ஒரு வருட எஃப்டிகளுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகள் பற்றி தெரியணுமா? அப்ப இத படிங்க

ஒரு வருட எஃப்டிகளுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகள் பற்றி தெரியணுமா? அப்ப இத படிங்க

காட்சிப் படம்

ஒரு வருட எஃப்டிகளுக்கு தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களின் விவரம் பற்றி தெரிந்துக்கொள்ள இதை படியுங்கள்..

  • Share this:
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் முதலீட்டு கருவியாக, fixed deposit என்பது உங்கள் சேமிப்பை மிகுந்த பாதுகாப்போடு வளர்ப்பதற்கான சிறந்த வழியாக  பார்க்கப்படுகிறது.ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்யவும், உங்கள் வசதிக்கு ஏற்ப தவணைக் காலத்தை தேர்வு செய்யவும் இது மிகவும் விருப்பமான வழிகளில் ஒன்றாகும். முன்பே தீர்மானிக்கப்பட்ட தவணைக்காலம் முடிந்த பிறகு, உங்கள் முதலீட்டுக்கான வட்டி விகிதத்தின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட காலம் முழுவதும், நீங்கள் வட்டி தொகையை சம்பாதிக்க முடியும். 

உங்கள் முதலீட்டுத் தொகை ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் லாக் செய்யப்பட்டவுடன், வட்டி விகிதங்கள் அல்லது சந்தை ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றால் மேலும் பாதிக்கப்படாமல் இருக்கும். எனவே, உங்கள் வைப்புத்தொகையில் உத்தரவாத வருமானத்தை நீங்கள் பெறலாம். மேலும் உங்கள் வட்டியை குறிப்பிட்ட கால இடைவெளியில் அல்லது மெச்சூரிட்டியின் போது பெற்றுக்கொள்ளும் விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். வழக்கமாக, எஃப்டிக்கான வரையறுக்கும் அளவுகோல் என்னவென்றால், முதிர்ச்சிக்கு முன்னர் பணத்தை வித்டிரா செய்ய முடியாது. 

ஆனால் அபராதம் செலுத்திய பிறகு அவற்றை நீங்கள் வித்டிரா  செய்துக்கொள்ளலாம். நீங்கள் பிக்சட் டெபாசிட்டை எளிதாக புதுப்பிக்கலாம். உங்கள் டெபாசிட்களை புதுப்பிப்பதன் மூலம் கூடுதல் விகித நன்மைகளையும் நீங்கள் பெறலாம். வருமான வரி சட்டம் 1961 இன் கீழ் பிக்சட் டெபாசிட்க்கான வரி மூலதனத்தில் பிடிக்கப்படும். மேலும் தற்போது சிறிய தனியார் வங்கிகள் எஃப்டிகளுக்கான வட்டி விகிதங்களை அரசு வங்கிகளை காட்டிலும் அதிகமாகவே வழங்குகின்றன. டெபாசிட் தொகையை பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் போட்டியைக் கருத்தில் கொண்டு தனியார் வங்கிகள் சிறந்த விகிதங்களை வழங்குகின்றன. எவ்வாறாயினும், எஃப்.டி.களில் முதலீடு செய்வதற்கு முன்பு நீங்கள் ஒரு முழுமையான இடர் மதிப்பீடு மற்றும் வங்கியின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

 

ஒரு வருட எஃப்டிகளுக்கு தனியார் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள்:

சிறிய தனியார் வங்கிகள் ஒரு வருட எஃப்.டி.களில் 6.5% வட்டி விகிதங்களை வழங்குகின்றன. உதாரணமாக, இண்டஸ்இண்ட் வங்கி ,ஆர்.பி.எல் வங்கி மற்றும் யெஸ் வங்கி  ஆகியவை ஒரு வருட எஃப்.டி.யில் சுமார் 6.5% வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த வட்டி விகிதங்கள் பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்படுவதை விட அதிகம் ஆகும். இருப்பினும், முன்னணி தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது சிறு நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்கள் மேலும் அதிகம் என கூறப்படுகிறது. 

ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் நிதி நிறுவனங்கள், ஒரு வருட எஃப்.டி.க்களில் முறையே 5.50% மற்றும் 6.50% வட்டியை வழங்குகின்றன. முன்னணி தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி  ஒரு வருட எஃப்.டி.க்களுக்கு 4.90% வட்டியை வழங்குகின்றன. ஆக்சிஸ் வங்கி 5.15% வட்டியை வழங்குகிறது. கோடக் மஹிந்திரா வங்கி ஒரு வருட எஃப்.டி.க்கு 4.50% வட்டியை வழங்குகிறது. பிற தனியார் வங்கிகளை ஒப்பிடும் போது இந்த முன்னணி தனியார் வங்கிகள் குறைத்த வட்டி விகிதங்களையே வழங்குகின்றன.

ஒரு வருட எஃப்டிக்களில் பொதுத்துறை வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள்:

பொதுத்துறை வங்கிகளான யூனியன் வங்கி , பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் & சிந்து வங்கி மற்றும் கனரா வங்கி ஆகியவை ஒரு வருட எஃப்.டி.களுக்கு 5.25% வட்டியை வழங்குகின்றன. நிறுவப்பட்ட வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகியவை ஓராண்டு எஃப்.டி.களில் முறையே 5% மற்றும் 4.90% வட்டியை வழங்குகின்றன. 

இது தவிர பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு வருட எஃப்.டி.க்கு 5.20% வட்டியை வழங்குகின்றன.  நீங்கள் ரூ.5 லட்சம் வரை பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம்  உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதேபோல குறைந்தபட்ச முதலீட்டு தொகை ஒவ்வொரு வங்கிகளுக்கும் வேறுபடுகிறது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில், இந்த தொகை ரூ.100 முதல் ரூ.10,000 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published: