Home /News /business /

ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க சில எளிய வழிகள்!

ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க சில எளிய வழிகள்!

நிறைய பேர் இப்போது பொழுதுபோக்கிற்காக மட்டும் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்தாமல், அதன் மூலம் வருவாய் ஈட்ட வழிகளை தேடி வருகின்றனர்

நிறைய பேர் இப்போது பொழுதுபோக்கிற்காக மட்டும் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்தாமல், அதன் மூலம் வருவாய் ஈட்ட வழிகளை தேடி வருகின்றனர்

நிறைய பேர் இப்போது பொழுதுபோக்கிற்காக மட்டும் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்தாமல், அதன் மூலம் வருவாய் ஈட்ட வழிகளை தேடி வருகின்றனர்

நம் வாழ்வின் பெரும்பாலான நேரத்தை இன்டர்நெட் ஆக்கிரமித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக இருக்கும் இந்நேரத்தில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உள்ளிட்டவை காரணமாக பலரது பொருளாதார நிலைமை சிக்கலாகி உள்ளது. எனவே நிறைய பேர் இப்போது பொழுதுபோக்கிற்காக மட்டும் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்தாமல், அதன் மூலம் வருவாய் ஈட்ட வழிகளை தேடி வருகின்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரி செல்வோரும் கூட வேலை பார்த்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்த நிலையில், நேரடியாக அவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. Work From Home என்பது ஏற்கனவே அலுவலக பணியில் இருப்போர் மட்டும் செய்ய கூடியது அல்ல. டீனேஜ் பருவத்தில் இருப்போரும் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க மற்றும் மதிப்புமிக்க அனுபவத்தை பெற சிறந்த வழியாகும். டீனேஜ் பருவத்தினர் வீட்டில் இருந்தபடியே சிறந்த வருமானம் மற்றும் வேலை அனுபவத்தை பெற என்னென்ன வழிகள் உள்ளன என்பதை பற்றி பார்ப்போம்.

ஃப்ரீலான்ஸ் வொர்க் (Freelance work):

வாழ்க்கையில் முன்னேற வருமானம் ஈட்டும் சிறந்த முறைகளில் ஒன்று, ஃப்ரீலான்ஸ் வேலையை செய்வது. இது காப்பிரைட்டிங் (copywriting), ட்ரான்சிலேஷன் (translation), கிராஃபிக் டிசைனிங் (graphic designing), வீடியோ என்ஹான்சிங் (video enhancing), ஆப் க்ரோத் அல்லது அட்வர்டைசிங் அன்ட் மார்க்கெட்டிங் ( app growth or advertising and marketing) உள்ளிட்ட பல அடங்கும்.

ALSO READ : பணத்தை சேமிக்க நினைக்கிறீங்களா? Fixed deposit -ஐ விடுங்க.. சூப்பரான இந்த திட்டங்களை தேர்ந்தெடுங்க..

இதெற்கென இந்திய மற்றும் உலகளாவிய அளவில் பல வெப்சைட்கள் உள்ளன. Chegg India, Freelance India, Freelancer, Upwork, Fiverr உள்ளிட்ட ஏராளமான வெப்சைட்கள் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கும் ஃப்ரீலான்ஸ் வேலையே வழங்குகின்றன. இவை இளைஞர்களுக்கு அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப வருமானத்தை பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றன.

இந்த வேலைகளை எப்படி செய்வது?

* ஃப்ரீலான்ஸ் வேலைகளை தரும் வெப்சைட்டுகளுக்கு சென்று உங்கள் பெயர், இமயில், வசிக்கும் நாடு மற்றும் பல தகவல்களை பதிவிட்டு ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். உங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன், உங்கள் கணக்கு உருவாக்கப்படும்.

* பின்னர் நீங்கள் உங்கள் பள்ளிப்படிப்பு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுயவிவரத்தை (profile) உருவாக்க வேண்டும். உங்கள் profile ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ஏற்று கொள்ளப்பட்ட பின், குறிப்பிட்ட வெப்சைட் மூலம் கிடைக்கும் ஃப்ரீலான்ஸ் வேலையை ஏற்க உங்களுக்கு அனுமதி கிடைக்கும்.

* வாடிக்கையாளர்களுடன் நேராக தொடர்பு கொள்வதன் மூலம் நீங்கள் வேலையை எடுத்து செய்வது குறித்து தீர்மானிக்கலாம். நேரடி பரிவர்த்தனைகளை வாய்ப்புகளுடன் அனுமதிப்பவர்களைப் போல அல்லாமல் சில இந்திய வெப்சைட்டுகள் அதன் ஃப்ரீலான்ஸர்களுக்கான கட்டணத்தை உறுதி செய்கின்றன.

