சமீப காலமாக ஐடி நிறுவனங்கள் பற்றிய செய்திகள் தலைப்பு செய்திகளாகவும், வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டுமென்று அறிவிப்பு விடுத்திருந்தது.
அது மட்டுமல்லாமல் மூன்லைட்டிங் என்று கூறப்படும் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் வேலை செய்யும் ஊழியர்களை ஐடி நிறுவனம் எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதை பற்றிய செய்திகளும் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு விப்ரோவில் மூன்லைட்டிங்களில் ஈடுபட்ட 300 ஊழியர்களை நிறுவனம் வேலை நீக்கம் செய்துள்ளது என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐடி பெரும் நிறுவனங்கள் மூன்லைட்டிங் பற்றி வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்படி பதவி உயர்வும் சம்பள உயர்வும் அறிவித்துள்ளது. இது ஐடி வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
பல்வேறு பேண்டுகளில் வேலை பார்க்கும் விப்ரோ ஊழியர்கள் அனைவருக்குமே சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் விப்ரோவில் பணியாற்றி வரும் 10,000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று கடந்த புதன்கிழமையன்று விப்ரோ சார்பாக தெரிவிக்கப் பட்டது. அதுமட்டும் இல்லாமல் கடந்த காலாண்டில் அதாவது ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் புதிதாக 605 ஊழியர்களையும் பணியில் எடுத்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
தனது ஐடி சேவைகள் வணிகத்தில் இருந்து டிசம்பர் 2022 காலாண்டில் 2811 மில்லியன் டாலர் முதல் 2853 மில்லியன் டாலர் வரை வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக விப்ரோ தெரிவித்து உள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான தியரி டெலபோர்டே, “எங்கள் கிளையன்ட்டின் தேவைகளுக்கு ஏற்றவாறு திறமையான ஊழியர்களின் திறமையை மேம்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல் அதற்காக முதலீடும் செய்கிறோம்.
இதனால் தான் இரண்டாவது காலாண்டில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளித்து அவர்களின் சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறோம். தொடர்ச்சியான மூன்றாம் குவார்ட்டரில் நாங்கள் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருகிறோம் என்பதை பதிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், விப்ரோ வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் லாபத்தில் 9% குறைந்துவருகிறது. Q2FY23 இல் தொகுக்கப்பட்ட நிகர லாபம் 2659 கோடி. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் 2930 கோடி லாபம் ஈட்டி இருப்பதாகவும், அதிலிருந்து 9% குறைந்துள்ளது என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.