Home /News /business /

தங்கத்தின் விலை எப்போது குறையும்? எப்போது அதிகரிக்கும்? விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது..

தங்கத்தின் விலை எப்போது குறையும்? எப்போது அதிகரிக்கும்? விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது..

Gold Price

Gold Price

Gold Price: விலைவாசி, கரன்சி மதிப்பு தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும்

    இந்தியாவில் தங்கம் விலை அதிகரிப்பதும், குறைவதும், சர்வதேச காரணிகளை கொண்டே நடைபெறுகிறது. தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்யும் காரணிகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...

     

    தங்கம் விலையை நிர்ணயம் செய்வதில், சர்வேத அளவில் முக்கிய பங்கு வகிப்பது, தேவைக்கும், இருப்புக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தான். தேவை அதிகமாகும்போது, தங்கத்தின் இருப்பு குறைந்தால், விலை பன்மடங்கு அதிகரிக்கிறது. கொரோனா காலத்தில் சவரன் 50 ஆயிரம் ரூபாய் வரை சென்றதற்கான காரணம், பங்குச்சந்தை முதலீடுகள், தங்கம் என்ற பாதுகாப்பான முதலீட்டை நோக்கி திரும்பியதுதான்.

    விலைவாசி மற்றும் கரன்சி மதிப்பும் முக்கிய காரணம். விலைவாசி உயரும்போது ஒரு நாட்டின் கரன்சி மதிப்பில் இது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கரன்சி மதிப்பு குறையும்போது அதிக தொகை கொடுத்து தங்கம் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். தங்கம் விலை பெரும்பாலும், விலைவாசி ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறே இருக்கும் என்பதால், விலைவாசி ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

    அதேபோல், வங்கியில் வட்டி விகிதம் குறைந்தால், வருமானம் குறையும். இதனால் தங்கத்தில் முதலீடு அதிகரித்து அதன் விலை உயரும். வங்கி முதலீடுகள் பெரும்பாலும், தங்கத்தை விட மிகவும் பாதுகாப்பானவை. எனவே, வங்கியில் வட்டி விகிதம் உயர்ந்தால், முதலீடுகள் அதிக வட்டி வழங்கும் வங்கிகளுக்கு செல்லும். இதனால் தங்கத்தின் விலை குறையும்.

    சர்வதேச அளவில், அதிகம் தங்கம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவிற்கு தான் 2 ம் இடம். இந்தியாவில், பண்டிகை காலத்தில், தங்கம் விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும். இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

    பொதுவாக மைய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்து வைத்திருக்கும். அரசின் கொள்கை முடிவுகளை பொறுத்து, தங்கத்தை வாங்குவதோ அல்லது விற்பதோ நடைபெறும். அவ்வாறு நடக்கும் போது தங்கம் விலையில் மாற்றம் இருக்கும்.

     
    Published by:Arun
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி