Home /News /business /

SBI, ICICI, HDFC Bank, Axis Bank, BOB வங்கி சேவைகளை வாட்ஸ்அப்பில் பெறலாம்... எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க

SBI, ICICI, HDFC Bank, Axis Bank, BOB வங்கி சேவைகளை வாட்ஸ்அப்பில் பெறலாம்... எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க

வாட்ஸ்அப் பேங்கிங்

வாட்ஸ்அப் பேங்கிங்

WhatsApp Banking | SBI, HDFC, ICICI, Bank of Baroda (BoB) மற்றும் Axis Bank போன்ற அனைத்து முன்னணி வங்கி வாடிக்கையாளர்களும் இனி சுலபமாக பண வரித்தனையை உங்களது வாட்ஸ்அப் பேங்கிங் வாயிலாக மேற்கொள்ளலாம். ஒவ்வொரு வங்கியும் வாட்ஸ் அப் பேங்கிங் பதிவு செய்வதற்காக பிரத்யேக தொலைப்பேசி எண்ணையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வங்கியில் கால்கடுக்க நின்ற காலங்கள் எல்லாம் மலையேறிப்போச்சு. யாருக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்றாலும் நொடியில் ஆன்லைன் பேங்கிங்கை அதிகளவில் உபயோகித்து வருகிறோம். 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாள்களும் எந்த இடையூறும் இல்லாமல் வங்கிச்சேவைகளை நாம் பெறுவதற்கு உபயோகமாக உள்ளது டிஜிட்டல் பேங்கிங். நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் என வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்துவரக்கூடிய இந்த நேரத்தில் வாட்ஸ்அப் பேங்கிங்கும் மக்களிடம் பிரபலமாகியுள்ளது.

நம்முடைய வாட்ஸ்அப் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் விரைவில் பணம் அனுப்ப முடியும். தற்போது வாட்ஸ்அப் பேங்கிங் சேவையை SBI, HDFC, ICICI, Bank of Baroda (BoB) மற்றும் Axis Bank போன்ற அனைத்து முன்னணி வங்கிகளும் கொண்டுள்ள நிலையில் எப்படி வாடிக்கையாளர்கள் பதிவு செய்து உபயோகிப்பது? என விரிவாக தெரிந்துக் கொள்வோம்…

எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்க்…

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கான வாட்ஸ்அப் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியது. இதனைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? மற்றும் மினி ஸ்டேட்மன்ட் (balance enquiry and mini statements) போன்றவற்றை பெற முடியும். இந்த சேவையைப் பெறுவதற்கு முன்னதாக வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 90226 90226 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் வாட்ஸ் அப் வங்கி சேவையை பதிவு செய்துக்கொள்ளலாம்.



HDFC வங்கி வாட்ஸ்அப் வங்கி:

HDFC Chat bank மூலம் வாட்ஸ்அப் வாயிலாக உங்களது வங்கி சேவையைப் பெற அனுமதிக்கிறது. இதன் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களும் 90க்கு மேற்பட்ட வங்கி சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகளை 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாள்களிலும் பெற முடியும். HDFC வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான சேவையாக உள்ள நிலையில், வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். எனவே வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 70700 22222 என்ற எண்ணைச் சேர்த்து, Hi என்று மெசேஜ் அனுப்பினால் போதும். உங்களுக்கு என்ன வங்கி சேவையைப் பெற வேண்டுமோ? கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.

Also Read : Whatsapp-ன் புதிய பாதுகாப்பு அம்சம்... மோசடி நபர்களிடமிருந்து காப்பாற்ற புது ஐடியா

ஐசிஐசிஐ வாட்ஸ்அப் வங்கி(ICICI whatsapp bank):

ICICI வாடிக்கையாளர்கள் 24*7 என ஆண்டின் 365 நாள்களும் வாட்ஸ்அப் வங்கி மூலமாக அனைத்து வங்கி சேவைகளையும் பெற முடியும். இதனைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரில் செல்லாமலே உடனடி கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதோடு Instasave யைப் பயன்படுத்தி நிலையான வைப்புத்தொகை, பில்கள் கட்டுவது, ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம். மேலும் ICICI டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, செக் புக், பாஸ்புக் பெறமுடியும்.



பாங்க் ஆப் பரோடா வாட்ஸ் அப் வங்கி:

வங்கி வாடிக்கையாளர்களின் சேவையை கருத்தில் கொண்டு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது பாங்க் ஆப் பரோடா. சமீபத்தில் இவ்வங்கி வாடிக்கையாளர்களின் நலன்களுக்காக புதிய டிஜிட்டல் வசதியான வாட்ஸ் அப் பேங்கிங் சேவையை அறிமுகப்படுத்துவதாக வங்கி இணையதளத்தில் தெரிவித்திருந்தது.

Also Read : UPI பேமெண்ட் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய 5 பாதுகாப்பு அம்சங்கள்

ஆக்சிஸ் வாட்ஸ்அப் வங்கி:

ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் இனி உங்களது வங்கியில் பெறக்கூடிய அனைத்து சேவைகளுக்கும் வாட்ஸ்அப் வங்கியையும் பயன்படுத்தலாம். பேலன்ஸ் என்கியூரி, மினி ஸ்டேட்மன்ட், காசேலை புத்தகங்கள், உடனடி சேமிப்பு கணக்குகள் உள்பட அனைத்து சேவைகளையும் இனி வாட்ஸ் அப் பேங்கிங் வாயிலாகப் பெறலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Banking, WhatsApp

அடுத்த செய்தி