கள் அளிக்கும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே மேலே கூறியுள்ளபடி ரூபாய் நோட்டுகளின் மேல் நீங்கள் கலர் பேனாவைக் கொண்டு எழுதினாலும் கூட அவை செல்லுபடியாகும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

First published:

Tags: Business, Rupee