உலகின் 10 சிறந்த முதலீட்டாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

உலகின் 10 சிறந்த முதலீட்டாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

முதலீட்டாளர்கள்

மிகப் பெரிய முதலீட்டாளர்களில் சிலரின் கடந்து வந்த பாதையை பார்த்தால் அவர்கள் அபாயமான சூழ்நிலையை கடக்க தவறவில்லை என தெளிவாக தெரியும்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பெஜமின் கிரஹாமின் வார்த்தைகளில், 'வெற்றிகரமான முதலீடு என்பது ஆபத்தை தவிர்ப்பது அல்ல, அதை நிர்வகிப்பது பற்றியது' என குறிப்பிட்டுள்ளார். எல்லா காலத்திலும் மிகப் பெரிய முதலீட்டாளர்கள் சிலர் அதற்கு ஆதாரமாக நிற்கிறார்கள். மிகப் பெரிய முதலீட்டாளர்களில் சிலரின் கடந்து வந்த பாதையை பார்த்தால் அவர்கள் அபாயமான சூழ்நிலையை கடக்க தவறவில்லை என தெளிவாக தெரியும். உலகின் 10 சிறந்த முதலீட்டாளர்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

  1. வாரன் பபெட் :

  உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பபெட், "பெர்க்சயர் ஹாதவே" என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இவர் 2008 ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு $62 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளதுஆப்பிள், கோகோ கோலா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் பாங்க் ஆப் அமெரிக்கா போன்ற முக்கிய நிறுவனங்களில் பங்குகளை வைத்திருக்கிறார்

  2. ஜார்ஜ் சொரெஸ் :

  ஹங்கேரிய அமெரிக்கராகப் பிறந்த இவர் பங்கு முதலீட்டாளர், தொழிலதிபர், கொடையாளி மற்றும் அரசியல் ஈடுபாடுடையவர் என அறியப்படுகிறார். 1992ம் ஆண்டு கருப்பு புதன் எனப்படும் யூகே நாட்டின் செலாவணி நெருக்கடியின்போது $1 பில்லியன் அளித்தார். இதனால் இவர் "இங்கிலாந்து வங்கியை முறித்த மனிதர்" என என அழைக்கப்பட்டார். சோரெஸ், சொரெஸ் நிதி மேலாண்மை மற்றும் திறந்த சமுதாய நிறுவனம் ஆகியவற்றின் தலைவரும், வெளி நாட்டு உறவுகள் குழுவின் இயக்குநர் குழுமத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு எண்ணற்ற உதவிகள் செய்துள்ளார்.

  3. கார்ல் இகான் :

  கார்ல் இகான் TWA ஐ கையகப்படுத்தி அதன் பங்கு தரகராக தனது பணியை தொடங்கினார். இவரது நிறுவனம் டெக்சாக்கோ, வெஸ்டர்ன் யூனியன், வளைகுடா & மேற்கு, ரெவ்லான் மற்றும் மார்வெல் காமிக்ஸ் போன்ற நிறுவனங்களில் பங்குகளை வைத்திருக்கிறது. டிரம்ப் ஆலோசகரும், கோடீஸ்வர முதலீட்டாளருமான கார்ல் இகான் இறுதியாக 81 வயதில் ஹாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்தார்.

  4. ஜான் கிளிப்டன் 'ஜாக்' பொக் :

  ஜாக் குறைந்த விலை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக பாராட்டப்பட்ட வான்கார்ட் குழுமத்தின் நிறுவனர் ஆவார். ஒரு எளிய முதலீட்டு மந்திரத்தை பயன்படுத்தி புகழ்பெற்ற புத்தகமான "தி லிட்டில் புக் ஆஃப் காமன் சென்ஸ் இன்வெஸ்டிங்" எழுதினார். இதன் மூலம் இவரது புகழ் உலகெங்கும் பரவியது.

  5.ஜான் டெம்பிள்டன் :

  பரஸ்பர நிதிகளின் முன்னோடியாக அறியப்பட்ட ஜான் டெம்பிள்டன் ஒரு வெற்றிகரமான நபர் ஆவார். பங்குச் சந்தையில் மறைக்கப்பட்ட ரத்தினங்களில் முதலீடு செய்ததன் மூலம் அதிர்ச்சியூட்டும் வெற்றிகளை அடைந்தார். இதனால் மணி பத்திரிகை இவரை நூற்றாண்டின் மிகச்சிறந்த பங்கு சந்தை தேர்வாளராக இவரை அறிவித்தது.

