முகப்பு /செய்தி /வணிகம் / பட்ஜெட் 2023: வொர்க் ப்ரம் ஹோம் ஊழியர்கள் கவனத்திற்கு... பட்ஜெட்டில் வருமா நற்செய்தி..?!

பட்ஜெட் 2023: வொர்க் ப்ரம் ஹோம் ஊழியர்கள் கவனத்திற்கு... பட்ஜெட்டில் வருமா நற்செய்தி..?!

WFH ஊழியர்களுக்கு சிறப்பு
அலொவன்ஸ்

WFH ஊழியர்களுக்கு சிறப்பு அலொவன்ஸ்

பட்ஜெட் 2023: வீட்டிலிருந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் வரி சார்ந்த சலுகைகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

  • News18 India
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

நாட்டின் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க உள்ளார். 2024 இல் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் தற்போதைய அரசு தாக்கல் செய்யும்  இறுதி முழு பட்ஜெட் இது தான் . 2024 இல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள் , மாற்றங்கள் வரும் என்று எல்லாத் துறையினரும் காத்துகொண்டு இருக்கின்றனர். முக்கியமாக மிடில் கிளாஸ் மக்கள் தங்கள் வருமான வரி ஸ்லாப் மாற்றப்படுமா என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், வீட்டிலிருந்தே பணிபுரியும் ஊழியர்களுக்கு  allowance வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 2023 பட்ஜெட்டில் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த திட்டம் கொண்டு வரப்பட்டால் பல ஐடி ஊழியர்கள் வருமான வரியில் மிகப்பெரிய சலுகையை பெற வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: கட்டுமானத்தில் இருக்கும் வீட்டை வாங்குபவர்களும் வரிச்சலுகை பெறலாம்.. இதைப் படிங்க..!

வீட்டில் இருந்தபடியே பணிபுரியும் வொர்க் ஃபரம் ஹோம் முறையை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சில நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. ஆனால் 2020 இல் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தபோது பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது பணியை எப்படியாவது தொடர வேண்டும் என்பதற்காக மடிக்கணினிகளை வழங்கி ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யச் சொன்னது.

கொரோனா ஊரடங்கு வாபஸ் பெறப்பட்ட பிறகும் பல நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை தொடர்ந்து அனுமதித்து வருகின்றன. இந்த நிலையில் வீட்டிலிருந்தபடி பணிபுரியும் தொழிலாளர்களுக்கான அலோவன்ஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில்தான் வரும் பட்ஜெட்டில் இந்த திட்டம் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் வீட்டிலிருந்தபடியே நிறுவனங்களுக்காக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக இந்த திட்டத்தின் கீழ் வீட்டிலிருந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் வரி சார்ந்த சலுகைகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வருமான வரி சத்தத்தின் 80c பிரிவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் நம்புகின்றனர்.

இன்ஷூரன்ஸ், கல்வி கட்டணம், வீடு/ மனை வாங்கியது , ப்ரவிடென்ட் பண்ட் உள்ளிட்ட செலவுகளில் 1.5 லட்சம் வரை 80c பிரிவின் கீழ் கழித்துக்கொள்ளலாம். தற்போது வீட்டிலிருந்தே பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறப்பு அலவன்ஸ் வழக்கப்பட்டால் இந்த 1.5 லட்சம் வரம்பு அதிகரிக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Income tax, Union Budget 2023