லைப் இன்சூரன்ஸ் பிரீமியம் என்பது பல காரணிகளை சார்ந்ததாக உள்ளது. அதிலும் குறிப்பாக புகைப்பிடிப்பவர்கள் ஆயுள் காப்பீடு எடுக்க விரும்பினால், அது உங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் புகைப்பிடிப்பது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பாக்கெட்டிற்கு கேடு விளைவிக்க கூடியதாக அமைந்துள்ளது.
புகைப்பிடிப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மோசமானதாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு உடல் நலக்குறைவு அல்லது மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த காரணத்திற்காக, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அத்தகையவர்களுக்கு ஆயுள் காப்பீட்டு விகிதங்களை அதிகரிக்கின்றன.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள கணிப்பின் படி, உலகின் சிகரெட் புகைப்பவர்களில் 12% பேர் இந்தியாவில் வாழ்கின்றனர், இதில் ஆண்டுக்கு 10 மில்லியன் மக்கள் இறக்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்பிடிப்பவர்களுக்கு இதய நோய், இரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக பீரியம் கட்டணத்தை வசூலிக்கின்றன.
புகைப்பிடிக்கும் பழக்கம் பல நூற்றாண்டுகளாகவே நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், இதய நோய் மற்றும் காசநோய் போன்ற பல்வேறு உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு மூலகாரணமாக விளங்குகின்றன. எனவே உங்கள் லைப் இன்சூரன்ஸ் பீரியமித்திற்கு இந்த பழக்கம் ஆபத்தானதாக கருத்தப்படுவதில் எவ்வித ஆச்சர்யமும் கிடையாது. லைப் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெறும் எழுத்துறுதி விதிகளின் படி, பாலிசி எடுப்பவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அது ஆயுள் காப்பீட்டின் பாலிசி பீரிமியத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்குகிறது.
also read : பெர்சனல் லோன் அல்லது கிரெடிட் கார்டு - எது உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்?
பாலிசி பஜார் டாட் காம் (Policy Bazzar.com) டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் வணிகத் தலைவர் சஜ்ஜா பிரவீன் சௌத்ரி கூறுகையில், “புகைபிடித்தல் மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பது நிரூபணமான உண்மை. எனவே ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களில் புகைபிடித்தல் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைகிறது.
புகைபிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில், புகைப்பிடிப்பவர்கள் தங்கள் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைக்கு சுமார் 50% அதிக பிரீமியங்களைச் செலுத்துகிறார்கள். உதாரணமாக, 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் 30 வயதான புகைப்பிடிக்காதவருக்கு, ரூ. 1 கோடி ஆயுள் காப்பீட்டுக்கான வருடாந்திர பிரீமியம் 12,173 ரூபாய் ஆக இருக்கும். அதேசமயம், புகைப்பிடிப்பவரின் வருடாந்திர பிரீமியம், புகைப்பிடிக்காதவர்களை விட 54% அதிகமாக இருக்கும், அதாவது 18,718 ரூபாயாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
புகைப்பிடிப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன?
உங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை மறைக்காதீர்கள். நீங்கள் ஆயுள் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும்போது, கடந்த 12 மாதங்களில் நீங்கள் புகையிலை பொருட்களைப் பயன்படுத்தியுள்ளீர்களா என்ற கேள்வி காப்பீட்டாளர்களால் எழுப்பப்படும் வழக்கமான ஒன்றாகும். சிலர் அதனை மூடி மறைக்க முயல்வார்கள். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவ அல்லது நிகோடின் சோதனைகள் மூலம் கண்டுபிடித்துவிடுகிறார்கள். இது உங்கள் இரத்தம் அல்லது சிறுநீர் மாதிரிகளில் நிகோடினைக் கண்டறியும். அப்படி ஒருவேளை இன்சூரன்ஸ் நிறுவனம் உண்மையை கண்டறிந்துவிட்டால் உங்கள் பாலிசி கேன்சல் செய்யப்படலாம்.
also read : ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவோருக்கு எச்சரிக்கை.. இந்த கம்பெனி பக்கமே போகாதீங்க!
ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் என்பது நல்ல நம்பிக்கையுடன் செயல்படுத்தப்படும் ஒன்றாகும், மேலும் ஆயுள் காப்பீட்டுக் பாலிசியை வாங்கும் போது நீங்கள் நல்ல நம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே கிளைம்களை கேட்டுப்பெற முடியும்.
காப்பீட்டாளர்கள் பாலிசி வழங்குதல் அல்லது உரிமைகோரல்களின் ஒப்புதலுக்கு முன் கடுமையான உண்மைச் சோதனைகளை மேற்கொள்கின்றனர்; எனவே, முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்தாதது உரிய செயல்முறையைத் தடுக்கலாம்.
டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சமித் உபாத்யாய் கூறுகையில், “பாலிசி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதால், நுகர்வோர் தேவைகளைப் புரிந்துகொள்வதற்காக ஆயுள் காப்பீட்டாளர்கள் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை கேட்கின்றனர். எனவே, உண்மைகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, பாலிசி விண்ணப்பத்தின் போது உங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இது கூடுதல் பிரீமியம் செலுத்துவதற்கு வழிவகுக்கும் என்றாலும், புகைப்பிடிக்கும் பழக்கத்தால் மரணம் நிகழும் பட்சத்தில் பாலிசிதாரர் குடும்பத்தினரின் டெத் கிளைம் நிராகரிக்கப்படும்.” என எச்சரித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.