வருமான வரிக் கணக்கு தாக்கலில் உலக சாதனை...! ஒரே நாளில் சுமார் 50 லட்சம் பேர் தாக்கல்

2018-19 நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை 5 கோடியே 65 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர்

news18
Updated: September 2, 2019, 12:23 PM IST
வருமான வரிக் கணக்கு தாக்கலில் உலக சாதனை...! ஒரே நாளில் சுமார் 50 லட்சம் பேர் தாக்கல்
வருமான வரி
news18
Updated: September 2, 2019, 12:23 PM IST
நேற்று ஒரே நாளில் 50 லட்சம் பேர் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் வருமான வரி வசூலில் தீவிர கவனம் செலுத்துவடன் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று மட்டும் 49 லட்சத்து 29 ஆயிரத்து 121 பேர் ஆன்லைனில் கணக்குத் தாக்கல் செய்ததாகவும் இது ஓர் உலக சாதனை என்றும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

உச்சபட்சமாக ஒரு மணி நேரத்தில் 3 லட்சத்து 87 ஆயிரம் பேர், ஒரு நிமிடத்துக்கு 7 ஆயிரத்து 447 பேர், நொடிக்கு 196 பேர் என்ற அடிப்படையில் கடைசி நாளில் வேகமாக கணக்குத் தாக்கல் செய்ததும் புதிய சாதனையாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 27 முதல் கடைசி நாளான 31-ம் தேதி வரை மட்டும் ஒரு கோடியே 47 லட்சத்து 82 ஆயிரம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.


மொத்தத்தில் 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை 5 கோடியே 65 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். இதற்கு முந்தைய ஆண்டு 5 கோடியே 42 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்தனர்.

ஆதார் எண்ணுடன், பான்கார்ட் எண்ணை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் அப்படி செய்தால் ரீபண்ட் பணம், உரியவர்களின் கணக்குக்கு தவறாமல் சென்றடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also watch

Loading...

First published: September 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...