ஹோம் /நியூஸ் /வணிகம் /

மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை எப்போது பெற முடியும்! 

மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை எப்போது பெற முடியும்! 

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மத்திய சிவில் சர்வீசஸ் விதிகள், 2021 இன் விதி 10-ன் படி, NPS-ன் கீழ் உள்ள ஒவ்வொரு அரசு ஊழியரும், அரசுப் பணியில் சேரும் போது, ​​NPS-ன் கீழ் பலன்களைப் பெற Form 1-ல் விருப்பத்தை பயன்படுத்த வேண்டும்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் போன்ற பல மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு திரும்பி வருகின்றன.

  2003-ஆம் ஆண்டு டிசம்பரில் BJP தலைமையிலான NDA அரசால் பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டு, அதற்கு மாற்றாக புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஏப்ரல் 1, 2004 முதல் அமலுக்கு வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டம் ( Old Pension Scheme - OPS) ஓய்வூதியம் சார்ந்த திட்டமாக இருக்கும் நேரம், புதிய ஓய்வூதியத் திட்டமான் National Pension System (NPS) என்பது முதலீட்டு மற்றும் ஓய்வூதிய திட்டமாகும்.

  ஓய்வுக்குப் பிறகு நிலையான மாத வருமானத்தை உறுதியளித்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூட சில நிலைமைகளின் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

  பணியில் இருக்கும் போது NPS-ன் கீழ் உள்ள அரசு ஊழியர் மரணம் அடைந்தால் அவரது குடும்பத்தினர் பழைய ஓய்வூதிய திட்டத்தின் (OPS) கீழ் பலன்களை பெற மத்திய குடிமைப் பணிகள் விதிகள், 2021ன் கீழ் ஒரு விருப்பம் உள்ளது. அதே போல பணியில் இருக்கும் போது அவரால் செயல்பட முடியாத அளவிற்கு உடல்நிலை கோளாறு அல்லது ஊனம் ஏற்பட்டாலும், தவிர்க்க முடியாத காரணங்களால் அரசு ஊழியர் சர்வீஸிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று விதி கூறுகிறது.

  Read More: ரூபாய் நோட்டில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும்..பாஜக எம்எல்ஏ கோரிக்கை!

   ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களின் சேவை தொடர்பான விஷயங்களை நிர்வகிக்க மத்திய குடிமைப் பணிகள் விதிகள், 2021 அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளின் விதி எண் 10, தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் உள்ள ஒவ்வொரு மத்திய அரசு ஊழியரும் சில நிகழ்வுகளின் அடிப்படையில் தேசிய ஓய்வூதிய முறை அல்லது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுவதற்கான விருப்பத்தை பற்றி கூறுகிறது.

  படிவம் 1:

  மத்திய சிவில் சர்வீசஸ் விதிகள், 2021 இன் விதி 10-ன் படி, NPS-ன் கீழ் உள்ள ஒவ்வொரு அரசு ஊழியரும், அரசுப் பணியில் சேரும் போது, ​​NPS-ன் கீழ் பலன்களைப் பெற Form 1-ல் விருப்பத்தை பயன்படுத்த வேண்டும் அல்லது மத்திய சிவில் சேவை (ஓய்வூதியம்) விதிகள் அல்லது மத்திய சிவில் சேவை (அசாதாரண ஓய்வூதியம்) விதிகளின் கீழ் அவர் இறந்தால் அல்லது ஊனமுற்றதன் காரணமாக அல்லது செல்லாததால் ஓய்வு பெற்றதன் காரணமாக பணியிலிருந்து வெளியேறும் போது பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே பணியில் உள்ள மற்றும் NPS-ன் கீழ் உள்ள அரசு ஊழியர்களும் இத்தகைய விருப்பத்தைப் பயன்படுத்தலாம் என அறிவிப்பு கூறுகிறது.

  படிவம் 2:

  ஒவ்வொரு அரசு ஊழியரும் குடும்பத்தின் விவரங்களை படிவம் 2-ல் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உயரதிகாரி அரசு ஊழியரிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து தகவல் தொடர்புகளையும் ஒப்புக்கொண்டு, எதிர் கையொப்பமிட்டு, சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் சர்விஸ் புக்கில் ஒட்ட வேண்டும்.

  இந்த ஆப்ஷனை எத்தனை முறை திருத்தலாம்?

  இந்த ஆப்ஷனை ஊழியர்கள் தங்களின் ஓய்வுக்கு முன் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தி கொள்ளலாம் என்று DoPPW தெரிவித்துள்ளது. எதிர்பாராதவிதமாக பணியை தொடர முடியாத ஊழியர் புதிய ஆப்ஷனை சமர்ப்பிக்கும் விருப்பத்தை பெறுவார்கள். சர்விஸின் போது ஊழியர் இறந்தால், இறப்பதற்கு முன் அவர் கடைசியாகப் பயன்படுத்திய ஆப்ஷன இறுதியானது, ஆப்ஷனை திருத்த குடும்பத்தினருக்கு உரிமை இல்லை.

  Read More: பக்கென தீப்பற்றி எரிந்த பைக் ஷோரூம்.. சாம்பலாய் போன 36 எலெக்ட்ரிக் பைக்குகள்!

  முன்கூட்டியே இறந்துவிட்டால்.!!

  ஒரு ஊழியர் 15 வருட சேவையை முடிப்பதற்கு முன் அல்லது விதிகள் 2021-ன் அறிவிப்பின் 3 ஆண்டுகளுக்குள் ஆப்ஷனை பயன்படுத்தாமல் இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு மத்திய சிவில் சர்வீசஸ் விதிகளின்படி ஊழியர் தேர்ந்தெடுத்திருக்கும் ஆப்ஷனின் படி குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஊழியரால் எந்த விருப்பமும் பயன்படுத்தப்படாத நிலையில், சேவையிலிருந்து விடுவிப்பதற்கான உரிமைகோரல் அல்லது சந்தாதாரரின் மரணம் குறித்த குடும்பத்தின் கோரிக்கையானது இயல்புநிலை விருப்பமாக (default option ) கருதப்பட்டு PFRDA விதிமுறைகள் 2015ல் கட்டுப்படுத்தப்படும்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Central govt, Pension Plan