Home /News /business /

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் ஆவணங்களை கொண்டு வந்த பையை தயாரித்தது யார்?

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் ஆவணங்களை கொண்டு வந்த பையை தயாரித்தது யார்?

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

காலம் காலமாக பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றம் வரும் நிதி அமைச்சர்கள் சூட்கேஸ் ஒன்றில் அறிக்கைகள் எடுத்து வருவதே வழக்கம். அப்படிப்பட்ட 100 ஆண்டு பழமையான முறையை 2019 பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் மாற்றி சிவப்பு நிற உறை ஒன்றில் எடுத்து வந்தார்.

சூட்கேஸில் பட்ஜெட் அறிக்கைகள் கொண்டு செல்வதை, 1860-ம் ஆண்டு பிரிட்டன் அரசவையில் வில்லியம் கிளாட்ஸ்டோன் அறிமுகம் செய்து வைத்தார். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ததை அடுத்து, இங்கும் அதே முறை பின்பற்றப்பட்டு வந்தது. ஒரு முறை ஜவஹர்லால் நேரு கருப்பு சூட்கேஸில் பட்ஜெட் அறிக்கையை கொண்டு வந்திருந்தார்.

2019 பட்ஜெட் அறிக்கை கொண்டு வரப்பட்ட உறை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த நிர்மலா சீதாராமன், அதை அவரது மாமி தைத்து கொடுத்ததாகவும், பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு அந்த பையை மும்பை சித்திவிநாயகர் கோவில் மற்றும் மகாலக்‌ஷ்மி கோவிலில் பூஜை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகரான கே.சுப்பிரமணியன், நிர்மலா சீதாராமன் சிவப்பு உறையில் பட்ஜெட் அறிக்கையை கொண்டு வந்தது மேற்கத்திய அடிமைதனத்திலிருந்து நாம் வெளியேறுவதற்கான அடையாளமாக உள்ளது என்று தெரிவித்தார்.

முன்னாள் நிதி அமைச்சரான ப. சிதம்பரம் அடுத்த முறை காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் போது நிதி அமைச்சர் ஐபாட்-ல் பட்ஜெட் அறிக்கை கொண்டு வருவார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: Budget 2019, Nirmala Sitharaman, Union Budget 2019

அடுத்த செய்தி