Home /News /business /

மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கும் தொழிலாளர்கள்.. தங்க நகை ஜிஎஸ்டியை குறைக்க கோரிக்கை!

மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கும் தொழிலாளர்கள்.. தங்க நகை ஜிஎஸ்டியை குறைக்க கோரிக்கை!

தங்கம் விலை

தங்கம் விலை

வீடுகளில் பயன்படுத்தாத பழைய தங்கத்தை, பொதுமக்கள் விற்க வரும் போது அதன் மீது 20 சதவீதம் வரி விதிப்பதை தற்காலிகமாக ரத்து செய்யவும் கோரப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை ஒன்றரை சதவீமாகவும், இறக்குமதி வரியை 4 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என்று, தங்க நகை தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் வெளியாகுமான எனவும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    தமிழகத்தின் தொழில் நகராக விளக்கும் கோவை, தங்க நகை தயாரிப்புக்கும் பெயர்பெற்றது. கோவை மாவட்டத்தில் மட்டும் தங்க நகை தயாரிப்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நகை தயாரிப்பு தொழில் முடங்கிய நிலையில், தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

    தங்கம் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதுடன், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கும் போது, டிஜிட்டல் பணபரிவர்த்தனை கட்டாயம் என்பதை 5 லட்சமாக உயர்த்த, தங்க நகை தயாரிப்பாளர் சங்கம் கோரியுள்ளது. இதனால், சிறுக சிறுக பணம் சேர்த்து வைக்கும் எளிய மக்கள் பயனடைவார்கள் என சங்கத்தினர் கூறுகின்றனர்.

    Also read... 5 மாநில தேர்தல்: பேரணி, பிரசாரத்திற்கான தடை ஜனவரி 31வரை நீட்டிப்பு

    மேலும், வீடுகளில் பயன்படுத்தாத பழைய தங்கத்தை, பொதுமக்கள் விற்க வரும் போது அதன் மீது 20 சதவீதம் வரி விதிப்பதை தற்காலிகமாக ரத்து செய்யவும் கோரப்பட்டுள்ளது. இதை அறிவித்தால், இறக்குமதி தங்கத்தின் அளவு குறைந்து, அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கும் எனவும் தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த இரு ஆண்டுகளாக தங்க நகை சிறு வியாபாரிகள், பொற்கொல்லர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொற்கொல்லர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், கோவையில் நகை உற்பத்தி பூங்கா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தொழில்நுட்பம் வளர்ந்தாலும், பொற்கொல்லர்களின் கை வண்ணத்தில் செதுக்கப்படும் தங்க நகைகளே பாரம்பரியத்தையும் பறைசாற்றும் என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் தான் தங்க நகை தொழிலை அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியும் என்பதால், மத்திய அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    Also read... இந்தியாவில் பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Gold, GST, Union Budget 2022

    அடுத்த செய்தி