முகப்பு /செய்தி /வணிகம் / யார் இந்த வென்ச்சர் முதலீட்டாளர்கள்?

யார் இந்த வென்ச்சர் முதலீட்டாளர்கள்?

வென்ச்சர் முதலீட்டாளர்கள்

வென்ச்சர் முதலீட்டாளர்கள்

Venture capitalist: தொழில் விரிவாக்கத்திற்காக நிறுவனத்தின் பத்திரத்தை அடகு வைக்காமல், கடன் வாங்காமல், குறைந்த பங்கை விற்று தொழிலை வளர்க்கும் யுத்தி இது.

  • 1-MIN READ
  • Last Updated :

தொழில் தொடங்கும் போது தேவதைகளாக வந்து தொழில் தொடங்க உதவும் ஏஞ்சல் இன்வெஸ்டர்கள் பற்றி பார்த்தோம்.

இப்போது ஒரு தொழில் தொடங்கி விட்டோம். நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 5 லட்சம் முதலீடு செய்த ஏஞ்சல் முதலீட்டாளரும் நானும் சேர்ந்து இந்த தொழிலை இப்போது நடத்தி வருகிறோம். இப்போதைக்கு ஒரு தொழிற்சாலை இயங்கி வருகிறது.

3 வருடங்களில்  நன்றாக வளர ஆரம்பித்து விட்டது. மேலும் 1 தொழில் கிளையை நிறுவ நினைக்கிறோம். ஆனால் எங்கள் இருவரிடமும் போதிய பணம் இல்லை. தொழிலில் வந்த லாபமும் போதாது. இப்போது இந்த நிறுவனத்திற்குள் இன்னொருவரை அனுமதிக்கலாம் என்று தோன்றுகிறது.

இதையும் படிங்க...யார் இந்த ஏஞ்சல் இன்வெர்ஸ்டார்கள்?

ஏஞ்சல் இன்வெஸ்டர் போல் அல்லாமல் ஏற்கனவே தொழில்களுக்கு நிதி அளிக்கும் நபராக அவர் இருப்பார். அதே போல் ஏற்கனவே நிறுவப்பட்டு, வளர்ந்து வரும் அல்லது வளர்ச்சிக்கு பணம் தேடும் நிறுவனங்களுக்கு கூடுதல் முதலீடு கொடுக்கத் தயாராக இருக்கும் நபர் தான் இந்த வென்ச்சர் முதலீட்டாளர்கள். இவர்கள் நல்ல லாபம் தரும் என்று நம்பும் புதிய ஐடியாக்களுக்கும் நிதியளிப்பர்.

இப்போது நம் கதைக்கு வருவோம். தொழில் தொடங்கும்போது ஐடியா கொடுத்த எனக்கு 30%, எனக்கு முதலில் நிதி அளித்த ஏஞ்சல் இன்வெஸ்டருக்கு 20%, நிறுவனத்தின் பேரில் 50% பங்குகள் என்று பிரித்து  வைத்துள்ளோம் என்று கருதிக்கொள்வோம் .

இப்போது நமது நிறுவனத்தை விரிவாக்க, புதிதாக நமக்கு 10 லட்சம் தேவைப்படுகிறது. ஆனால் அவ்வளவு தொகை நம் கையில் இல்லை. இன்னொருவர் 10 லட்சத்தை எங்கு முதலீடு செய்யலாம் என்று தேடி வருகிறார்.  அவரிடம் போய் உதவி கேட்கிறோம். அவரும் நம் தொழிலுக்கு உதவ முன்வந்து விட்டார்.

நிதி அளிக்க வந்திருக்கும் நபர் காசு கொடுக்கத் தயார். தொழில் தொடங்கும்போது நிதி அளித்த ஏஞ்சல் இன்வெஸ்டருக்கு 20% நிறுவனப் பங்குகளை கொடுத்துள்ளோம். அதே போல் இப்போது காசு கொடுக்க வரும் நபருக்கும்  காசுக்கு பதிலாக நிறுவனத்தின் பேரில் உள்ள 50% இல் ஒரு குறிப்பிட்ட பங்குகளை கொடுக்க வேண்டும் அல்லவா? எவ்வளவு பங்குகளுக்கு எவ்வளவு பணம் என்று பேசிய பின்னர், அவர் நமது நிறுவனத்தில் முதலீடு செய்வார். பின்னர் நம் நிறுவனத்தின் பேரில் உள்ள பங்கில் ஒரு பகுதியை அவருக்கு மாற்றி அவரை நம் நிறுவனத்தின் பங்குதாரர் ஆக்கிவிடுவோம்.

இப்போது  நம் நிறுவனத்தின் பங்கீடு

எனக்கு 30%, ஏஞ்சல் இன்வெஸ்டருக்கு 20%, வென்ச்சர் முதலீட்டாளருக்கு 10%, நிறுவனத்திற்கு 40% உரிமை உள்ளது என்று மாறி விடும்.

இத்தோடு நின்று விடாமல், ஒவ்வொரு முறை தொழிலை விரிவு படுத்தும்போதும் பணத்தேவைக்காக முதலீட்டாளர்கள் உள்ளே வந்தால் அவர்களுக்கும் இப்படி பணத்திற்கு பதில் பங்குகள் பிரியும்.

இதையும் படிங்க....டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளுக்கான விதிமுறைகள் மாற்றம்!

வென்ச்சர் முதலீட்டாளர்கள் தரும் பணத்தை நிறுவனத்தின் சீரிஸ் பி பண்டிங்(SERIES B funding) என்று சொல்வர். வென்ச்சர் முதலீட்டாளர்கள் தனி நபராகவோ கூட்டமைப்பாகவோ இருக்கலாம்.

விரிவாக்கத்திற்காக நிறுவனத்தின் பத்திரத்தை அடகு வைக்காமல், கடன் வாங்காமல், குறைந்த பங்கை விற்று தொழிலை வளர்க்கும் யுத்தி இது. தொழிலில் உரிமையும் போகாமல் அதே சமயம் வளர்ச்சியும் பெரும் வழி இது.

First published:

Tags: Business, Investment