நீங்கள் விரும்பும் சுயதொழிலை செய்து ஜெயித்து காட்ட வேண்டிய நேரம் இதோ வந்துவிட்டது. ரூ.3 லட்சம் வரை கடனுதவி பெற்று நிமிர்ந்து நில்லுங்கள்.
ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை எனலாம். உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் பெண்கள் தினம் தினம் போராட்டங்களை எதிர்கொண்டு ஜெயித்து வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்துக்கு வயது, அடையாளம், குடும்பம் எதுவும் ஒரு தடையில்லை என்பதை இந்த நாட்டிற்கு உணர்த்திய பெண்கள் இங்கு ஏராளம், அதே போல் அரசாங்கமும் பெண்களின் வளர்ச்சிக்கு பெருமளவில் பங்காற்றுகிறது.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் அவளின் மொத்த சன்னதியும் படித்துவிடும் என்பார்கள். அந்த அளவுக்கு பெண் ஆனவள் தனது அறிவை தனக்குள்ளே பூட்டி வைக்காமல் முடிந்த வரை மற்றவர்களுக்கு கற்பிப்பாள். தொழில் துறையிலும் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது, இன்றோ எத்தனையோ பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ-களாக இந்திய பெண்கள் தேர்வாகி ஒட்டுமொத்த நாட்டையே பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
also read... சொந்த வீடு வாங்க நீங்க எப்படியெல்லாம் லோன் வாங்கலாம் தெரியுமா?
அந்த வகையில் சுயதொழில் செய்யும் பெண்கள் தனது தொழிலை மேம்படுத்தவும், தனக்கு விருப்பமான தொழிலை தொடங்கவுள்ள பெண்கள் பண உதவிக்கும் இனி கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக அரசு தரப்பிலிருந்து சிறப்பு கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் பெண்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் வரையில் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பெண்கள் மேம்பாட்டுக் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கிராமப்புற பிராந்திய வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றிடமிருந்து பெண்கள் கடன் பெற்றுக்கொள்ளலாம்.
இதுக்குறித்த மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளவும் கடனுதவி பெற விண்ணபிக்கவும் உங்கள் ஏரியா கவுன்சிலரை அணுகுங்கள். அவர்கள் இந்த கடனை பெருவதற்கான வழிமுறைகளை விளக்குவார்கள். நீங்கள் தகுதிபெறும் பட்சத்தில் இந்த கடனை நீங்கள் பெறலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.