ALSO READ : போஸ்ட் ஆபிஸின் Small Savings Schemes-க்கான தற்போதைய வட்டி விகிதம் குறித்த விவரங்கள் இதோ..

* ஒரு மணி நேரம் வேலை செய்தால் இவ்வளவு கட்டணம் என்ற அடிப்படையிலோ அல்லது உங்கள் திறன், படிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியோ சம்பளம் நிர்ணயிக்கப்படலாம். உங்களுக்கான ஊதியம் நீங்கள் கொடுக்கும் வங்கி கணக்கில் செலுத்தப்படும். தேவையான இடத்தில் பேபால்(PayPal) உடன் இணைக்க வேண்டும்.

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர் (Instagram influencer):

இன்ஸ்டாகிராமில் ஒரு பெரிய அளவிலான followers-ஐ கொண்டிருப்பவர்கள் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர் என்றழைக்கப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களைப் பின்பற்றுபவர்கள் அவர்களின் கருத்துக்களை பெரிதும் மதிக்கிறார்கள். சுருக்கமாக சொன்னால் இன்ஸ்டாவில் ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ஆன்லைன் followers கொண்ட ஒரு தனிநபர் இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சர் ஆவார்.

இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி அல்லது வணிகத்தில் உயர் நபர்கள் மற்றும் பிரபலங்களுடன் சேர்ந்து கேமிங், உணவு, ஆரோக்கியம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றில் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு வருவாய் ஈட்டலாம். இன்ஸ்டா பதிவுகள் மற்றும் திரைப்படங்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட போஸ்ட்கள், தயாரிப்பு மதிப்பீடுகள், ஆன்லைனில் சந்தைப்படுத்தல்மற்றும் ஒருவரின் தனிப்பட்ட பொருட்களை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நிறைய சம்பாதிக்க அவர்களுக்கு உதவ கூடும்.

எப்படி செய்வது?

இன்ஸ்டா சென்று உங்களுக்கு ஆர்வமுள்ள அதாவது நீங்கள் ஆர்வமாக இருக்கும் விஷயம், சில வகையான நிபுணத்துவம் அல்லது அனுபவம் பெற்ற ஒரு தலைப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள். தேர்வு செய்யும் தலைப்பிற்கு ஏற்ப உங்கள் சுயவிவரப் படத்தை (profile image ) உருவாக்கவும். உங்கள் நம்பகத்தன்மையை தீர்மானிக்கப் போவதால் சுவாரஸ்யமான பயோவையும் உருவாக்கவும்.

ALSO READ : பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம் - நன்மைகள் என்ன?

உங்கள் வியூவர்களைபகுப்பாய்வு செய்ய, தொடர்பு கொள்ள ஏராளமான சாய்ஸ்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் செட்டிங்ஸ் சென்று உங்கள் இன்ஸ்டா அக்கவுண்ட்டை professional/business அக்கவுண்ட்டாக மாற்றவும். இப்போது பார்வையாளர்களை எல்லா நேரங்களிலும் ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் வகையில் தொடர்ந்து நீங்கள் தேர்வு செய்துள்ள தலைப்பில் போஸ்ட் செய்து கொண்டே இருக்கவும்.

* 10 லட்சம் followers வரை வைத்திருப்போர் மெகா இன்ஃப்ளுயன்சர் ஆவர். இவர்கள் ஒரு போஸ்ட்டிற்கு 3 முதல் 4 லட்சம் வரை கூட வருமானம் ஈட்ட முடியும்.

ப்ளாகிங் / விலாகிங் (Blogging/Vlogging):

சில ஆண்டுகளுக்கு முன் வரை ஒருவரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தளமாக இருந்த ஒன்று, இப்போது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு சிறந்த வழியாக உள்ளது. நீங்கள் ஆர்வமுடன் இருக்கும், நிபுணத்துவம் பெற்ற ஒரு தலைப்பை தேர்வு செய்து அது குறித்து எழுத்தாகவோ அல்லது வீடியோவாகவோ போஸ்ட் செய்வதன் மூலம் வியூவர்ஸ்களை கவர்ந்திழுத்து அதன் மூலம் பணம் ஈட்டும் ஒரு எளிய அற்புதமான வழி இது.

கூகுள் ஆட்ஸன்ஸ் வழியே add placements, இணை சந்தைப்படுத்தல் - affiliate marketing (உங்கள் ப்ளாகில் மற்றவர்களின் தயாரிப்புகளை ஊக்குவித்தல்), தயாரிப்பு ரிவியூ செய்தல், மற்றவர்களின் வலைப்பதிவுகளில் guest posts அல்லது தயாரிப்பு போன்ற யூடியூப்பில் ஒரு வலைப்பதிவு அல்லது விலாக் மூலம் நீங்கள் சம்பாதிக்க பல்வேறு வழிகள் உள்ளன.

