ரேஷன் கார்டு முதல் பாஸ்போர்ட் வரை எல்லாவற்றிற்கும் இப்போது ஆதார் தான் முக்கிய ஆவணமாக கேட்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஆதார் அட்டையில் ஏதும் பிழை இருந்தால் அது எல்லா அடையாள அட்டைகளிலும் பிரச்சனையை உண்டாகும்.
ஒரு தரவில் இருப்பது போல ஆதாரில் இல்லை என்றால் அதை சரியான ஆவணம் இல்லை என்று நிராகரித்து விடுகின்றனர்.அப்படி இருக்கும்போது ஆதாரில் உள்ள தகவல்கள் முற்றிலும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு இ- சேவை மையங்களுக்கும் ஆதார் சேவை மையங்களுக்கும் தான் ஓட வேண்டுமா என்று கேட்டால் இல்லை. ஆதாரின் ஒரு சில விவரங்களை வீட்டில் இருந்தே ஆன்லைனில் சரி செய்து கொள்ளலாம். அது குறித்த விபரங்களை இதில் காண்போம்.
ஆதார் ஆன்லைன் சேவையின் மூலம் நான் என்ன விவரங்களைப் புதுப்பிக்க முடியும்?
ஆதார் ஆன்லைன் சேவையின் மூலம் உங்கள் பெயர், பாலினம், பிறந்த தேதி (DoB), முகவரி மற்றும் மொழி ஆகியவற்றைப் புதுப்பிக்கலாம்.
இதையும் படிங்க: வருமான ஆதாரம் தொடர்பான ஆவணங்கள் இல்லாமல்கூட நீங்க வங்கி லோன் பெறலாம்! - எப்படி தெரியுமா?
ஆதார் தரவை எத்தனை முறை புதுப்பிக்கலாம்?
ஆதார் தகவலைப் புதுப்பிக்க பின்வரும் வரம்புகள் பொருந்தும்:
பெயர்: வாழ்நாளில் இரண்டு முறை மாற்றலாம்
பாலினம்: வாழ்நாளில் ஒருமுறை
பிறந்த தேதி: வாழ்நாளில் ஒருமுறை மாற்றிக்கொள்ளலாம்
ஆதாரில் எனது பெயரில் என்ன மாற்றங்களைச் செய்யலாம்? முழு பெயரையும் மாற்ற முடியுமா?
உங்கள் பெயரில் உள்ள சிறு திருத்தங்களை மட்டுமே நீங்கள் வீட்டில் இருந்து ஆன்லைனில் செய்ய முடியும் . முழு பெயரையும் மாற்ற வேண்டும் என்றால் சேவை மையங்களுக்கு தான் செல்ல வேண்டும்.
சிறிய மாற்றங்கள் என்றால் எதுவெல்லாம் அடங்கும் ?
அதை தவிர்த்து மற்ற எந்த மாற்றங்கள் பெயரில் இருந்தாலும் சேவை மையங்களை தான் நாட வேண்டும்.
என் தந்தை பெயர் உள்ள இடத்தில் என் கவண் பெயரை மாற்றிக்கொள்ள முடியுமா?
நிச்சயம் முடியும். திருமணம் ஆனா பெண்கள் அவர்களது தந்தை பெயர் இருக்கும் இடத்தில கணவர் பெயரை ஆன்லைனிலேயே மாற்றிக்கொள்ளலாம்.
இதையும் படிங்க: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதில் புதிய வசதி.. 2 நிமிடம் கூட ஆகாது.. இதோ அதற்கான ஈஸியான ஸ்டெப்ஸ்
ஆன்லைன் விவரங்களை புதுப்பிக்க என்ன ஆவணங்கள் தேவை?
பெயர் மாற்றத்திற்கு : மாற்ற விரும்பும் பெயர் சரியாக பொறிக்கப்பட்டுள்ள எதாவது ஒரு அடையாளச் சான்று (PoI) இன் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்.
பிறந்த தேதிக்கு: பிறந்த தேதிக்கான ஆதாரத்தின் (PoB) ஸ்கேன் செய்யப்பட்ட நகல் .
பாலினம்: எதுவுமில்லை.
கணவர் பெயர் உள்ளீடு: திருமண பதிவு சான்றிதழ்
இணைய தள முகவரி : https://myaadhaar.uidai.gov.in/
கட்டணம் எவ்வளவு ஆகும்?
ஆதரின் விபர மாற்றத்திற்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். அதை ஆன்லைனிலேயே கட்டிவிடலாம்.
இந்தச் சேவையைப் பயன்படுத்தும் போது, உங்கள் மொபைல் எண் ஆதாரில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். அதே போல அந்த எண் செயலில் உள்ளதா OTP வரும் நிலையில் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhaar card