பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்றால் என்ன? யாருக்கெல்லாம் பயன் அளிக்கும்?

மத்திய அரசிடமிருந்து நேரடியாக அளிக்கப்பட உள்ள இந்த நிதி உதவியானது 2018 டிசம்பர் 1 முதல் 2019 மார்ச் 31-ம் தேதி வரையிலும் கணக்கிடப்பட்டு வழங்கப்பட உள்ளது.

news18
Updated: February 1, 2019, 7:40 PM IST
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்றால் என்ன? யாருக்கெல்லாம் பயன் அளிக்கும்?
கோப்புப்படம்.
news18
Updated: February 1, 2019, 7:40 PM IST
பட்ஜெட் 2019 தாக்கல் செய்துள்ள மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டம் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்குக் கடன் அளித்து விட்டு அதைத் தள்ளுபடி செய்வதை விட உதவித்தொகையாக அளித்தால் அரசுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரியளவில் பாதிப்பு இருக்காது என்று கூறப்பட்டு வந்தது.

அதனை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு 2019 பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை 2,000 ரூபாய் என நிதி உதவி செய்ய உள்ளது.

இந்த நிதி உதவியைப் பெற வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு 2 ஹெக்டேருக்கு குறைவாக அதாவது 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாய இடம் வைத்திருக்க வேண்டும்.

மத்திய அரசிடமிருந்து நேரடியாக வங்கி கணக்கில் அளிக்கப்பட உள்ள இந்த நிதி உதவியானது 2018 டிசம்பர் 1 முதல் 2019 மார்ச் 31-ம் தேதி வரையிலும் கணக்கிடப்பட்டு வழங்கப்பட உள்ளது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்காக மத்திய அரசு 2019-2020 நிதி ஆண்டுக்கு 75,000 கோடி ரூபாயும், 2018-2019 நிதி ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளனர்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் இந்த நிதி உதவியானது ஏழை விவசாயிகளின் வருவாயாக மட்டுமில்லாமல் பயிர்காலங்களில் அவர்களுக்குத் தேவைப்படும் நிதியாகவும் இருக்கும். இதனால் கடன் வாங்குவது குறைந்து விவசாயிகள் கவுரமான வழிவகுக்கும்.

மேலும் பார்க்க: 
First published: February 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...