ஹோம் /நியூஸ் /வணிகம் /

இனி பணம் அனுப்புவது ஈஸி... வாட்ஸ் அப் பேங்கிங்கை அறிமுகப்படுத்திய பிரபல வங்கிகள்! எப்படி தொடங்குவது?

இனி பணம் அனுப்புவது ஈஸி... வாட்ஸ் அப் பேங்கிங்கை அறிமுகப்படுத்திய பிரபல வங்கிகள்! எப்படி தொடங்குவது?

வாட்ஸ் அப் வங்கி சேவை

வாட்ஸ் அப் வங்கி சேவை

பாரத ஸ்டேட் வங்கி , ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வங்கி வசதியை வழங்கி வருகின்றது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ் அப் பேங்கிங் சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கும் வங்கிகள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

  முன்பெல்லாம் பரிவர்த்தனை என்பது அதிக நேரம் எடுக்கும் விஷயமாக பார்க்கப்பட்டது. ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்புவது, ஒரு அக்கவுண்டில் இருந்து மற்றொரு அக்கவுண்டுக்கு பணம் அனுப்புவது போன்றவை அதிக நேரம் எடுக்கும் காரியமாக இருந்தது. ஆனால் மொபைல் பேக்கிங் வந்த பிறகு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது போல் மாறிவிட்டது. UPI பரிவர்த்தனைகளும் தற்போது அனைவராலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை காட்டுகிறது; நேரத்தையும் மிச்சப்படுகிறது.

  8.30% வரை வட்டி.. பிக்சட் டெபாசிட்டில் பணம் போட்டவர்களுக்கு அடித்தது யோகம்!

  இதன் அடுத்தக்கட்டமாக பிரபல வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி , எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வங்கி வசதியை வழங்கி வருகின்றது. இதன் மூலம் நீங்கள் பணம் அனுப்ப நினைக்கும் நபருக்கு வாட்ஸ் அப் மூலமே பணத்தை அனுப்பிடலாம். அதை எப்படி தொடங்குவது? என்பதை இப்போது விரிவாக பார்க்கலாம்.

  பர்சனல் லோன் வாங்கும் ப்ளான் இருக்கா? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க!

  எஸ்பிஐ :

  இதனை ஆக்டிவேட் செய்ய வங்கியில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 917208933148 என்ற எண்ணிற்கு WAREG A/C எண்ணை டைப் செய்து வாட்ஸ் அப்பிலிருந்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.

  ஆக்சிஸ் வங்கி:

  7036165000 என்ற எண்னை முதலில் மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். பின்பு சேமித்த எண்ணுக்கு "ஹாய்" என்ற மெசேஜை வாட்ஸ் அப்பிலிருந்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் ​​கணக்குகள்/காசோலைகள், கிரெடிட் கார்டுகள், டெர்ம் டெபாசிட்கள் மற்றும் கடன்கள் போன்ற பல சேவைகளை பெறலாம்.

  ஐசிஐசிஐ :

  உங்கள் மொபைலில் 8640086400 என்ற எண்ணைச் சேமித்து வங்கியில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து அந்த எண்ணிற்கு 'ஹாய்' என்ற மெசெஜை வாட்ஸ் அப்பிலிருந்து அனுப்ப வேண்டும். அதே போல் OPTIN என்று டைப் செய்து 9542000030 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

  எச்டிஎஃப்சி :

  வாடிக்கையாளர்கள் 24x7 தடையில்லா டிரான்ஸாக்ஷன்களை செய்துகொள்ள முடியும், வங்கியில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 70700 22222 என்ற எண்ணுக்கு "ஹாய்" என்று வாட்ஸ் அப்பிலிருந்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bank, Money, WhatsApp