• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • இந்தியாவுக்கு 100 கோடி டாலர்கள் நிதியுதவி - உலக வங்கி ஒப்புதல்

இந்தியாவுக்கு 100 கோடி டாலர்கள் நிதியுதவி - உலக வங்கி ஒப்புதல்

கோப்புப்படம்

கோப்புப்படம்

World Bank | "சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கப்படும் என்று உலக வங்கி அறிவித்த நிலையில் ஒரு பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது”

  • News18
  • Last Updated :
  • Share this:
    கொரோனாவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்தியாவில் தற்போது வரை சுமார் 81 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா பரவலை தடுக்க 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பல கோடி மக்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கி விட்டனர்.

    இதனை அடுத்து, சுமார் 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. வேளான் துறை, தொழில்துறை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தினமும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

    இந்த நிலையில், இந்தியாவிற்கு உதவும் வகையில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவிக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.  இந்தியாவின் வளர்ச்சி திட்டங்கள், கொரோனா ஒழிப்பு நடவடிக்கை, பொருளாதார மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: