ஹோம் /நியூஸ் /வணிகம் /

அடிக்கடி செக் செய்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையுமா? உண்மை என்ன!

அடிக்கடி செக் செய்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையுமா? உண்மை என்ன!

கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர்

நீங்கள் ஒரே நேரத்தில் பல கிரெடிட்களுக்கு விண்ணப்பித்திருந்தால், அதன் மூலம் நடக்கும் பல கடின விசாரணைகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உங்களது பொருளாதார அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்காக நீங்கள் தொடர்ந்து கடன் வாங்க நேர்ந்தால், நீங்கள் கடனை சரியாக திருப்பி செலுத்தும் பழக்கத்தை கொண்டிருப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

கடனை சரியாக திருப்பி செலுத்துவதோடு உங்கள் கிரெடிட் ஸ்கோரை தவறாமல் சரி பார்ப்பதும் மிகவும் முக்கியமான ஒன்று. சிறப்பான கிரெடிட் ஸ்கோர் கொண்டிருப்பது உங்களின் கடன் வாங்கும் தகுதியை அதிகரிக்க செய்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் நீங்கள், அடுத்தடுத்த கடன்கள் வாங்க வேண்டியதிருந்தாலோ,  அதிலும் குறிப்பாக தனிநபர் கடன் வாங்க நேர்ந்தால் உங்களிடம் ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும்.

ஆனால் ஒரு சிலர் கிரெடிட் ஸ்கோரை அடிக்கடி சரிபார்ப்பது மோசமான விஷயம். இது போல செய்தால் அது நல்ல கிரெடிட் ஸ்கோரில் கூட மோசமான எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி கிரெடிட் ஸ்கோர் வெகுவாக குறையும் என  பலர் சொல்லி கேட்டிருப்போம்.  நீங்களும் இதை கேள்விப்பட்டிருந்தால் நிச்சயம் குழப்பத்தை எதிர் கொண்டிருப்பீர்கள். நமது கடன் தகுதியை சிறப்பாக மெயின்டைன் செய்ய நல்ல கிரெடிட் ஸ்கோர் தேவை. ஆனால் அது எவ்வளவு இருக்கிறது என்பதை செக் செய்தால், எப்படி ஸ்கோர் குறையும் என்ற குழப்பம் உங்களை குடைகிறதா! இந்த தகவல் உண்மையா என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

Read More : உங்கள் கிரெடிட் ஸ்கோரை சிறப்பான முறையில் பராமரிக்க உதவும் எளிய வழிகள்..!

கிரெடிட் ஸ்கோரை அடிக்கடி சரிபார்ப்பது மோசமானதா..?

கடன் வாங்கும் செயல்முறையின் ஒரு முக்கிய பகுதியாக கிரெடிட் ஸ்கோர் செக்கிங் இருக்கும் நிலையில், நீங்கள் ரெகுலர் கிரெடிட் யூஸராக இருந்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்க சில முறைகள் உள்ளன. அதற்கு முன் கிரெடிட் ஸ்கோர் தொடர்பான கடின விசாரணை (Hard Enquiry) மற்றும் மென்மை விசாரணை (Soft Enquiry) ஆகிய இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மென்மை விசாரணை:

இதில் உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை நீங்கள் செக் செய்வது அல்லது ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு உங்களின் பின்னணி சரிபார்ப்பிற்காக (பேக்ரவுண்ட் வெரிஃபிகேஷன்) உங்கள் கிரெடிட் ஸ்கோரை செக் செய்வது அடங்கும்.

கடின விசாரணை:

நீங்கள் புதிய கிரெடிட்டுக்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம் இந்த செக்கிங் ப்ராசஸ் நடக்கும். கடன் வழங்குநர் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பார்த்து, உங்கள் தகுதியைச் சரிபார்ப்பதற்காக அறிக்கை தாக்கல் செய்கிறார்கள்.

இப்போது இந்த விசாரணை முறைகளை பார்த்தோம் இல்லையா.! இதில் முதல் வகை உங்கள் கிரெடிட் ஸ்கோரில் எந்த எதிர்மறை தாக்கத்தையும் நிச்சயம் ஏற்படுத்தாது. ஏனென்றால் உங்களது கிரெடிட் ஸ்கோரை நீங்களே செக் செய்து கொள்கிறீர்கள் அவ்வளவு தான். அதே போல பேக்ரவுண்ட் வெரிஃபிகேஷனுக்காக மட்டுமே உங்கள் கிரெடிட் ஸ்கோர் செக் செய்யப்பட்டாலும் எவ்வித பாதிப்பும் இருக்காது.

ஆனால் இந்த இரண்டாவது வகையான கடின விசாரணை என்பது கடன் வழங்குபவர் அல்லது நிறுவனம் உங்களது கடன் விண்ணப்ப செயல்முறையின் ஒரு பகுதியாக உங்கள் கிரெடிட் அறிக்கையை மதிப்பாய்வு செய்ய கோரும்போது நிகழ்கிறது. கடின விசாரணை உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வளவு பாதிக்கும் என்பதை தீர்மானிக்க உங்கள் லோன் ஹிஸ்ட்ரி ஒரு முக்கிய காரணியாக உள்ளது. நீங்கள் ஒரு புதிய லோனுக்கு விண்ணப்பிக்கும் முன் உங்களிடம் ஆரோக்கியமான கிரெடிட் ஹிஸ்ட்ரி மற்றும் கிரெடிட் ஸ்கோர் இருந்தால் புதிய கடின விசாரணை உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு மிக குறைவான சேதத்தை ஏற்படுத்த கூடும்.

அதுவே இந்த வகை விசாரணைகள் குறுகிய கடன் வரலாறு அல்லது சில கடன் கணக்குகளை கொண்ட தனிநபர்களின் கிரெடிட் ஸ்கோருக்கு மிகவும் தீங்கு விளைவிக்கலாம். நீங்கள் அடிக்கடி கடன் கேட்டு விண்ணப்பித்தால் இந்த சிக்கலுக்கு நீங்கள் ஆளாக நேரிடலாம். எளிமையாக சொல்வதென்றால் கடன் வழங்குபவர்கள் உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை சரிபார்க்கும் போது, ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரித்திருந்தால் பெரிய அபாயம் இல்லை. ஆனால் நீங்கள் ஒரே நேரத்தில் பல கிரெடிட்களுக்கு விண்ணப்பித்திருந்தால், அதன் மூலம் நடக்கும் பல கடின விசாரணைகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உங்கள் கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க நிதியை சரியாக திட்டமிடுவதும், தேவையான சமயத்தில் மட்டுமே கடனுக்கு விண்ணப்பிப்பதும் நிபுணர்களால் அறிவுறுத்தப்படுகிறது.

Published by:Lilly Mary Kamala
First published: