பொருளாதார வளர்ச்சி பட்டியலில் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா...!

முதல் இடத்தில் 20.49 டிரில்லியன் டாலருடன் அமெரிக்காவும், 2-வது இடத்தில் 13.61 டிரில்லியன் டாலருடன் சீனாவும் பிடித்துள்ளன.

Web Desk | news18-tamil
Updated: August 2, 2019, 8:19 AM IST
பொருளாதார வளர்ச்சி பட்டியலில் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா...!
பொருளாதார வளர்ச்சி
Web Desk | news18-tamil
Updated: August 2, 2019, 8:19 AM IST
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், இந்தியா 5-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

அதில், 2017-ம் ஆண்டு உலக அளவில் 5-வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் 2018-ம் ஆண்டு 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


2017-ம் ஆண்டு இந்திய பொருளாதாரத்தின் மொத்த மதிப்பு 2.65 டிரில்லியன் டாலருடன், உலக அளவில் 5-வது இடத்தில் இருந்த போது, பிரிட்டன் 2.64 டிரில்லியன் டாலருடன் 6-வது இடத்திலும், 2.59 டிரில்லியன் டாலர் மதிப்புடன் பிரான்ஸ் 7-வது இடத்திலும் இருந்தது.

இந்நிலையில், 2018-ம் ஆண்டுக்கான பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் பிரிட்டன் 5-வது இடத்திற்கும் பிரான்ஸ் 6-வது இடத்திற்கும் முன்னேறி உள்ளது.

2017-ம் ஆண்டு 5-வது இடத்தில் இருந்த இந்தியா உலக பொருளாதார அரங்கில் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

இந்த பட்டியலில், முதல் இடத்தில் 20.49 டிரில்லியன் டாலருடன் அமெரிக்காவும், 2-வது இடத்தில் 13.61 டிரில்லியன் டாலருடன் சீனாவும் பிடித்துள்ளன. 3-வது இடத்தில் 4.97 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ஜப்பானும், 4-வது இடத்தில் 3.99 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ஜெர்மனியும் உள்ளன.

Also watch: நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர்!

First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...