Home /News /business /

விப்ரோ இந்தியாவின் புதிய தலைவராக சத்யா ஈஸ்வரன் நியமனம்

விப்ரோ இந்தியாவின் புதிய தலைவராக சத்யா ஈஸ்வரன் நியமனம்

விப்ரோ

விப்ரோ

கேபிஎம்ஜி இந்தியாவின் முக்கிய பொறுப்பில் இருந்த சத்யா ஈஸ்வரனை விப்ரோ நிறுவனம் இந்தியப் பிரிவு தலைவராக நியமித்துள்ளது.

    கேபிஎம்ஜி இந்தியாவின் முக்கிய பொறுப்பில் இருந்த சத்யா ஈஸ்வரனை விப்ரோ நிறுவனம் இந்தியப் பிரிவு தலைவராக நியமித்துள்ளது.

    முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் இந்திய பிரிவின் புதிய தலைவராக சத்யா ஈஸ்வரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  மகாராஷ்டிராவைச் சேர்ந்த சத்யா மும்பை பல்கலைக்கழகத்தில் எல்க்டாரனிக்ஸ் பிரிவில் பட்டம் பெற்று, நிதி பிரிவில் எம்பிஏ முடித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவின் சன்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகம் பாடத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

    கேபிஎம்ஜி இந்தியா நிறுவனத்தில் பிஸ்னஸ் கன்சல்டிங், தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளின் தலைவராக சத்யா இருந்துள்ளார். இவர் மென்பெருள் சேவை, கிளவுட் தொழில்நுட்பம், டிஜிட்டல் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.

    சத்யாவின் நியமனம் குறித்து விப்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய அனுபவம் சத்யாவுக்கு உள்ளது. பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் கொண்ட சத்யா, விப்ரோவின் திறன்களையும் முதலீடுகளையும் உயர்த்தும் விதமாக, கிளவுட், டிஜிட்டல், இன்ஜினியரிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள துணை நிற்பார் என்று கூறியுள்ளது.

    இதையும் படிங்க: PPF account : அதிக வட்டி கிடைக்க இந்த 3 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க போதும்!



    விப்ரோவின் ஆசியா-பசிபிக், இந்தியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களின் சிஇஓ ஆன அனிஸ் சென்சா இந்த நியமனம் குறித்து கூறுகையில் " இந்தியாவை முக்கிய சந்தையாக கொண்டுள்ள விப்ரோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, தலைமைக்கு சத்யாவை வரவேற்கிறேன். சத்யாவுக்குச் சர்வதேச அளவில் நீண்ட அனுபவம் உள்ளது. விப்ரோவை இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய பிராண்டாக நிலை நிறுத்த சத்யாவின் தலைமைப் பண்பு நிச்சயம் உதவும்" என்றுள்ளார்.

    மேலும் படிக்க: வட்டி மட்டுமே ரூ1.94 லட்சம்.. போஸ்ட் ஆபீஸில் இருக்கும் அட்டகாசமான திட்டம்!


    தனக்கு கிடைத்துள்ள புதிய பொறுப்பு குறித்து பேசிய சத்யா, "விப்ரோவுடன் இணைந்து செயல்படுவதில் நான் பெருமை கொள்கிறேன். இந்தியா மாபெரும் தகவல் தொழில்நுட்ப மாற்றத்தை கண்டுவருகிறது. இந்த துறையில் தேவை அதிகரித்து வரும் நிலையில், தனித்துவமான திறன்களை இந்தியா எதிர்பார்க்கிறது. இந்த தேவையை பூர்த்தி செய்ய விப்ரோ இந்திய நிச்சயம் முயற்சி செய்து வெற்றிகரமாக செயல்படும் என நம்புகிறேன்" என்றார்.

    பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் விப்ரோ நிறுவனத்தின் தலைவராக அசிம் பிரேம்ஜி உள்ளார். நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக அசிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் பிரேம்ஜி உள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: IT Industry, Wipro

    அடுத்த செய்தி