Home /News /business /

கடினமாக உழைக்க வேண்டும் இல்லை என்றால் பணிநீக்கம் - கூகுள் ஊழியர்களுக்கு புதிய அச்சுறுத்தல்.!

கடினமாக உழைக்க வேண்டும் இல்லை என்றால் பணிநீக்கம் - கூகுள் ஊழியர்களுக்கு புதிய அச்சுறுத்தல்.!

Google

Google

Google | கூகுளில் பணியாற்றுபவர்கள் அதிக கவனத்தோடு, கூகுள் தயாரிப்புகளை மேம்படுத்தியும் மிகவும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
கடந்த சில வாரங்களாக உலகின் முன்னணி தொழில்நுட்பம் மற்றும் இகாமர்ஸ் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன என்ற தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஏற்கனவே கூகுள் புதிய வேலை ஆட்கள் சேர்ப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது, அது மட்டும் இல்லாமல், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஏற்கனவே கூகுள் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கூகுளில் பணியாற்றுபவர்கள் அதிக கவனத்தோடு, கூகுள் தயாரிப்புகளை மேம்படுத்தியும் மிகவும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதனை அடுத்து தற்போது வெளியான புதிய அறிக்கையின் படி, கடின உழைப்புக்கு தயாராக இல்லாதவர்கள், நிறுவனத்தின் தேவையை நிறைவேற்ற முடியாதவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படலாம் என்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தான் கூகுள் நிறுவனத் தலைவரான சுந்தர் பிச்சை, வேலை குறைவாக இருக்கிறது ஆனால் ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார். எனவே வாடிக்கையாளர்களுக்கு உதவும் படியும், வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் படியும் தங்களுடைய தயாரிப்புகளை மேம்படுத்தும் அளவுக்கு ஊழியர்கள் உழைக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

இதனை அடுத்து கூகுள் ஊழியர்கள் பணி நீக்க அச்சத்தில் இருப்பதில் தவறில்லை என்பது புரிந்துகொள்ள முடிகிறது.



 

கூகுளின் மேல்நிலை அதிகாரிகள் அடுத்தடுத்து கீழ் நிலையில் இருக்கும் ஊழியர்களுக்கு கடுமையான உத்தரவு வெளியிட்டதாக கூறப்படுகிறது. ஊழியர்களின் வேலை சரியான முடிவுகளை காட்ட வேண்டும் இல்லை என்றால் தெருவில் இறங்கி ரத்தம் வடியப் போராடும் அளவுக்கான விளைவு தான் ஏற்படும் என்று கூறியதாக தகவல் வெளியானது.

Also Read : இந்தியாவின் விதிகளை மீறிய டிவிட்டர் - எலான் மஸ்க் நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்.!

அதாவது ஊழியர்கள் தங்களுடைய செயல்திறனை மேம்படுத்தி நிறுவனம் எதிர்பார்க்கும் ரிசல்ட்டை கொடுக்கவில்லை என்றால் உடனடியாக மூட்டை முடிச்சு கட்டிக் கொண்டு செல்ல வேண்டியதுதான் என்று குறிப்பிட்டதாக கருதப்படுகிறது. எனவே எல்லா ஊழியர்களும் எந்த நேரம் வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்யப்படுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.



பொதுவாக கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களை எந்த காரணத்திற்காகவும் வேலையில் இருந்து நீக்காது என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது நேரடியாக இவ்வாறு கூறப்பட்டது என்ற அறிக்கை வெளியானது அனைவருக்கும் அதிர்ச்சியைஏற்படுத்தி இருக்கிறது.

ஒவ்வொரு காலாண்டு முடிவின் வருவாய் அடிப்படையில் தான் அடுத்தடுத்த திட்டங்களை கூகுள் நிறுவனம் மேற்கொள்ளும். ஆனால் தற்பொழுது வேலை சரியாக செய்யவில்லை என்றால் உடனடியாக பணியில் இருந்து நீக்கக்கூடும் என்பதும் புதிதாக இருக்கிறது.

Also Read : இனி Swiggy ஊழியர்கள் வேறு நிறுவனத்திலும் வேலை செய்யலாம் - மூன்லைட்டிங் பாலிசி அறிமுகம்.!

குறிப்பாக, கூகுள் கிளவுட் விற்பனை பிரிவுதான் இவ்வாறு ஊழியர்களை அச்சுறுத்தி உள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அடுத்த காலாண்டுக்குள் ஒட்டுமொத்த விற்பனை மற்றும் உற்பத்தி திறன் மட்டுமில்லாமல் பொதுவான உற்பத்தி திறன் என்று, அனைத்துமே மேம்பட்டு இருக்க வேண்டும் இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டிருக்கிறது.



இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவென்று யோசிக்கும் பொழுது, கூகுள் நிறுவனத்தில் கடந்த சில மாதமாகவே பிரச்சனைகள் இருந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு நாட்டின் பொருளாதார சூழல் காரணமாக புதிதாக யாரையும் வேலைக்கு சேர்க்கப் போவதில்லை என்று நிறுவனம் புதிய ஆட்களை சேர்ப்பதை நிறுத்தி இருந்தது.. வெளிப்படையாக அதிகாரப்பூர்வமாக நிறுவனத்திடமிருந்து எந்தவிதமான தகவலும் வெளி வராத நிலையில் பிசினஸ் இன்சைடர் வெளியிட்ட இந்த அறிக்கை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருமாறி இருக்கிறது.

Also Read : இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே தொடங்கப்பட்ட 7 நிறுவனங்கள்!

கூகுள் மட்டும்தான் பணியாட்களை கணிசமாக உடனடியாக வெளியேற்றுகிறதா என்று பார்த்தால் இல்லை. நெட்ஃபிலிக்ஸ், அமேசான், மைக்ரோசாப்ட் என்று எல்லா பெரிய நிறுவனங்களுமே ஆயிரக்கணக்கில் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Google, Sundar pichai

அடுத்த செய்தி