நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நாட்டில் கோவிட்-19 பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், வீட்டிலிருந்து வேலை செய்யும் செயல்முறையை முடித்துக் கொண்டு, அனைத்து ஊழியர்களும் தங்கள் அலுவலகங்களுக்குச் செல்லுமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான மத்திய அமைச்சகம் (Union ministry of personnel, public grievances and pensions) ஒரு அறிக்கையின் வழியாக இந்த முடிவை அறிவித்ததையடுத்து, இந்த விதி ஒரு நாளுக்கு முன்னரே அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலான கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தினசரி நோய்த்தொற்றுகள் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் முடிவடைகிறது!
பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான மத்திய அமைச்சகம், பிப்ரவரி 6, கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, பிப்ரவரி 7, திங்கட்கிழமை முதல் 100 சதவீத பணிகளும் அரசு அலுவலகத்திலிருந்து செயல்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை முடிவுக்கு வருகிறது என்று கூறப்பட்டது.
இதுதொடர்பாக பணியாளர் அமைச்சகத்தின் அறிக்கையில் “… இன்று மாலை தொற்றுநோய் நிலைமையை மறுஆய்வு செய்ததாக டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்தார், மேலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சரிவு மற்றும் நேர்மறை விகிதத்தில் சரிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அனைவரும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் நடைமுறை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மட்டங்களிலும் உள்ள பணியாளர்கள், எந்தவித விலக்குமின்றி - பிப்ரவரி 7, 2022 முதல் அமலுக்கு வரும் வகையில் - வழக்கமான அடிப்படையில் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : லோன் ஆஃப் மோசடி.. அந்தரங்க மிரட்டலுக்கு ஆளாகும் இளைஞர்கள் - கதறும் மக்கள்
எவ்வாறாயினும், ஊழியர்கள் எல்லா நேரங்களிலும் முக கவசங்களை அணிவதையும், அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யாவிட்டாலும், கோவிட்-19 க்கு பொருத்தமான நடத்தையை தொடர்ந்து பின்பற்றுவதையும் துறைகளின் தலைவர் உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
இதே முடிவை டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களும் எடுக்குமா?
டிசிஎஸ் உட்பட பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் கடந்த ஜனவரி முதலே தங்கள் அலுவலகங்களைத் திறக்க முடிவு செய்திருந்தன. வொர்க் ஃப்ரம் ஹோம் செயல்முறையை முடித்துக் கொள்ள திட்டமிட்டன. ஆனால் மூன்றாவது அலையைத் தூண்டிய கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு அந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தது.
Also Read : இன்டர்வியூ செய்த நபர் வேறு, வேலைக்கு வந்த நபர் வேறு - திட்டமிட்ட மோசடியா, நிறுவனத்தின் தவறா?
நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) கடந்த டிசம்பரில் அதன் 90 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதாகக் கூறியது. அலுவலகத்திற்குத் திரும்புவதற்கான எந்தவொரு திட்டமும் "அளவுப்படுத்தப்பட்ட நகர்வாக" இருக்கும் என்றும் இந்த ஐடி நிறுவனம் கூறியுள்ளது. அடுத்ததாக உள்ள ஹெச்சிஎல் (HCL) டெக்னாலஜிஸ், ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைப்பதற்கு முன், கோவிட்-19 வகைகளின் தோற்றம் மற்றும் தாக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, காக்னிசென்ட் நிறுவனம், வொர்க் ஃப்ரம் ஹோம் செயல்முறையானது தொடரும் என்று கூறி உள்ளது. மேலும் "எங்கள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், அவர்களின் குடும்பங்கள், எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் எங்கள் சமூகங்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமையாக உள்ளது" என்றும் இந்த நிறுவனம் கூறி உள்ளது.
Also Read : இனிமே வார சம்பளம் தான் - Meesho, India Mart நிறுவனங்கள் அதிரடி..
இன்ஃபோசிஸை பொறுத்தவரை, நாட்டில் மாறிவரும் கோவிட்-19 சூழ்நிலையை மனதில் வைத்து, அலுவலகங்களை மீண்டும் திறப்பதற்கான எச்சரிக்கையான அணுகுமுறையை ஆலோசித்து வருகிறது மற்றும் தற்போதைக்கு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதையே தொடர விரும்புகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central government, TCS, Work From Home