Home /News /business /

அக்டோபரில் உயருமா சேமிப்புத்திட்டங்களின் வட்டி விகிதம்? எவ்வளவு? இதோ முழு விபரம்!

அக்டோபரில் உயருமா சேமிப்புத்திட்டங்களின் வட்டி விகிதம்? எவ்வளவு? இதோ முழு விபரம்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

செல்வமகள், பொது வருங்கால வைப்பு நிதி, சம்ரித்தி யோஜனா போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கு வருமான வரிச்சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் வரி செலுத்துவதில் இருந்து விலக்கும் பெற முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அரசாங்கப் பத்திரங்களின் வருவாய் அதிகரித்து வருவதால், சிறு சேமிப்புத்திட்டங்களின் வட்டி விகிதங்களும் இந்த மாத இறுதிக்கும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வட்டி விகிதங்கள் அக்டோபர் மாதத்திலும் உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆயிரமோ? லட்சமோ? எவ்வளவு சம்பாதித்தாலும் மாத இறுதியில் பணம் இல்லாமல் செலவிற்கு மிகவும் சிரமப்படுவோம். சேமிக்கும் பழக்கம் இருந்துவிட்டால் நிச்சயம் இதிலிருந்து தப்பித்துவிடலாம். மக்களிடம் பணத்தை சேமித்து வைக்கும் பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்காகவே அதிக வட்டியுடன் தபால் நிலையங்களில் பல சேமிப்புத் திட்டங்கள் உள்ளது.

    செல்வமகள், பொது வருங்கால வைப்பு நிதி, சம்ரித்தி யோஜனா போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கு வருமான வரிச்சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் வரி செலுத்துவதில் இருந்து விலக்கும் பெற முடியும். இந்நிலையில் தற்போது பல மக்கள் ஆர்வத்துடன் தபால் நிலையங்களில் சேமிக்கத் தொடங்கிவிட்டனர்.

    தபால் நிலையங்களும் மக்களுக்காகவே சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை உயர்த்திவருகிறது. கடைசியாக கடந்த ஏப்ரல்- ஜுன் 2020 காலாண்டில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இதன் பிறகு செப்டம்பர் 2022 வரை வட்டி விகிதங்களில் எவ்வித வட்டி விகிதங்கள் மாறாமல் இருக்கும் நிலையில் தற்போது அடுத்த மாதம் அதாவது அக்டோபர் முதல் வட்டி விகிதங்கள் உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 2022 முதல் பத்திர ஈட்டுத் தொகையானது தொடர்ந்து 7 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

    பிபிஎஃப், செல்வமகள், மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டத்தில் ஏன் வட்டி விகிதம் அதிகரிக்கிறது?

    அரசாங்கப் பத்திரங்களின் வருவாய் அதிகரித்து வருவதால், சிறு சேமிப்புத்திட்டங்களின் வட்டி விகிதங்களும் இந்த மாத இறுதிக்கும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வட்டி விகிதங்கள் அக்டோபர் மாதத்தில் உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் படி, பிபிஎஃப் வட்டி வரவிருக்கும் காலாண்டில் 7.56 சதவீதம் வரை உயரக்கூடும்.

    அதே போல், செல்வமகள் அல்லது சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 7.6 சதவீதம் வட்டி விகிதத்தில் இருந்து விரைவில் 8.3 சதவீதமாக உயரும். ஆனால் உடனடியாக வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படாது. அதே சமயம் சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் இந்த மாத இறுதிக்குள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகின்ற அக்டோபரில் வட்டி விகிதங்கள் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நிச்சயம் அனைத்துத் தரப்பட்ட மக்களும் பயன்பெறுவார்கள்.

    Read More: தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

    வட்டி கணக்கிடப்படும் முறை:

    பொதுவாக சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள், முதிர்வு கால அடிப்படையில் கணக்கிடப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் முந்தைய மூன்று மாதங்களின் அரசுப்பத்திரங்களின் (government securities) அடிப்படையில் சிறு சேமிப்புத்திட்டங்களின் வட்டி விகிதத்தை மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு முறை மதிப்பாய்வு செய்வது குறிப்பிடத்தக்கது.
    Published by:Srilekha A
    First published:

    Tags: Government, Interest rate, Post Office, Savings

    அடுத்த செய்தி