ஹோம் /நியூஸ் /வணிகம் /

2023ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இவ்வளவுதான்.. மற்ற நாடுகள் இன்னும் மோசம்- சர்வதேச நாணய நிதியம் கணிப்பு

2023ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இவ்வளவுதான்.. மற்ற நாடுகள் இன்னும் மோசம்- சர்வதேச நாணய நிதியம் கணிப்பு

சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம்

உலகின் மூன்று பெரிய பொருளாதாரங்கள்-அமெரிக்கா, சீனா மற்றும் யூரோ பகுதி-தொடர்ந்து ஸ்தம்பிக்கும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  2023ம் ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி  குறைக்கக்கூடும் என்றும்.. மோசமான நிலை இனி தான் உள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் ( (IMF-International Monetary Fund) எச்சரித்துள்ளது.

  கொரோனா பரவலுக்கு பின்னர் உலக நாடுகளில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆட்டம் கண்டுள்ளது. அண்டை நாடான இலங்கை கடும்  பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. ரஷ்யா- உக்ரைன் போர் இந்த நிலையை மேலும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில், 2022 மற்றும் 2023ம் ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணிப்பு வெளியிட்டுள்ளது.

  அதன்படி, நடப்பு ஆண்டில் உலக ஜிடிபி 3.2 சதவீதம் வளரும் என்றும்  2023ஆம் ஆண்டில் வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 2022ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8% ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வளர்ந்து வரும் மற்றும் வளரும் பொருளாதாரங்கள் அதிகரித்த வெளிப்புற கடன் செலவுகள், உயர் பணவீக்கம் மற்றும் நிலையற்ற பொருட்கள் சந்தைகளை எதிர்கொள்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  உலகின் மூன்று பெரிய பொருளாதாரங்கள்-அமெரிக்கா, சீனா மற்றும் யூரோ பகுதி-தொடர்ந்து ஸ்தம்பிக்கும். மோசமான நிலை இனிதான் வரவுள்ளது. பலருக்கு, 2023 மந்தநிலையாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

  இதையும் படிங்க: Digital currency : ஆசையும் ஆர்வமும் மட்டும் இருந்தா போதாது.. டிஜிட்டல் கரன்சி பற்றி இதுவும் தெரிஞ்சுக்கோங்க!

  2023ம் ஆண்டை பொறுத்தவரை அமெரிக்கா - 1%, ஜெர்மனி - (-0.3%), பிரான்ஸ் -0.7%, இத்தாலி- (-.02%), ஜப்பான் -1.6%, சீனா-4.4%, இந்தியா- 6.1%, பிரிட்டன் -0.3%, ரஷ்யா-(-2.3%) என்ற அளவில் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா மட்டுமே அதிகபட்சமாக 6.1% வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Economy, IMF, India growth