கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு எனக் கூறியுள்ள உலக வங்கி, சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி 5.2 சதவீதமாக குறையும் என தெரிவித்துள்ளது.
இது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய சவால் என்றும், பொருளாதாரத்தை மீட்டு கட்டமைப்பதற்கான வழிகளை சர்வதேச சமூகம் கண்டறிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் நடப்பு நிதியாண்டில் 3.2 சதவீதமாக குறையும் என்றும், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சியை எதிர்நோக்கலாம் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.