இனி 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்... PMC வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் அறிவிப்பு!

பிஎம்சி வங்கி தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் பலகட்ட அதிரடி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

இனி 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்... PMC வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் அறிவிப்பு!
பிஎம்சி வங்கி
  • News18
  • Last Updated: November 5, 2019, 7:25 PM IST
  • Share this:
பலத்த அடிவாங்கிய பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் இனிமேல் 50 ஆயிரம் ரூபாய் வரையில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிஎம்சி வங்கியின் தற்போதைய திறனை ஆராய்ந்தபின்னர் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். வாடிக்கையாளர்களுக்கு பிஎம்சி வங்கியால் பணம் அளிக்கும் திறன் அதிகரித்துள்ளது. இதனால் 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கலாம் என்ற உத்தரவை 50 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதுபோன்ற தளர்வு அறிவிப்புகளைத் தொடர்ந்து வாடிக்கையாளர் நலன் கருதி ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது.


பிஎம்சி வங்கி தனது பொருளாதார நடைமுறையை முறையாகக் கவனிக்கவில்லை, உட்கட்டுப்பாடு இல்லாமை, சிஸ்டம் சரியில்லை, போலியான அறிக்கைகள் எனப் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு மிகுந்த சேதாரத்தைச் சந்தித்தது. இதற்காக பிஎம்சி வங்கி தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் பலகட்ட அதிரடி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

மேலும் பார்க்க: காக்னிசென்ட் வழியில் இன்ஃபோசிஸ்... சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகிறது!

சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.1,600 கோடி சொத்துகள் முடக்கம்?
First published: November 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்