Home /News /business /

பிட்காயினை விரும்பும் பெண்கள்.. Shiba Inu கிரிப்டோகரன்சியை விரும்பும் ஆண்கள் - WazirX ஆய்வில் தகவல்

பிட்காயினை விரும்பும் பெண்கள்.. Shiba Inu கிரிப்டோகரன்சியை விரும்பும் ஆண்கள் - WazirX ஆய்வில் தகவல்

shiba inu and bitcoin

shiba inu and bitcoin

பெண்கள் Bitcoin-லும், ஆண்கள் Shiba Inu என்ற கிரிப்டோவில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். WazirX-ன் வாடிக்கையாளர்களில் 66% பேர் 35 வயதிற்கு குறைவானவர்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கிரிப்டோ கரன்சி பயன்பாட்டினை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய அரசு முயன்று கொண்டிருக்கும் வேளையில், இந்தியர்கள் ஒரு பக்கம் கிரிப்டோவில் பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறார்கள், மக்களின் ஒட்டுமொத்த முதலீடுகளில் கிரிப்டோ கரன்சிக்களின் பங்கு அதிகரித்து வருகிறது என்பதை நாட்டின் மிகப்பெரிய கிரிப்டோ நிறுவனமான WazirX-ன் அறிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறது.

    ‘2021 கிரிப்டோ ஆண்டு - சிறப்பம்சங்கள் & அனுமானங்கள்’ என்ற பெயரிலான WazirX வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கிரிப்டோ பயனர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    Binance நிறுவன ஆதரவு பெற்ற பெங்களூருவைச் சார்ந்த கிரிப்டோ எக்ஸ்சேஞ்சான WazirX தெரிவித்திருப்பதாவது,
    “பணவீக்கத்திற்கு எதிராக தங்கள் பாரம்பரிய முதலீடுகளை பாதுகாக்க அதிகமான மக்கள் கிரிப்டோவை நம்பியுள்ளனர். WazirX, 2021-ல் சாதனை அளவாக 43 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வர்த்தகத்தை தொட்டிருக்கிறது. மேலும் இந்த ஆண்டில் கடந்த நவம்பர் மாத வாக்கில் எங்களின் வாடிக்கையாளர் வட்டம் 10 மில்லியனை கடந்திருக்கிறது. ஆனால் இதுவே கடந்த ஆண்டு நவம்பரில் வெறும் ஒரு மில்லியன் என்ற அளவில் இருந்தது.

    இதையும் படிங்க:  ‘தடுக்க முடியலைனா பாலியல் வன்புணர்வை என்ஜாய் பன்னுங்க’ - காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை

    மக்கள் கிரிப்டோவை மதிப்புமிக்க ஒரு மாற்று முதலீடாக கருதத் தொடங்கியிருக்கின்றனர். Bitcoin (BTC), Tether (USDT), Shiba Inu (SHIB), Dogecoin (DOGE), WazirX Token (WRX), and Matic (MATIC) போன்ற கிரிப்டோக்கள் எங்கள் எக்ஸ்சேஞ்சில் அதிக வர்த்தமாகும் கிரிப்டோக்களாக உள்ளன. கிரிப்டோகரன்சிக்களில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் ஈடுபாடாக முதலீடு செய்து வருவது தெரியவந்திருக்கிறது. புதிய பயனர்களை பொருத்தமட்டில் பெண்களின் எண்ணிக்கை 1009% அதிகரித்திருப்பதாகவும், பெண்களின் எண்ணிக்கை 829% உயர்ந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக பெண்கள் Bitcoin-லும், ஆண்கள் Shiba Inu என்ற கிரிப்டோவில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். WazirX-ன் வாடிக்கையாளர்களில் 66% பேர் 35 வயதிற்கு குறைவானவர்கள். மேலும் மெட்ரோ நகரங்கள், முதல் நிலை நகரங்களை கடந்து இரண்டாம் நிலை, ஊரக பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கிரிப்டோவில் அதிகளவில் ஈடுபாடு காட்டிவருகின்றனர்.” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க:   காதலியின் கணவரிடம் இருந்து தப்ப 5வது மாடியில் இருந்து குதித்த இளைஞர் மரணம்

    WazirX நிறுவன தலைமை செயல் அதிகாரியான நிஷல் ஷெட்டி கூறுகையில், “பயனர்கள் கிரிப்டோவை வளர்ந்து வரும் மாற்று சொத்து வகுப்பாக அங்கீகரிக்கின்றனர். கிரிப்டோவிற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறையை நோக்கிய அரசாங்கத்தின் உத்வேகம், கிரிப்டோவில் கையாளும் பிற வளர்ந்த நாடுகளுடன் இந்தியாவை உலக வரைபடத்தில் நிலைநிறுத்தும். இது, கிரிப்டோவில் வலுவான நிறுவன பங்கேற்புடன் இணைந்து, இந்தியாவில் இந்த பிரபலமான சொத்து வகுப்பின் எதிர்காலத்தை வகுத்து, ஆத்மநிர்பர் பாரத் ஆக நமக்கு உதவும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரிப்டோ ஒழுங்குமுறை மசோதா பாராளுமன்றத்தில் தற்போதைக்கு அறிமுகப்படுத்தப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Published by:Arun
    First published:

    Tags: Bitcoin

    அடுத்த செய்தி