• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • தொடர்ச்சியான வைப்புநிதிகளுக்கு வங்கிகள் எவ்வளவு வட்டி விகிதம் வழங்குகின்றன? முழு விவரம்!

தொடர்ச்சியான வைப்புநிதிகளுக்கு வங்கிகள் எவ்வளவு வட்டி விகிதம் வழங்குகின்றன? முழு விவரம்!

 வட்டி விகிதம்

வட்டி விகிதம்

நாட்டிலுள்ள முக்கிய வங்கிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ச்சியான வைப்புத்தொகைகளுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. நீங்கள் RD இல் சேமிக்கும் கால அளவின் அடிப்படையில் முக்கிய வங்கிகளின் தற்போதைய வட்டி விகிதங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

  • Share this:
    சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவை நிதித் திட்டமிடலின் முக்கிய கூறுகள். இந்த காரணி எதிர்காலத்திற்கான ஒரு பாதுகாப்பாக பார்க்கப்படுகிறது. முதலீட்டிலிருந்து அதிகப்பட்ச லாபம் கிடைக்கும் மற்றும் எதிர்காலத்தில் வருமானம் ஈட்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், பாதுகாப்பான மாற்றுகளைக் கருத்தில் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், பாதுகாப்பான முதலீடு குறைந்த ஆபத்து கொண்டவை ஆகும்.

    அதுமட்டுமின்றி, உத்தரவாதமான வருமானத்திற்கும் உறுதி அளிக்கிறது. தற்போது, பங்குச் சந்தை அல்லது மியூச்சுவல் ஃபண்டு போன்ற பல்வேறு முதலீட்டு ஆப்ஷன்கள் உள்ளன. இது நல்ல வருமானத்தை அளித்தாலும், ஆபத்து அதே அளவுக்கு அதிகம். எனவே பலர் பாதுகாப்பான முதலீடு என்ற கண்ணோட்டத்தில் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் சேமிப்பதையே பெரிதும் விரும்புகிறார்கள். எந்த முதலீட்டு வகைகளில் நீங்கள் சேமிப்பு அல்லது முதலீடு செய்தாலும், சில முக்கியமான காரணிகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

    வட்டி விகிதங்கள், முதலீட்டு கால அளவு, சந்தை நிலைமைகள் ஆகியவை இதில் அடங்கும். அதிக வட்டி என்றால் அதிக வருமானம், அதிக ஆபத்து மற்றும் குறைந்த வட்டி என்றால் குறைந்த வருமானம் மற்றும் குறைந்த ஆபத்து. முதலீட்டாளர்கள் உட்பட, பெரும்பாலான மக்கள் RD (ரெக்கரிங் டெப்பாசிட்) எனப்படும் தொடர்ச்சியான வைப்புநிதி மற்றும் FB (ஃபிக்சட் டெப்பாசிட்) எனப்படும் நிலையான வைப்புத்தொகையை விரும்புகின்றனர். இன்று பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தொடர்ச்சியான வைப்புத்தொகை சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு பல்வேறு திட்டங்கள் உள்ளன.

    ALSO READ |  கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை எங்கு கொடுக்க வேண்டும்? கொடுத்தால் என்ன கிடைக்கும் தெரியுமா?

    இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். தொடர் வைப்பு கணக்கைத் திறந்த பிறகு, சம்பந்தப்பட்ட வங்கியின் வட்டி விகிதத்தின்படி முதலீடு செய்யப்படும் தொகைக்கு வட்டி கிடைக்கும். நாட்டிலுள்ள முக்கிய வங்கிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ச்சியான வைப்புத்தொகைகளுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. நீங்கள் RD இல் சேமிக்கும் கால அளவின் அடிப்படையில் முக்கிய வங்கிகளின் தற்போதைய வட்டி விகிதங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

    எல்லா முதலீட்டு மற்றும் சேமிப்பு விருப்பங்களுக்கு உட்பட்டு இந்த திட்டங்களின் வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாறும். எனவே, நீங்கள் RD இல் பணம் சேமிக்கத் தொடங்குவதற்கு முன் வங்கிக்கு அல்லது சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று வட்டி விகிதத்தைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.

    ALSO READ |  SBI வாடிக்கையாளர்களே ஜாக்கிரதை.. இனிமே உங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் ஏன் தெரியுமா?

    தொடர் வைப்புத்தொகையின் நோக்கமே சேமிப்புப் பழக்கத்தை உண்டாக்குவதாகும். பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான RD கணக்கிற்கு அதிக வட்டி கொடுக்கின்றன. தனியார், கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகளில் ரெக்கரிங் டெபாசிட் கணக்குகளை தொடங்குவதன் மூலம் சேமிப்பை ஆரம்பிக்கலாம்.

    பாரத் ஸ்டேட் வங்கியில் RD டெபாசிட் தொகை 100 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த டெப்பாசிட்டின் கால அளவு 12 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை! மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. 2021 நிதியாண்டில், எஸ்பிஐ 1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரையிலான RD கணக்குகளுக்கு 5 சதவீத வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 5.50 சதவீதத்தையும் வழங்குகிறது. மேலும், 5 முதல் 10 வருட கால அளவுள்ள கணக்குகளுக்கு, சாதாரண குடிமக்களுக்கு 5.40 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.20 சதவீதமும் வட்டி விகிதம் வழங்குகிறது.

