உலக அளவில் நிலவும் பொருளாதாரம் மந்த நிலையின் காரணமாகவும், பல்வேறு முக்கிய நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். ஏற்கனவே ட்விட்டர், பேஸ்புக், அமேசான், இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பல்வேறு நிறுவனங்களை சார்ந்த பணியாளர்களும் தங்களது வேலையை பற்றி மிகவும் கவலை கொண்டுள்ளனர். இதில் மிகவும் அதிகபட்சமாக எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்கள் அங்கு பணிபுரிந்த பணியாளர்களின் வாழ்க்கையை பெரிதாக பாதித்தது.
உலகம் முழுவதிலும் ட்விட்டர் நிறுவன பணியாளர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வேலையை விட்டு நீக்குவதற்கான உத்தரவை பிறப்பித்தார் எலான் மஸ்க். முக்கியமாக இந்தியாவில் பணியாற்றும் பல்வேறு ட்விட்டர் நிறுவன ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே அமேசான் நிறுவனம் தனது பணியாளர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேலையை விட்டு நீக்கியது.
அவர்களை இன்னும் பயமுறுத்தும் விதமாக இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ சமீபத்தில் 400 க்கும் இருக்கும் மேற்பட்ட பணியாளர்களை பணி நீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. கிடைத்துள்ள தகவலின்படி இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் அனைவரும் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் ஆவர்.
இவ்வாறு புதிதாக வேலைக்கு சேர்ந்த பணியாளர்கள் தங்களது இன்டர்னல் அசெஸ்மென்ட், அதாவது உள்ளுக்குள் நடத்தப்படும் தேர்வில் சரியாக தனது திறமையை வெளிப்படுத்தாத காரணத்தினால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விப்ரோ தெரிவித்துள்ளது. இவர்களின் ஆரம்ப கட்ட பயிற்சிக்காக அந்த நிறுவனம் 75 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விப்ரோவின் ஒப்பந்தத்தின்படி இந்த பயிற்சிக்கான செலவை அந்தந்த பணியாளர்கள் தான் செலுத்த வேண்டும்.
ஆனால் விப்ரோ அவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு கொடுத்த அறிவிப்பில் “உங்களது பயிற்சிக்கு செய்யப்பட்ட செலவான ரூபாய் 75 ஆயிரம் நீங்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும். ஆனால் நாங்கள் அதனை தள்ளுபடி செய்கிறோம்” என்று அவர்களுக்கு அளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
Also Read : GOLD RATE | தங்கம் விலை அதிரடி உயர்வு... இன்றைய விலை நிலவரம் என்ன?
மேலும் இவ்வாறு நடந்து கொண்டதின் மூலம் அந்த நிறுவனம் தன்னுடைய உயர்ந்த நிலையை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்று பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் “அனைத்து தொடக்க நிலை ஊழியர்களும் தங்கள் வகிக்க போகும் பொறுப்புக்கு என சில குறிப்பிட்ட திறமைகளுடன் இருக்க வேண்டும். இதற்காக சரியான நபர்களை தேர்ந்தெடுக்கவும், அவர்களின் திறனை கண்டறியவும் பல்வேறு சோதனைகளை கடந்து வர வேண்டும். எங்களது வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப சிறந்த பணியாளர்களை தேர்வு செய்வது எங்களது பொறுப்பாகும். என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Unemployment, Wipro