மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act - MGNREGA) என்பது இந்திய அரசின் வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும். 25.05.2005 முதல் இது அமலுக்கு வந்தது. முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இது. கடந்த 2009-ஆம் ஆண்டு காந்தி பிறந்த நாளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தில் இதனை 100 நாள் வேலை திட்டம் என்று குறிப்பிடுகிறோம்.
இந்நிலையில் MG-NREGS திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வேலை நாள்கள் கடந்த 24 மாதங்களில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 171 மில்லியனாக (11.1%) குறைந்துள்ளது. நிதியாண்டின் முதல் மாதத்தில் நிதி விடுவிப்பதில் ஏற்படும் வழக்கமான தாமதம், தனிநபர் நாட்கள் குறைவதற்கும் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். MG-NREGS வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, ஏப்ரல் மாதத்தில் உருவாக்கப்பட்ட பணிகள் முந்தைய மாதத்தை விட 30% மற்றும் முந்தைய ஆண்டை விட 50% குறைந்துள்ளது. இருப்பினும் நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரலில்) தனிநபர்களின் வேலைக்கான தேவை முந்தைய மாதத்தை விட 4% மற்றும் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கும் அதிகமாக இருந்தது.
வீட்டு மட்டத்திலும் வேலைக்கான தேவை முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு இதே மாதத்தில் முறையே 3% மற்றும் 11% குறைந்துள்ளது. ஏப்ரல் 2019-ல், 21 மில்லியன் குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் வேலை கோரி இருந்தன. அதே நேரத்தில் தனிப்பட்ட தேவை 30.3 மில்லியனாக இருந்தது. கோவிட் -19 தொற்றை அடுத்து நாடு தழுவிய லாக்டவுன் போடப்பட்ட முதல் மாதம் என்பதால், கொடுக்கப்பட்டுள்ள டேட்டாக்கள் ஏப்ரல் 2020 உடன் ஒப்பிடப்படவில்லை. லாக்டவுன் காரமணமாக MGNREGA-ன் கீழ் பணிகள் உட்பட அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன. ஏப்ரல் 2020-ல் 13.4 மில்லியன் குடும்பங்கள் வேலை கோரி இருந்த நிலையில், தனிநபர்களிடமிருந்து வேலைக்கான தேவை 20 மில்லியனாக இருந்தது.
மே 3-ஆம் தேதி நிலவரப்படி, நடப்பு நிதியாண்டில் மொத்தம் 170 மில்லியன் நபர்களுக்கான வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் இதுவரை மொத்தம் 13.1 மில்லியன் குடும்பங்கள் மற்றும் 17.4 மில்லியன் தனிநபர்கள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்துள்ளதாக MG-NREGS வழங்கி உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் 'கூலி வேலை' வழங்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் சாராம்சம். கடந்த நிதியாண்டில் சராசரியாக ஒரு கிராமப்புற குடும்பம் 50 நாட்கள் மட்டுமே வேலை பெற்ற நிலையில், நடப்பு நிதியாண்டில் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 13 நாட்களுக்கும் மேலாக இதுவரை வேலை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.