எப்படி செய்வது?

வேர்ட்பிரஸ், பிளாகர், டம்ப்ளர், மீடியம், கோஸ்ட், ஸ்கொயர்ஸ்பேஸ் போன்ற பல இலவச பிளாகிங் தளங்கள் உள்ளன. இதிலிருந்து உங்களுக்கு தகுந்த பிளாக்கிங் தளத்தைத் தேர்வுசெய்க. எனினும் இலவச பிளாக்குகள் தனிப்பயனாக்கம் மற்றும் அம்சங்கள் என்று வரும் போது நிறைய தடைகள் உள்ளன. low storage capacity கொண்டவை. ஒரு டொமைன் பெயர் மற்றும் ஹோஸ்டிங் திட்டத்தைத் தேர்வு செய்யவும். வெப் ஹோஸ்டிங் திட்டத்தை வாங்குவது உங்கள் blog-ன் தோற்றம் மற்றும் உணர்வின் மீது முழு கட்டுப்பாட்டை வழங்கும்.

ALSO READ : உங்கள் சேமிப்பை அதிகரிக்க அருமையான 5 வழிகள் இதோ...!

அடுத்து உங்கள் ஆர்வத்திற்கேற்ப ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து அது குறித்து எழுதுவது, தகவல்களை பகிர்வது அல்லது வீடியோக்களை போஸ்ட் செய்வது உள்ளிட்ட செயலில் ஈடுபடுங்கள். இதில் வருமானம் மற்றும் followers பெற கடின உழைப்பு, முயற்சி மற்றும் நேரம் எடுக்கும். விடா முயற்சியுடன் நீங்கள் தொடர்ந்து போஸ்ட் செய்ய வேண்டும் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டும். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ரெடிட் போன்ற அனைத்து சமூக ஊடக தளங்களிலும் உங்கள் blog-ஐ விளம்பரப்படுத்தவும்.

* ஒரு ப்ளாகர் ஒரு மாதத்திற்கு ரூ.20,000-30,000 வரை சம்பாதிக்கலாம். இந்தியாவின் சிறந்த ப்ளாகரான அமித் அகர்வால் ஒரு மாதத்திற்கு ரூ. 44.4 லட்சம் சம்பாதிக்கிறார்.

ஆன்லைன் சர்வேஸ் (online surveys)

டீனேஜ் பருவத்தினருக்குபணம் சம்பாதிப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று இந்த ஆன்லைன் சர்வே. இதற்கு ஸ்வாக்பக்ஸ் (Swagbucks) மிகவும் பிரபலமான வெப்சைட்களில் ஒன்றாகும், மேலும் கணக்கெடுப்புகளை நிரப்புதல் (filling out surveys), வீடியோக்களைப் பார்ப்பது மற்றும் ஷாப்பிங் போன்ற பல செயல்களில் ஈடுபடும் யூசர்களுக்கு பணம் செலுத்துகிறது.

Toluna, Telly Pulse, CashCrate (கணக்கெடுப்பு தளங்களின் ஒருங்கிணைப்பாளர்), ValuedOpinions, OpinionBureau, Streetbees போன்றவை சர்வேஸ்களை வழங்கும் பிற தளங்களில் சில. ஒவ்வொரு தளமும் பொதுவாக ஒரு மாதத்தில் ஒரு நபர் முயற்சிக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சர்வேக்களை கொண்டுள்ளது.

எப்படி செய்வது?

உங்களது அடிப்படை தனிப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் குறிப்பிட்ட சர்வே வெப்சைட்டில் பதிவு செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்காக ஒரு அக்கவுண்ட் உருவாக்கப்படும். பின்னர் கணக்கெடுப்புகள் (surveys) பதிவு செய்யப்பட்ட இ மெயில் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும். உங்களால் முடிந்தவரை பல கணக்கெடுப்புகளை நிரப்பவும், அதற்கான புள்ளிகள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். நீங்கள் விரும்பும்போது இவற்றை பணமாக மாற்றி கொள்ளுங்கள்.

ALSO READ  : பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பொருளாதார சேமிப்புகள் , நிதி ஆலோசனைகள்

* நீங்கள் வழக்கமாக பெறும் பாயிண்ட்ஸ்கள் செக் வழியாக அல்லது கிஃப்ட் வவுச்சர்கள் மற்றும் அட்டைகள் மூலம் பண வடிவத்தில் (பேபால்) மீட்டெடுக்கப்படலாம். நீங்கள் வாரத்திற்கு ரூ.1,000-2,000 சம்பாதிக்கலாம். நன்றாக சம்பாதிக்க குறைந்தது 8-10 தளங்கள் அல்லது apps-களில் பதிவு செய்து இதனை செய்ய வேண்டும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Covid-19, Instagram, Work From Home

அடுத்த செய்தி