முகப்பு /செய்தி /வணிகம் / ₹10 கோடி சேமிப்புடன் 35 வயதில் ஓய்வு பெற்ற பெண் - எப்படி சாத்தியமானது? - ரகசியம் அறிந்துகொள்ளுங்கள்..

₹10 கோடி சேமிப்புடன் 35 வயதில் ஓய்வு பெற்ற பெண் - எப்படி சாத்தியமானது? - ரகசியம் அறிந்துகொள்ளுங்கள்..

katie

katie

பழைய கார், வீடு என சில நண்பர்கள் எங்கள் வாழ்க்கை முறையை கிண்டலடித்தனர். ஆனால் எங்கள் சிந்தனை சேமிப்பாக மட்டுமே இருந்தது.

  • Last Updated :

35 வயதில் ஒரு பெண், 10 கோடி ரூபாயை சேமித்து வைத்துக் கொண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். இந்தத் தொகையை அவர் சாதாரண வேலையை செய்து கொண்டு சேமித்திருக்கிறார். ஓய்வு பெற்ற அந்தப்பெண் தற்போது சேமிப்பு மற்றும் நிதி மேலாண்மை குறித்து பிறருக்கு இலவசமாக பாடம் எடுத்து வருகிறார்.

35 வயதாகும் கேட்டி டொனகனின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. கேட்டி ஓய்வு பெறும் போது அவரின் கையிருப்பு 1 மில்லியன் பவுண்டுகள். காலம் முழுக்க சம்பாதித்து சேர்க்க முடியாத பணத்தை ஒரு சாதாரண வேலையில் இருந்து கொண்டு இந்த வயதிலேயே அவர் சேமித்துவிட்டு, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தற்போது தனது ஓய்வு வாழ்க்கையை சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது சாத்தியமானதற்கு கேட்டி சொல்லும் ஒரு மந்திரச் சொல்தான் சேமிப்பு, ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை.

கேட்டி, இங்கிலாந்தைச் சேர்ந்தவர். கேட்டியின் குடும்பம் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பம் தான் என்றாலும், சிறு வயதிலேயே அவர் பகட்டான ஆடைகளுக்காக செலவிடுவது, விடுமுறைகளை உல்லாசமாக கழிப்பது, ஓட்டல்களில் அடிக்கடி உணவு சாப்பிட செல்வது போன்ற பழக்கங்களை கொண்டிருக்கவில்லை. அவருக்கு பெற்றோர் தரும், பாக்கெட் மணி செலவிடுவதைக் காட்டிலும் அது சேமிப்பாக உயர்வதே மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

கேட்டி தனது கணவர் ஆலனை (வயது 37) 2005ம் ஆண்டு கோஸ்டாரிகாவில் ஒரு வேலை விஷயமாக தங்கியிருந்த போது சந்தித்தார். அங்கிருந்து அவர்கள் இங்கிலாந்துக்கு திரும்பும் போது தம்பதியராக (திருமணம் செய்யாமல்) திரும்பினார்கள்.

Also Read:  நபிகள் நாயகம் குறித்து கருத்து: பெண் தலைமையாசிரியருக்கு மரண தண்டனை!

சேமிப்பு ரகசியம் உடைக்கும் கேட்டி:

2008-ல் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஹேம்ப்ஷையரில் ஆலனின் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்தோம், ஏனென்றால் எனக்கு வாடகை கொடுப்பது பிடிக்கவில்லை. மேலும் கடனாளி ஆவதை நான் வெறுத்தேன். கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் நான் வருடத்துக்கு 28,500 பவுண்டுகள் சம்பளத்தில் வேலை பார்த்தேன். ஆலன் சுயதொழில் செய்பவர், அவரின் வருமானம் நிலையானது அல்ல. நாங்கள் வீட்டில் சமைத்த உணவுகளை கேரியரில் கட்டிக்கொண்டு போய் தான் சாப்பிடுவோம்.

katie with alan

எங்கள் பயண தேவைக்காக புதிய காராக வாங்காமல் பயன்படுத்தப்பட்ட காரைதான் வாங்கினோம். வெளியே நண்பர்களுடன் உல்லாசமாக இரவுகளை கழிக்க செல்லாமல் விருந்தினர்களை வீட்டுக்கு வரவழைத்து உபசரித்தோம். இப்படி முயன்ற வழிகளில் பணத்தை சேமித்தோம். 2010ம் ஆண்டு 42,000 பவுண்டுகள் முதலீட்டில் பேசிங்ஸ்டோக் பகுதியில் இரண்டு படுக்கையறை கொண்ட பிளாட்டை வாங்கினோம்.

2013ம் ஆண்டு ஆலனை முறைப்படி திருமணம் செய்தேன். அந்த திருமண செலவை கூடுமானவரையில் குறைத்தோம். உள்ளூர் மண்டபத்தை வாடகைக்கு எடுத்தோம். அழைப்பிதழ்களை இ-மெயில் செய்தோம், திருமண மஹாலை நண்பர்களின் உதவியுடன் அலங்கரித்தோம். 2014ம் ஆண்டு எனது சம்பளம் 58000 பவுண்டுகளாக அதிகரித்தது. இருப்பினும் எங்கள் செலவை கட்டுக்குள் வைத்து மாதம் இருவரும் தலா 3000 பவுண்டுகளை சேமித்தோம். இன்னும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பதால் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காண்ட்ராக்டர் ஆக மாறினேன்.

Also Read:  விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலக அஸ்வின் காரணமா? – என்ன பிரச்னை?

பழைய கார், வீடு என சில நண்பர்கள் எங்கள் வாழ்க்கை முறையை கிண்டலடித்தனர். ஆனால் எங்கள் சிந்தனை சேமிப்பாக மட்டுமே இருந்தது. 2018ம் ஆண்டு 8,98,000 பவுண்டுகள் எங்கள் சேமிப்பில் இருந்தது. ஆனால் 2019ம் ஆண்டு எங்களின் இலக்கான 1 மில்லியன் பவுடுகளை அடைந்தோம். இதன் பின்னர் தான் எனது பணியை ராஜினாமா செய்துவிட்டு ஓய்வு பெற முடிவு செய்தேன். ஆலன் எனது முடிவுக்கு உறுதுணையாக இருக்கிறார்.

தற்போது இத்தம்பதியர் நாடோடி வாழ்க்கை முறைக்கு மாறியிருக்கின்றனர். தாய்லாந்து, மெக்ஸிகோ என ஊர் ஊராக பயணம் செய்கின்றனர். அவர்களின் ஒரு மில்லியன் பவுண்டுகள் சேமிப்பு, அவர்களுக்கு வருடம் 65,000 பவுண்டுகளை வருமானமாக கொடுக்கிறது. இது கேட்டி பெற்று வந்த சம்பளத்தை காட்டிலும் அதிகம் என்பதால் மனநிறைவாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

Also Read: வழிப்பறியில் ஈடுபட்டு வந்த முன்னாள் தேசிய சாம்பியன் கைது!

top videos

    தற்போது கேட்டி ரிபல் நிதிமேலான்மை பள்ளி என்ற பள்ளியை தொடங்கி, அதன் மூலம் 10 வார இலவச ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருகிறார். இந்த இலவச வகுப்புகளில் அவர் தனது அனுபவத்தை பயன்படுத்தி சேமிப்பு குறித்து கற்றுத்தருகிறார். கேட்டியின் வாழ்க்கை முறையை நாமும் பின்பற்றினால் கடன்கள் இல்லாத சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியும்..

    First published:

    Tags: Personal Finance, Savings