Home /News /business /

மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னதாக ஆதார் - பான் அட்டையை இணைப்பது எப்படி ?

மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னதாக ஆதார் - பான் அட்டையை இணைப்பது எப்படி ?

ஆதார் - பான் அட்டை

ஆதார் - பான் அட்டை

Aadhaar : உங்கள் யூசர் ஐடி, பாஸ்வேர்டு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு லாகின் செய்ய வேண்டும். உங்களுக்கு அக்கவுண்ட் இல்லை என்றால், முதலில் அதை உருவாக்க வேண்டும்.

இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் அனைவருமே, அவர்களது பான் அட்டையுடன், ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கான காலக்கெடு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆகவே இந்த இரண்டு ஆவணங்களையும் நீங்கள் இணைக்காவிட்டால், உங்கள் பான் அட்டை செல்லுபடியாகாமல் போய்விடும். இது மட்டுமல்லாமல் நீங்கள் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆகவே, அபராதம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றால் ஆதார் மற்றும் பான் அட்டைகளை நீங்கள் உடனே இணைத்தாக வேண்டும். அதை எப்படி செய்வது என்பது குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

  • வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான ‘www.incometaxindiaefiling.gov.in/’ என்ற தளத்திற்கு செல்லவும்.

  • இந்த இணையதளத்தில் நீங்கள் ஒரு யூசராக பதிவு செய்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் இதுவரை யூசராக பதிவு செய்யவில்லை என்றால் பான் எண்ணைக் குறிப்பிடுங்கள். அதுவே உங்களுக்கான யூசர் ஐடி-யாக பயன்படுத்தலாம்.

  • உங்கள் யூசர் ஐடி, பாஸ்வேர்டு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு லாகின் செய்ய வேண்டும். உங்களுக்கு அக்கவுண்ட் இல்லை என்றால், முதலில் அதை உருவாக்க வேண்டும்.

  • இப்போது உங்கள் பான் மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான பாப் அப் விண்டோ திறக்கும். ஒருவேளை அது திறக்காவிட்டால், புரொஃபைல் செட்டிங்க்ஸ் சென்று, மெனு பாரில், லிங்க் ஆதார் என்பதை கிளிக் செய்யவும்.

  • உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் ஏற்கனவே உங்கள் பான் அட்டையில் உள்ளபடி குறிப்பிடப்பட்டிருக்கும்.

  • இப்போது உங்கள் திரையில் குறிப்பிட்டப்பட்டுள்ள பான் அட்டை விவரங்கள் மற்றும் உங்கள் ஆதார் அட்டை விவரங்கள் ஆகியவற்றை நீங்கள் சரிபார்க்க வேண்டும். ஒருவேளை இதில் ஏதேனும் மாறுபட்டிருந்தால், இந்த இரண்டு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றில் அந்தத் தகவலை நீங்கள் திருத்த வேண்டும்.

  • விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், உங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, ‘Link Now’ (இப்போது இணைக்கவும்) என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

  • உங்கள் பான் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது என்ற பாப் அப் செய்தி உங்களுக்கு வரும்.

  • நீங்கள் www.utiitsl.com/ அல்லது www.egov-nsdl.co.in/ ஆகிய இணையதளங்களில் சென்றும், உங்கள் பான் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.


  • இதையும் படியுங்கள் : போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் தொடங்க நினைப்பவர்கள், தொடங்கியவர்கள் இதை தெரிந்து கொள்வது ரொம்ப நல்லது!
     ஒருவேளை நீங்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் அட்டை செல்லாமல் போய்விடும். இதன் விளைவாக உங்கள் ஊதியம் பெறுவது, நீங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது போன்றவை பாதிக்கப்படலாம். ஆன்லைனில் உங்களுக்கு இணைக்க தெரியவில்லை என்றால், அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி இணைத்துக் கொள்ளலாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Aadhaar card

அடுத்த செய்தி