• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • தமிழ்நாடு உட்பட 6 மாநில அணைகளைப் புதுப்பிக்க ரூ.960 கோடி நிதியளிக்கும் உலக வங்கி!

தமிழ்நாடு உட்பட 6 மாநில அணைகளைப் புதுப்பிக்க ரூ.960 கோடி நிதியளிக்கும் உலக வங்கி!

இடுக்கி அணை

இடுக்கி அணை

2010-ம் ஆண்டு உலக வங்கி இந்தியாவில் உள்ள அணைகளைப் புதுப்பிக்க 2,450 கோடி ரூபாய் நிதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் உள்ள 220-க்கும் மேற்பட்ட அணைகளைப் புதுப்பிக்க உலக வங்கி 960 கோடி ரூபாய் நிதியளிக்க உள்ளது.

    உலக வங்கி அளிக்கும் 960 கோடி ரூபாயும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், ஒதிஷா மற்றும் உத்திரகாண்ட் மாநிலங்களில் உள்ள அணைகளைப் புதுப்பிக்கப் பயன்படுத்தப்பட்ட உள்ளது.

    இந்தியாவில் உள்ள அணைகளைப் பாதுகாப்பாக வலுப்படுத்தும் நோக்கில் கடந்த 2012-ம் ஆண்டு அணைகள் மறுசீரமைப்புத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் கீழ் இந்தியாவில் உள்ள 5,264 அணைகளில் 80 சதவீத அணைகளை மேம்படுத்த 11,000 கோடி ரூபாயை அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

    அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் உள்ள 220-க்கும் மேற்பட்ட அணைகளைப் பழுது பார்க்க மற்றும் புதுப்பிக்க உலக வங்கி 960 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

    இதே போன்று 2010-ம் ஆண்டு உலக வங்கி இந்தியாவில் உள்ள அணைகளைப் புதுப்பிக்க 2,450 கோடி ரூபாய் நிதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பார்க்க: 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: