பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கம் 3.18 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அரசு

உணவு பொருட்களின் மார்ச் மாத மொத்தவிலை பணவீக்கம் 5.68 சதவீதமாக உயர்ந்துள்ளது.

news18
Updated: April 15, 2019, 4:37 PM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கம் 3.18 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அரசு
பணவீக்கம்
news18
Updated: April 15, 2019, 4:37 PM IST
உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் போன்றவை மார்ச் மாதம் விலை உயர்ந்ததால் மொத்தவிலை குறியீடு மீதான பணவீக்கம் 3.18 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.

பிப்ரவரி மாதம் மொத்தவிலை குறியீடு மீதான பணவீக்கம் 2.93 சதவிதமக இருந்தது. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2.74 சதவீதமாக இருந்தது.

மொத்தவிலை சந்தையில் காய்கறிகள் மீதான பணவீக்கம் 28.13 சதவீதமாக உள்ளது. பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 6.82 சதவீதம் அதிகரித்துள்ளது.

உணவுப் பொருட்களின் மார்ச் மாத மொத்தவிலை  பணவீக்கம் 5.68 சதவீதமாக உயர்ந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கம் பிப்ரவரி மாதத்திலிருந்து 2.23 சதவீதத்திலிருந்து மார்ச் மாதம் 5.41 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் ஆர்பிஐ குறைத்துள்ளது. அடுத்த நாணம் கொள்கை கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டு பணவீக்கம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாதம் சில்லறை பணவீக்கம் 2.57 சதவீதத்திலிருந்து 2.86 சதவீதமாக உயர்ந்துள்ளது சென்ற வாரம் வெளியான தரவுகள் கூறுகின்றன.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான சில்லறை பணவீக்கம் 2.9 முதல் 3 சதவீதமாக இருக்கும் என்றும் ஆர்பிஐ கணித்துள்ளது.
Loading...
மேலும் பார்க்க:
First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...