உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால்தான் தமிழகத்துக்கு மானியம் கிடைக்கும்: மத்திய அரசு

உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால்தான் தமிழகத்துக்கு மானியம் கிடைக்கும்: மத்திய அரசு
நரேந்திரசிங் தோமர்
  • News18
  • Last Updated: July 17, 2019, 3:40 PM IST
  • Share this:
தமிழக அரசால் மானியத்தைப் பெற முடியாமல் இருப்பதற்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பதே காரணம் என்று மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, 14 வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் படி உள்ளாட்சி அமைப்புகளுக்காக மத்திய அரசு வழங்கும் செயல்திறன் மானிய தொகையைப் பெறுவதற்கு மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு முறையிட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்குப் பதில் அளித்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், “தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தைப் பெறுவதற்கான கோரிக்கை பல முறை வந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் மானியத் தொகையை வழங்க முடியாது. 2016-2017 நிதியாண்டில் 1,484.31 கோடி ரூபாயும், 2017-2018 நிதியாண்டில் 1,710.90 கோடி ரூபாயும், 2018-2019 நிதியாண்டில் 1,975.07 கோடி ரூபாயும், 2019-2020 நிதியாண்டில் 2,659.50 கோடி ரூபாயும் தமிழக அரசுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் பதில் அளித்துள்ளார்.


மேலும் பார்க்க:
First published: July 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்