    ALSO READ |  ஃபிக்ஸட் டெபாசிட் & ரெக்கரிங் டெபாசிட் என்றால் என்ன? யார் எதை தேர்வு செய்யலாம்!

    பேங்க் ஆஃப் இந்தியா தனிநபர்கள் மற்றும் சிறுவர்களுக்கு, பார்வையற்றோர் மற்றும் கல்வி அறிவில்லாத நபர்களுக்கான தொடர்ச்சியான வைப்புநிதி கணக்குகளை வழங்கி, சேமிப்பை எளிதாக்கியுள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் 180 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை சேமிக்க முடியும். கிராமப்புற மற்றும் டவுன் பகுதிகளில் இருக்கும் நபர்களின் RD கணக்குகளில் குறைந்தபட்ச மாதத் தவணையாக 100 ரூபாயும், நகர்ப்புற மற்றும் மெட்ரோ நகரங்களுக்கு 500 ரூபாயும் நிர்ணயித்துள்ளது.

    2021 நிதியாண்டில், பேங்க் ஆஃப் இந்தியா 180 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான சேமிப்புக் காலத்திற்கு 4.75 முதல் 5.30 சதவீதம் வரை வட்டியை வழங்குகிறது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, RD கணக்கிற்கு 4.25 முதல் 5.10 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. இந்த வங்கி புதிதாக செயின்ட் ஸ்வசக்தி ஃப்ளெக்ஸி தொடர் வைப்புத் திட்டத்தையும் தொடங்கியுள்ளது. ஜனவரி 8, 2021 இன் முடிவின்படி 1 வருட காலத்திற்கு ரூ.2 கோடிக்கும் குறைவான RD-களுக்கு 4.90 சதவீத வட்டியும், ரூ.2 முதல் 10 கோடி மதிப்புள்ள RD-க்களுக்கு 3.50 சதவீத வட்டியும் வழங்குகிறது.

    ALSO READ |  ரெக்கரிங் டெபாசிட்டின் வட்டி விகிதங்களை பாதிக்கும் காரணங்கள் என்ன?

    டிசம்பர் 8, 2020 இன் முடிவின்படி RD திட்டங்களின் வட்டி விகிதம் குறித்த கூடுதல் தகவல்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன. HDFC வங்கி 2021 நிதியாண்டில், 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான தொடர் வைப்புத்தொகைகளுக்கு பொது மக்களுக்கு 3.50 முதல் 5.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் அதிக வட்டி விகிதத்துடன், 4 சதவிகித வட்டியை வழங்குகிறது.

    ஒரு ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரையிலான சேமிப்புக்காக, என்ஆர்ஐ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 5.10 முதல் 5.50 சதவீதம் வரை வட்டியுடன் கூடிய ஆர்டி வசதியையும் வழங்கியுள்ளது. எந்த விதமான RD கணக்காக இருந்தாலும், குறைந்தபட்சம் ரூ.1000 முதல் RD இல் சேமிக்கத் தொடங்கலாம். ஆக்சிஸ் வங்கி, 2021 நிதியாண்டில் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான 2 கோடி ரூபாய்க்கும் குறைவான தொடர் வைப்புத்தொகைக்கு 4.40 முதல் 5.75 சதவீதம் வட்டியை வழங்குகிறது. மாறக்கூடிய தன்மை இருப்பதால், வட்டி விகிதங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

    ALSO READ |  தொடர் வைப்பு நிதிக்கு வங்கிகள் கொடுக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் திட்டங்கள்!

    IVISH RD திட்டத்தின் கீழ் 2021 நிதியாண்டில் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான தொடர்ச்சியான வைப்புகளுக்கு 3.50 முதல் 5.50 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை ICICI வங்கி வழங்குகிறது. விரிவான தகவல்கள் வங்கியின் இணையதளத்தில் உள்ளன. கூடுதலாக, லக்ஷ்மி விலாஸ் வங்கி மற்றும் YES வங்கி ஆகியவை RD கணக்குகளுக்கு 2 ஆண்டுகளுக்கான சேமிப்பின் மீது அதிகபட்சமாக 7.50 சதவீத விகிதங்களை வழங்குகின்றன. மேலும், லக்ஷ்மி விலாஸ் வங்கி, 3 மற்றும் 4 ஆண்டுகளுக்கான RD சேமிப்புக்கு 7.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

    நாட்டில் உள்ள தபால் நிலையங்களிலும் RD வசதி உள்ளது. RD இன் வட்டி விகிதம் 1 முதல் 3 வருட காலத்திற்கு 5.5 சதவீதமும், 5 வருட காலத்திற்கு 6.7 சதவீதமும் ஆகும். தற்போதைய வட்டி விகிதங்கள் மற்றும் பிற தனியார், கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகளின் தொடர் வைப்புகளின் விதிமுறைகள் குறித்த விவரங்கள் அந்தந்த வங்கியின் இணையதளத்தில் கிடைக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: