• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • மலிவான வட்டிக்கு Personal Loan வழங்கும் வங்கிகள் விவரம் பற்றி தெரியணுமா? இதோ லிஸ்ட்

மலிவான வட்டிக்கு Personal Loan வழங்கும் வங்கிகள் விவரம் பற்றி தெரியணுமா? இதோ லிஸ்ட்

தனி நபர் கடன்

தனி நபர் கடன்

உங்களுக்கு personal loan எந்த வங்கியில் வாங்குவது என்பது பற்றி தெரியவில்லையா.அப்போ இதை படித்து personal loan பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

  • Share this:
கடன் வாங்க விரும்புவோருக்கு தனிநபர் கடன்கள் ஒரு வரப்பிரசாதம் எனலாம். முக்கியமாக, இந்த கொரோனா  ஊரடங்கு சூழலில் மக்கள் பண நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதால் தனிநபர் கடன் வாங்குவது சற்று நிவாரணம் அளிக்கக்கூடும். பல்வேறு தேவைகளுக்காக தனிநபர் கடன்கள் சிறந்த சாய்ஸாக கருதப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், நீங்கள் காட்டும் செக்யூரிட்டியை விட கடன் தொகை அதிகமாக இருப்பதற்கான சாத்தியம் தனிநபர் கடன்களில் மட்டுமே உண்டு. எனினும், நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால் மட்டுமே தனிநபர் கடன் வாங்குவது சாத்தியம்.

மேலும், ஒரு நிறுவனத்திடமோ, சுய தொழில் வாயிலாகவோ வருமானம் பெறுவோருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். மற்ற சில்லறை கடன்  வகைகளைப் போலவே, அரசுக்கு சொந்தமான வங்கிகளும்  தனிநபர் கடன்களுக்கான மலிவான வட்டி விகிதங்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றன.

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் தனிநபர் கடன் கட்டண விகிதம் ரூ.5 லட்சம் கடனுடன் ஐந்தாண்டு காலத்துக்கு 8.9 சதவீதத்தில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை 8.95 சதவீதத்தை, அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பரான வட்டி விகிதங்கள் காரணமாக ஒப்பீட்டளவில் இந்த விகிதங்கள் குறைவாக இருப்பதாகத் தோன்றினாலும், தங்கக் கடன்கள்  போன்ற பாதுகாப்பான கடன்களை விட இவை இன்னும் அதிகமாக உள்ளன, அதில் வட்டி விகிதங்கள் மற்றும் டாப்-அப் ஹோம் லோன்கள் 7 சதவீதத்தில் தொடங்குகின்றன. எனவே, ஒப்பீட்டளவில், தனிநபர் கடன்கள் விலை உயர்ந்தவை, ஏனெனில் இவை பாதுகாப்பற்ற கடன்கள் ஆகும்.

எண்டோவ்மென்ட் காப்பீட்டுக் பாலிசிகள், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி , பொது வருங்கால வைப்பு நிதி , பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகள் உள்ளிட்ட நிதிகளை திரட்டுவதற்கான அனைத்து விருப்பங்களையும் நீங்கள் கவனிக்கவேண்டும்.

 

தடைக்கு பின்னர் சுமைகளை மதிப்பீடு செய்தல் :

நீங்கள் ஏற்கனவே தனிநபர் கடன்களை எடுத்திருந்தால் அல்லது கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்த ஆறு மாத கால அவகாசத்தை தேர்வு செய்திருந்தால், உங்கள் கடன் சுமையை குறைக்க நீங்கள் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட கடன் பாக்கியை சரிசெய்ய, அத்தகைய சொத்துக்களுக்கு எதிராக கடன் வாங்கவேண்டுமா என்று யோசித்து செயல்படுங்கள். இல்லையென்றால், கடன் என்ற வலையில் சிக்கிக்கொள்வீர்கள். தரவுத் தொகுப்பிற்காக அனைத்து பட்டியலிடப்பட்ட  பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கான தனிப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் கருதப்படும்.

தங்கள் வலைத்தளங்களில் தரவு கிடைக்காத வங்கிகள் கருதப்படுவதில்லை. டிசம்பர் 31, 2020 நிலவரப்படி அந்தந்த வங்கிகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் இவை. வட்டி விகிதங்களின் அடிப்படையில் வங்கிகள் ஏறுவரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளன - அதாவது, தனிநபர் கடன்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தை வழங்கும் வங்கி மேலும், மிக உயர்ந்த இடத்தில் உள்ளது கீழுமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஐந்து வருட கால அவகாசத்துடன் ரூ.5 லட்சம் கடனுக்காக அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டி விகிதங்களின் அடிப்படையில் EMI கணக்கிடப்படுகிறது. செயலாக்கம் மற்றும் பிற கட்டணங்கள் EMI கணக்கீட்டிற்கு பூஜ்ஜியமாக கருதப்படுகிறது. வட்டி மற்றும் கட்டணங்கள் வங்கிகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து மாறுபடலாம்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: