ஹோம் /நியூஸ் /வணிகம் /

துரைக்கு ரெண்டு வேலை கேக்குதோ? 300 பணியாளர்களை வேலை விட்டு தூக்கிய விப்ரோ!

துரைக்கு ரெண்டு வேலை கேக்குதோ? 300 பணியாளர்களை வேலை விட்டு தூக்கிய விப்ரோ!

விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷத் பிரேம்ஜி

விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷத் பிரேம்ஜி

மேலும் தங்கள் நிறுவனத்தில் அவ்வாறு மூன்லைட்டிங் முறையில் பணியாற்றிய 300 பணியாளர்களை நேர்மை தவறியதின் அடிப்படையில் பணி நீக்கம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 • News18 India
 • 3 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  மூன்லைட்டிங் முறையில் பணியாற்றுவது ஏமாற்று வேலை எனவும், அப்படி பணியாற்றிய 300 பணியாளர்களை பணியை விட்டு நீக்கி உள்ளதாக விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

  இந்த லாக்டவுன் சமயத்தில் அனைவரும் வீட்டிலிருந்தே வேலை பார்க்க பழகிவிட்டனர். முக்கியமாக தகவல் தொழில்நுட்பத் துறையை சார்ந்த பணியாளர்கள் பலரும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

  என்னதான் தகவல் தொழில்நுட்பத் துறையாக இருந்தாலும் அதில் சிலருக்கு போதிய வருமானம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே நிதி நெருக்கடியில் இருப்பவர்களும், வேலை இல்லாத மற்ற நேரங்களில் பணம் சம்பாதிக்க விரும்புபவர்களும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டே,

  அந்த நிறுவனத்தின் வேலை நேரம் முடிந்ததும் அல்லது அந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் இடைப்பட்ட நேரங்களிலேயே வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இது விதிமுறை மற்றும் நெறிமுறைகளுக்கு புறம்பானதாக இருந்தாலும் அனைவரும் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதால் இதனை மிகச் சரியாக கண்டறிய முடியவில்லை.

  கடந்த புதன்கிழமை விப்ரோ தலைவர் ரிஷத் பிரேம்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றிய 300 பணியாளர்கள் விப்ரோவில் பணியில் இருந்து கொண்டே அதன் தொழில்முறை போட்டி நிறுவனங்களிலும் சில மாதங்களாக பணியாற்றி உள்ளதை கண்டுபிடித்ததாகவும், நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியதற்காக அவர்களை பணியை விட்டு நீக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  இப்படிப்பட்ட நேர்மையற்ற ஊழியர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் கண்டிப்பாக இடம் இல்லை என்றும் மிகக் கடுமையாக தெரிவித்துள்ளார்.

  மூன்லைட்டிங் என்பது ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு வேறொரு நிறுவனத்திற்காக இரண்டாவது வேலையை செய்வது ஆகும். முன்னதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த கலாச்சாரம், லாக் டவுனிற்கு பிறகு அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

  இதுகுறித்து ஏஐஎம்ஏ விழாவில் பேசிய விப்ரோவின் தலைவர் ரிஷத் பிரேம்ஜி மூன்லைட்டிங் பற்றி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த மூன்லைட்டிங் ரகசியமாக செய்யப்படுகிற ஒரு வேலை ஆகும். என்னை பொறுத்தவரை அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் இந்த வெளிப்படை தன்மை உறுதிப்படுத்த நிறுவனமும் பணியாளர்களும் சில நேரங்களில் தங்களுக்குள் வெளிப்படையாக பேசி முடிவெடுக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார். .

  மேலும் தங்கள் நிறுவனத்தில் அவ்வாறு மூன்லைட்டிங் முறையில் பணியாற்றிய 300 பணியாளர்களை நேர்மை தவறியதின் அடிப்படையில் பணி நீக்கம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். அந்த 300 நபர்களும் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே அவர்களின் தொழில்முறை போட்டி நிறுவனங்களுக்கும் ரகசியமாக வேலை பார்த்துள்ளதை அந்நிறுவனம் கண்டறிந்து அவர்களை வேலையை விட்டு நீக்கி உள்ளது.

  இதைப் பற்றி மிகக் கடுமையாக பேசிய அவர் “விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே எங்கள் தொழில் முறை போட்டியாளர்களுக்கும் ரகசியமாக வேலை பார்ப்பது கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு குற்றம் நாங்கள் மட்டுமல்ல, அவர்கள் ரகசியாமாக வேலை பார்த்த அந்த நிறுவனங்களுக்கும் இந்த உண்மை தெரிய வரும்போது எங்களைப் போன்ற மன நிலையிலேயே அவர்களும் இருப்பார்கள் என தெரிவித்தார்.

  இதற்கு முன்னதாக இந்தியாவில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸும் தங்களது பணியாளர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பது பற்றிய எச்சரிக்கையை அனுப்பியுள்ளது.

  நோ டூ டைமிங்- நோ மூன்லைட்டிங் என்று வாசகங்களோடு இந்த எச்சரிக்கை அனுப்பி உள்ளது. அதில் இன்போசிஸ் ஊழியர்கள் யாரேனும் மூன்லைட்டிங் முறையில் வேலை பார்ப்பது தெரிய வந்தால் அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

  இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவின் ஐபிஎம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரான சந்திப் படேலும் மூன்லைட்டிற்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். பணியாளர்கள் ஐபிஎம் சேரும்போது தாங்கள் ஐபிஎம் நிறுவனத்திற்காக மட்டுமே வேலை பார்ப்போம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். எனவே ஒப்பந்தத்தை மீறி இவ்வாறு மற்ற நிறுவனங்களுக்கு வேலை செய்வது சரியான செயல் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

  Read More: வாரக்கடைசி நாளான இன்று குறைந்த தங்கத்தின் விலை.. எவ்வளவு தெரியுமா?

  என்னதான் பல்வேறு முக்கிய நிறுவனங்களின் சிஇஓக்கள் ஒன்று சேர்ந்து இதனை எதிர்த்தாலும், சரியான சம்பளம் கொடுத்தால் அவர்கள் ஏன் இரண்டாம் வேலை பார்க்க போகிறார்கள் என்று சிலர் இதற்கு ஆதரவும் தருகின்றனர். சமூக வலைதளங்களில் தற்போது மிக பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. எது எப்படியோ நமக்கெல்லாம் ஒரு வேலை கிடைப்பதற்கே திண்டாட்டமாக உள்ள இந்த காலத்தில், எப்படிப்பா ரெண்டு வேலையெல்லாம் பாக்குறீங்க!

  Published by:Srilekha A
  First published:

  Tags: Technology, Violation, Wipro