ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஒரே நேரத்துல இரண்டு சம்பளம்.. மூன்லைட்டிங் விவகாரத்தில் பச்சைக்கொடி காட்டிய இன்போசிஸ்!

ஒரே நேரத்துல இரண்டு சம்பளம்.. மூன்லைட்டிங் விவகாரத்தில் பச்சைக்கொடி காட்டிய இன்போசிஸ்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இன்போசிஸ் நிறுவனம், மூன்லைட்டிங் செய்த 300க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியில் இருந்து நீக்கியது. இதைப் பற்றி ஆதரவான கருத்துக்களும் எதிரான கருத்துகளும் வந்த வண்ணம் இருந்தன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கடந்த சில மாதங்களாக மூன்லைட்டிங் விவகாரம் மிகப்பெரும் அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பணியாளர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

  ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வேலைபார்த்து இரண்டு சம்பளம் வாங்குவதுதான் மூன்லைட்டிங்.

  தகவல் தொழில்நுட்ப துறையின் ஜாம்பவானாகவும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றானதும் இருக்கும் இன்போசிஸ் நிறுவனம். கடந்த சில மாதங்களாகவே மூன்லைட்டிங் எனப்படும், ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வந்தது. கடந்த வாரம் வரையிலும் மூன்லைட்டிங்கை மிக கடுமையாக அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் எதிர்த்து வந்தன. அதிலும் இன்போசிஸ் நிறுவனம், மூன்லைட்டிங் செய்த 300க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியில் இருந்து நீக்கியது. இதைப் பற்றி ஆதரவான கருத்துக்களும் எதிரான கருத்துகளும் வந்த வண்ணம் இருந்தன.

  தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக மூன்லைட்டிங் விவகாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்போசிஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனது பணியாளர்கள் அனைவருக்கும் இமெயில் மூலம் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இன்போசிஸ் பணியாளர்களில் யாருக்கெல்லாம் கூடுதலாக வேலை செய்ய வேண்டும் என தோன்றுகிறதோ அவர்கள் அனைவரும் தன்னுடைய மேலாளரிடமும், மனிதவள மேம்பாட்டு துறையிடமிருந்தும் இருந்து முன்னனுமதி பெற்றுக்கொண்டு மூன்லைட்டிங் செய்யலாம். அதை அலுவலக நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தான் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யப்படும் வேலையானது இன்போசிஸ் நிறுவனத்திற்கோ அல்லது அதன் வாடிக்கையாளர்களுக்கோ போட்டியாக இருக்கக் கூடாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Read More s | செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்!

  இதனால் யாருக்கும் தெரியாமல் இரண்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த பல பணியாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இந்த மூன்லைட்டிங் விவகாரத்தை பற்றி கார்ப்பரேட் நிறுவனங்கள் பல மாதங்களாக பேசி பல்வேறு கருத்துக்களை முன்னிறுத்தி வருகின்றனர். முக்கியமாக பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் பல பணியாளர்களுக்கு ஆரம்ப நிலை நிறுவனங்கள் அதிக சம்பளம் கொடுக்க முன் வருவதினாலும், வேலைப்பளு குறைவாக இருப்பதினாலும் மேலும் பணியாளர்கள் விரும்பும் நேரத்திலேயே அந்த வேலையை செய்ய முடிவதாலும் பலர் இந்த மூன்லைட்டிங்கை செய்து வருகின்றனர். பணியாளர்களின் கூடுதல் வருமானத்திற்கும் அவர்களின் திறன் மேம்பாட்டிற்கும் இது உதவுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

  முக்கியமாக இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் பிரஷர் பிரேம்ஜி, கடந்த சில மாதங்களாக மூன் லைட்டிங் விவகாரத்திற்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தார். மேலும் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே வேறு நிறுவனங்களுக்கு பணியாற்றிய 300க்கும் மேற்பட்ட பணியாளர்களை நேர்மை தவறியதின் அடிப்படையில் பணி நீக்கம் செய்தும் உத்தரவிட்டார். பணியாளர்கள் எவ்வாறு தங்களது நிறுவனத்திற்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதையும், அவ்வாறு நேர்மை தவறும் பட்சத்தில் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கக்கூடிய சலுகைகள் எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி வருகிறார். இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு சரியான விடுவிப்பு கடிதம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் உயர் அதிகாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை நேர்மை தவறியதின் அடிப்படையில் பணிநீக்கம் செய்ய எனக்கு பத்து நிமிடங்கள் கூட எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  Read More : தலைமை பொறுப்புகளுக்கு வாய்ப்பு கிட்டாத பெண்கள்.. அதிர்ச்சி தந்த ஆய்வு முடிவு!

  மூன் லைட்டிங் விவகாரத்தில் இப்படி மிக கடுமையாக இருந்த இன்போசிஸ் நிறுவனம், திடீரென அதற்குஆதரவாக பேசியிருப்பது தான் அனைவருக்கும் ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மூன்லைட்டிங் விவகாரத்தில் அந்நிறுவனம் பல பிரச்சனைகளை சமீப காலமாக சந்தித்து வருகிறது. எனவே இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டவும் பணியாளர்களை அவர்கள் விரும்பும் வேலை செய்வதற்கு அனுமதிப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

  எது எப்படியோ இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த முடிவானது தகவல் தொழில்நுட்பத் துறையில், முக்கியமாக கார்ப்பரேட் உலகத்தில் புதிய முயற்சியாகவும், இதுவே வருங்காலத்தில் ஒரு புதிய ட்ரெண்டாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Infosys, Work