Home /News /business /

உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் : நுகர்வோருக்கு இருக்கும் உரிமைகள் என்னென்ன?

உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் : நுகர்வோருக்கு இருக்கும் உரிமைகள் என்னென்ன?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நுகர்வோருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த பொருளையும் எதிர்த்து கேள்வி கேட்க உரிமை உண்டு.

  • News18
  • Last Updated :
    மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக "உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம்" ஆண்டுதோறும் மார்ச் 15-ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

    இந்தியாவில் 1986 - ல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அன்று முதல் இச்சட்டம் நடைமுறையில் உள்ளது .

    இதன் மூலம் பாதிக்கப்படும் பயனாளிகள் விரைவில் நிவாரணம் பெற நுகர்வோர் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் பயன்பாட்டை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு உதவவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாடெங்கும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. தரக்குறைவான பொருட்கள் விற்பனை, பொய்யான விளம்பரங்கள், பொய்யான உத்தரவாதம் மூலம் விற்பனை செய்வது, இலவச ஏமாற்று அறிவிப்புகள் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, நிவாரணம் பெற வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வுரிமைகள் மக்களுக்கு உணர்த்தவே இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது .



    நுகர்வோருக்கு இந்தியாவில் இருக்கும் உரிமைகள் என்னென்ன என்பதைக் காணலாம்.

    பாதுகாப்பு உரிமை :

    நுகர்வோர் தான் வாங்கும் பொருட்கள் எந்த அளவு பாதுகாப்பனது என்பதைத் தெரிந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார். உதாரணமாக மின்சாதனப் பொருட்களை வாங்கும்போது அதில் பாதிப்புகள் இருக்கிறதா, பழுதுகள் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவேலை அது சரியாக இல்லை என்றாலும் கேள்வி கேட்கும் உரிமை நுகர்வோருக்கு உண்டு. அதேபோல் தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்றாலும் கேள்வி கேட்கலாம். நல்ல பொருளைப் பெற்றுக்கொள்ளவும் உரிமை உண்டு.

    பொருட்களை தேர்ந்தெடுக்கும் உரிமை :

    தனது தேவைக்கு, விருப்பத்திற்கு ஏற்ப பொருட்களை தேர்வு செய்யும் உரிமை நுகர்வோருக்கு உண்டு. அதுவும் நியாயமான , நிர்ணயித்த விலையில் வாங்கும் உரிமை உண்டு. இந்தப் பொருளைதான் வாங்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது.

    நுகர்வோர் தனது உரிமையை அறிந்துகொள்ளும் உரிமை :

    நுகர்வோர்கள் பலருக்கும் அவர்களுக்காக இயற்றப்பட்டிருக்கும் சட்டங்கள் மற்றும் உரிமைகள் பற்றித் தெரிவதில்லை. அவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உரிமை உண்டு. நுகர்வோருக்கு அந்தப் பொருள் சரி, தவறு என சுட்டிக்காட்டவும், போலிகளை நம்பி ஏமாறாதீர்கள் என்றும் ஒரு நுகர்வோரை எச்சரிக்கவும் உரிமை உண்டு.

    தகவல் பெறும் உரிமை :

    நுகர்வோர் ஒரு பொருளை வாங்குகிறார் என்றால் அந்த பொருள் குறித்த விளக்கத்தை அளிக்கக் கூடிய கடமை விற்பனையாளருக்கு உண்டு. நுகர்வோர், வாங்கும் பொருள் குறித்த எந்தக் கேள்விகளைக் கேட்டாலும் அதற்கு பதில் அளிக்கவும் அந்நிறுவனம் கடமைப்பட்டிருக்கிறது.

    பொருட்களை வாக்கியதால் திருப்தி பெரும் உரிமை :

    நுகர்வோர் தான் வாங்கிய பொருளால் முழு திருப்தி பெற வேண்டும். அவ்வாறு இல்லை எனில் அவர்களின் வேலைபாடுகள் குறித்து உடனடியாகக் கேள்வி எழுப்பலாம். உதாரணமாக ஹோட்டலில் சுத்தமான முறையில் உணவு இல்லை, சுகாதாரமற்ற சுற்றுச் சூழல், சுத்தமில்லா உணவு என சமைத்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறார்கள் என்றால் அதுகுறித்து நுகர்வோர் கேள்வி எழுப்பலாம்.

    புகார் அளிக்கும் உரிமை :

    நுகர்வோர் தான் வாங்கிய பொருளில் அந்நிறுவனம் கூறியதற்கு மாறாக இருந்தால் உடனடியாகக் அதுகுறித்த புகாரை கூறலாம். அதை அந்நிறுவனமும் கேட்கவேண்டும். அலட்சியப்படுத்தக்கூடாது. பின் நுகர்வோருக்கு அந்தப் பொருளை வங்கியதால் ஏற்பட்ட நட்டத்தை அந்நிறுவனம் ஈடு செய்ய வேண்டும்.
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: World Consumer day

    அடுத்த செய்தி