Home /News /business /

கார்ப்பரேட் காப்பீட்டு திட்டத்தை புதுப்பிக்க தாமதமானால் இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் மருத்துவ செலவை ஏற்குமா.?

கார்ப்பரேட் காப்பீட்டு திட்டத்தை புதுப்பிக்க தாமதமானால் இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் மருத்துவ செலவை ஏற்குமா.?

Health Insurance Policy | ஒரு சிலருக்கு அவர்கள் பணியாற்றும் அலுவலகத்திலேயே கார்ப்பரேட் மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுத்துக் கொடுத்திருப்பார்கள். ஏனோ சில காரணங்களால் இந்த பாலிசி உரிய நேரத்தில் புதுப்பிக்கப்படாமல் இருக்கலாம். அத்தகைய சூழலில் காப்பீடு கிடைக்குமா என்ற கேள்விக்கு விடை தருகிறது இந்தச் செய்தி.

மேலும் படிக்கவும் ...
    நம்மில் பெரும்பாலானவர்கள் தனிப்பட்ட மருத்துவக் காப்பீட்டு பாலிசி வைத்துள்ளவர்களாக இருப்போம். ஒரு சிலருக்கு அவர்கள் பணியாற்றும் அலுவலகத்திலேயே கார்ப்பரேட் மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுத்துக் கொடுத்திருப்பார்கள்.

    ஏனோ சில காரணங்களால் இந்த பாலிசி உரிய நேரத்தில் புதுப்பிக்கப்படாமல் இருக்கலாம். அத்தகைய சூழலில் காப்பீடு கிடைக்குமா என்ற கேள்விக்கு விடை தருகிறது இந்தச் செய்தி. சட்ட வல்லுநர் ஒருவருக்கு வாடிக்கையாளர் ஒருவர் எழுதியுள்ள கடிதத்தில், “எனது கார்ப்பரேட் மருத்துவக் காப்பீட்டு பாலிசி கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியுடன் காலாவதி ஆகிவிட்டது. இந்த நிலையில் நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது நேரடியாக பணம் செலுத்தினேன். இதனால் என்னிடம் அதிக பணத்தை வசூல் செய்துவிட்டனர்.

    எனது பாலிசியை எனது நிறுவனம் தான் புதுப்பித்து வருகிறது. ஆனால் ஒரு பகுதி காப்பீட்டை தான் நான் பெற முடியும். பாலிசி புதுப்பிக்கவில்லை என்பது வாடிக்கையாளரின் தவறில்லை என்கிறபோது, அவர் ஏன் கூடுதல் செலவை ஏற்க வேண்டும்? இதுபோன்ற சூழலை விதிவிலக்காக கருதி முழுமையான காப்பீட்டை நிறுவனங்கள் வழங்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.



    மருத்துவமனை டிஸ்கவுண்டில் சேருகிறது?

    வாடிக்கையாளரின் கேள்விக்கு சட்ட ஆலோசகர் அளித்துள்ள பதிலில், “மருத்துவமனை டிஸ்கவுண்ட் குறித்த விஷயத்தை நீங்கள் குறிப்பிடுவதாகக் கருதுகிறேன். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சில இடங்களில் மருத்துவமனைகளுடன் தனிப்பட்ட தொடர்புகளை கொண்டிருப்பார்கள். இதன் மூலமாக அடிக்கடி மேற்கொள்ளப்படும் சில சிகிச்சைகளுக்கு அவர்கள் டிஸ்கவுண்ட் பெறுவார்கள். இது கிளைம் செலவுகளை குறைக்க அவர்களுக்கு உதவும்.

    Also Read : இப்படியொரு மருத்துவ பாலிசியை மட்டும் எடுத்து வைத்தால் போதும் செலவை குறைத்து விடலாம்!

    இதில், கேஷ்லெஸ் சிகிச்சைகளை விதிவிலக்காக சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பரிசீலனை செய்யும். உங்கள் பாலிசி புதுப்பிக்கப்பட வேண்டியிருக்கிறது என்றாலும் கூட நீங்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். கேஷ்லெஸ் சிகிச்சை என்பது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் வரையில் செல்லுபடி ஆகும்.



    உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் மருத்துவமனை இடையே உள்ள ஒப்பந்தம் அடிப்படையில் உங்கள் மருத்துவ பில் திருத்தி அமைக்கப்படும். இதையடுத்து நீங்கள் செலுத்திய பணத்தை மருத்துவமனை நிர்வாகம் உங்களுக்கு திருப்பிச் செலுத்தும். பிறகு இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் செலுத்தும்.

    Also Read : கடனுக்கான EMI-யை தவறவிட்டால் என்னென்ன ஆபத்துக்கள் நடக்கும் தெரியுமா?

    ஆனால், நீங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நாளுக்கு முன்பாக உங்கள் நிறுவனம் காப்பீட்டு தொகையை செலுத்தியிருக்க வேண்டும். சில குரூப் பாலிசிக்களில் நோய் வாரியாக உள்வரம்பு என்பது இருக்கும். செலவைக் குறைப்பதற்காக இந்த ஆப்சனை நிறுவனங்கள் தேர்வு செய்யும். ஆனால், செலவுத் தொகை ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் என்றால் பாலிசியின் கீழ் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை எதுவோ, அதை வழங்க வேண்டும்’’ என்று பதில் அளித்துள்ளார்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Insurance, Life Insurance

    அடுத்த செய்தி