ஹோம் /நியூஸ் /வணிகம் /

டி.சி.எஸ். பணியாளர்களுக்கான ஒர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை முடிவுக்கு வருகிறது… அலுவலகத்திற்கு நேரில் வர நிர்வாகம் வலியுறுத்தல்

டி.சி.எஸ். பணியாளர்களுக்கான ஒர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை முடிவுக்கு வருகிறது… அலுவலகத்திற்கு நேரில் வர நிர்வாகம் வலியுறுத்தல்

டி.சி.எஸ்.

டி.சி.எஸ்.

அறிவுறுத்தலை ஏற்காதவல்கள் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி.சி.எஸ். பணியாளர்களுக்கான ஒர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை முடிவுக்கு வரவுள்ளது. பணியாளர்கள் வாரத்திற்கு குறைந்தது 3 நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று நிர்வாகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக டி.சி.எஸ். பணியாளர்களுக்கு அனுப்பப்பட்ட மின் அஞ்சலில் கூறப்பட்டுள்ளதாவது-

  பல்வேறு நிர்வாகிகள் டி.சி.எஸ். அலுவலகத்தில் வேலையை தொடங்கி நடத்தி வருகின்றனர் என்பது நீங்கள் அறிந்ததுதான். தற்போது எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. பெருந்தொற்று காலத்தின்போது நாம் வீட்டில் இருந்து பணியாற்றி வந்தோம்.

  டிசிஎஸ்-ன் பெரிய குழுக்கள் அலுவலகத்தில் வேலைசெய்கின்றனர். அனைவரையும் அலுவலத்திற்கு வரவைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து பணியாளர்களும் வாரத்திற்கு குறைந்தது 3 நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கப்படுகிறது.

  பி.எம். கிசான் திட்டத்தின்கீழ் 12வது தவணை நிதி இம்மாதம் கிடைக்க வாய்ப்பு… ஆன்லைனில் விபரங்களை அறிவது எப்படி?

  யாரெல்லாம் எப்போது வர வேண்டும் என்கிற தகவல் உங்களுக்கு விரைவில் கிடைக்கும். இதுதொடர்பாக நீங்கள் எச்.ஆரை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

  இவ்வாறு அந்த மின் அஞ்சலில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் ஊழியர்கள் இத்தனை நாட்களுக்குள்ளாக அலுவலகம் வர வேண்டும் என்கிற காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால் இந்த அறிவுறுத்தலை ஏற்காதவல்கள் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  EPFO சந்தாரர்களுக்கான நற்செய்தி.. இனி நீங்களும் விரைவில் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம்..!

  இதுகுறித்து டி.சி.எஸ். செய்தி தொடர்பாளர் கூறியதாவது-

  அனைத்து ஊழியர்களும் கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர் அவர்கள் இயங்கிய அடிப்படை இடங்களுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இடமாற்றம் கோரப்பட்ட மற்றும் பெற்ற ஊழியர்கள் மாற்றப்பட்ட இடங்களிலிருந்து செயல்படுவார்கள்.

  அறிவுறுத்தல்களுக்கு இணங்காதது நிர்வாக நடவடிக்கைகளைத் தூண்டக்கூடும் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலில் இடம்பெற்ற பணியாளர்கள் அலுவலகம் வருவதை கடைப்பிடிப்பது கட்டாயம் என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் வருகை கண்காணிக்கப்படும்.

  திட்டத் தேவைகளின் அடிப்படையில் பணி நேரங்கள் மாற்றம் செய்யப்படும். மேலும் புதியவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் கலவையும் இதில் இருக்கும்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  Published by:Musthak
  First published:

  Tags: TCS