  6. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா :

  இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர். ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகிப்பவர் ஜுன்ஜுன்வாலா. கடந்த 2018ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை புள்ளி விவரங்களின் படி, நாட்டின் 54வது பணக்காரராக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இருந்தார். தனது ஆப்டெக் நிறுவனத்தில் 24% பங்குகளை வைத்துள்ள ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பெரிய நிறுவனங்களிலும் முதலீட்டை பரவலாக செய்து வருகிறார். டாடா பவர் மற்றும் சேசா கோவா போன்ற நிறுவனங்களில் தனது ஆரம்பகால சம்பாத்தியத்தை தொடங்கினார்.

  7. குவோ குவாங் சாங் :

  முதலீட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான குவோ குவாங்சாங் சீனாவின் 'வாரன் பஃபட்' என்று அறியப்பட்டவர். இவர் ரியல் எஸ்டேட்டின் முக்கிய நிறுவனங்களான நாஞ்சிங் இரும்பு மற்றும் எஃகு, ஷாங்காய் ஃபோர்டே லேண்டில் பங்குகளை வைத்திருக்கிறார்.

  8. சுலைமான் கெரிமோவ் :

  ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய கோடிஸ்வரர்களில் சுலைமான் கெரிமோவ்-வும் ஒருவர். இவர் காஸ்ப்ரோம், நாஃப்டா மோஸ்க்வா மற்றும் கோல்ட்மேன் சாச்ஸ் மற்றும் மோர்கன் ஸ்டான்லி ஆகியவற்றில் முதலீடுகள் செய்துள்ளார்.

  Also read... ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு, மார்க்கெட்டிங், பெட்ரோகெமிக்கல்ஸ் O2C வர்த்தகம்: தனி துணை நிறுவனமாகிறது

  9. பீட்டர் லிஞ்ச் :

  அமெரிக்காவில் ஃபிடிலிட்டி இன்ட்வெஸ்ட்மென்ட்ஸில் 1977 முதல் 1990 வரை பல நிலைகளில் பணியாற்றிய சமயத்தில் இவர் நிர்வகித்து வந்த `மெகேலன் ஃபண்ட் (Magellan Fund)’ சராசரியாக ஆண்டுக்கு 29.2% வருமானம் அளித்துவந்தது. இது சந்தைக் குறியீட்டு வருமானத்தைவிட இரண்டு மடங்காகும். இவர் நிர்வாகத்தின்கீழ் இருந்த சொத்தின் மதிப்பு சுமார் 20 மில்லியன் டாலரிலிருந்து 14 பில்லியன் டாலர் அளவுக்கு 13 வருடங்களில் அதிகரித்தது. இதனால் இவர் மிகவும் பிரபலமான, அரிதான ஒரு ஃபண்ட் மேலாளராக நிதி வட்டாரங்களில் போற்றப்பட்டார்.

  10. பெஞ்சமின் கிரஹாம் :

  பெஞ்சமின் கிரஹாம் ஒரு அமெரிக்கப் பொருளியல் நிபுணர் மற்றும் தொழில்முறை முதலீட்டாளர் ஆவார். வாரன் பஃபெட் தனது தந்தைக்குப் பிறகு பெஞ்சமின் கிரஹாம் தான் தன் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நபர் என்று குறிப்பிடுகிறார். கிரஹாம் 1936 மற்றும் 1956க்கு இடையிலான ஆண்தில் 21% வருவாய் ஈட்டினார், அதே நேரத்தில் முதலீடு செய்வதை முதன்மையாக வைத்திருந்தார். மேலும் கிரகாம் தனது மாணவர்கள் பஃபெட் மற்றும் காஃன் ஆகியோர் மீது கொண்டிருந்த பெரு மதிப்பின் காரணமாக தனது இரு மகன்களுக்கும் ஹோவர்டு கிரகாம் பஃபெட் மற்றும் தாமஸ் கிரகாம் காஃன் என்று பெயரிட்டுள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: