Home /News /business /

PayTM மற்றும் கூகுள் பே நிறுவனங்களுக்கு போட்டியாக கேஷ்பேக் - வாட்ஸ்அப்பின் புதிய திட்டம்

PayTM மற்றும் கூகுள் பே நிறுவனங்களுக்கு போட்டியாக கேஷ்பேக் - வாட்ஸ்அப்பின் புதிய திட்டம்

வாட்ஸ் அப் பே

வாட்ஸ் அப் பே

Whatsapp Payments CashBack: பயனாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனை என்பது ரூ.1 என்ற மதிப்பை மட்டுமே கொண்டிருந்தாலும் கூட, அவர்களுக்கான கேஷ்பேக் சலுகையை வழங்க வாட்ஸ் அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது

வாட்ஸ் அப்-பில் ஃபைல் ஷேரிங் செய்வதோடு மட்டுமல்லாமல் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு வெகு நாட்கள் ஆகிறது. இருப்பினும், திரளான பயனாளர்களை இதுவரையிலும் சென்றடையவில்லை. குறிப்பாக, பேடிஎம், கூகுள் பே மற்றும் ஃபோன் பே போன்ற பேமெண்ட் ஆப்-களை பயன்படுத்தும் அளவுக்கு, வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் பேமெண்ட் சேவைக்கு வரவில்லை.

இத்தகைய சூழலில், இந்தியாவில் 100 மில்லியன் பயனாளர்களை இணைத்துக் கொள்ள வாட்ஸ் அப் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இதனால், நாட்டில் ஏற்கனவே உள்ள யூபிஐ சேவை நிறுவனங்களுக்கு மிகுந்த சவால் எழுந்துள்ளது.

வாடிக்கையாளர்களை ஈர்க்க கவர்ச்சிகரமான சலுகை

இந்தியாவில் வாட்ஸ் அப் பேமெண்ட் சேவையை நோக்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் எண்ணற்ற சலுகைகளை வழங்குவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்தச் சலுகைகள் அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

தனிநபர் பரிவர்த்தனைகளுக்கு சலுகையில் முக்கியத்துவம்

வாட்ஸ் அப் பேமெண்ட் சேவையில் தனிநபர்களுக்கு இடையே நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று, வியாபார ரீதியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கும் சலுகை வழங்கப்படும் என தெரிகிறது.

எவ்வளவு கேஷ்பேக் கிடைக்கும்?

வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும்போது அவர்களுக்கு ரூ.33 வரையில் கேஷ்பேக் வழங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பல கோடிக்கணக்கான பயனாளர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் யூபிஐ சேவையில் நுழையும்போதே வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் கொடுத்து தான் அதிக மக்களை கவருகின்றனர்.

Read More : கம்மியான வட்டியில் கடன் தரும் வங்கிகளின் லிஸ்ட்.. 1 லட்சத்திற்கு இவ்வளவு தான் ஈஎம்ஐ!


பரிவர்த்தனை தொகை ரூ.1 என்றாலும் கேஷ்பேக் கிடைக்கும்

பயனாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனை என்பது ரூ.1 என்ற மதிப்பை மட்டுமே கொண்டிருந்தாலும் கூட, அவர்களுக்கான கேஷ்பேக் சலுகையை வழங்க வாட்ஸ் அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்தப் பரிவர்த்தனை நேர்மையானதாக இருக்க வேண்டும் என்பதை வாட்ஸ் அப் உறுதி செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனென்றால் சில ஆண்டுகளுக்கு முன்பாக கூகுள் பே பயன்பாட்டிற்கு வந்தபோதும் இதேபோல கேஷ்ப்பேக் வழங்கப்பட்டது.

அந்த சமயத்தில் பயனாளர்கள் பலர் கேஷ்பேக் பெறுவதற்காக தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களுக்கு ரூ.1 அனுப்பி, கேஷ்பேக் தொகையை பெற்றுக் கொண்டனர்.

பிற நிறுவனங்களுக்குப் போட்டி

யூபிஐ பேமெண்ட் சேவைகளில் ஏற்கனவே கோலோச்சி வரும் கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற சேவைகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்துவதாக வாட்ஸ் அப் அமையும் என்று கருதப்படுகிறது. முன்னதாக, குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு ரூ.100 கேஷ்பேக் வழங்கும் சலுகையுடன் வாட்ஸ் அப் பேமெண்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Business, Payment App, Technology, UPI, WhatsApp

அடுத்த செய்தி